மங்கு சனியா.... பொங்கு
சனியான்னு ரிசல்ட் வர்றப்ப தெரியும்!
தூத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டி, கிருஷ் ணன்கோயில் திடலில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு நடை பெற்றது. மாஜி மந்திரியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ, நடிகை கவுதமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், "கடந்த சில நாட்களாக எல்லா பத்திரிகைகளிலும் சனிப் பெயர்ச்சி பலன்கள் புத்தகம் போடுகிறார்கள். கிரகங் களின்படி மார்ச் 6ஆம் தேதி தான் சனிப்பெயர்ச்சி எனச் சொல்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை அரசியலில் சனிப்பெயர்ச்சி தொடங்கி விட்டது. அதனால் தான் நம்மளை பிடிச்ச கிரகங்கள் எல்லாம் மாறிப்போயி, இன்னைக்கு தி.மு.க.வுக்கு அது மங்கு சனியாக.... அ.தி.மு.க. வுக்கு பொங்கு சனியாக தமிழக தேர்தல் களம் இருக்கிறது. நம்மை பிடித்த பீடை நீங்கி டுச்சு'' என்றார். அவரது பேச்சை கேட் டுக்கொண்டிருந்த அ.தி.மு.க. நிர் வாகிகள் இருவர், தேர்தலை சந் திக்க தி.மு.க. காரங்க சூறா வளியா விறுவிறுப்பா வேலை பாக்குறாங்க. நம்ம கட்சிக்காரங்க அசையாம அங்கங்கே முடங்கிக் கிடக்குறாங்க... தேர்தல் ரிசல்ட் வர்றப்பதான் இவருக்கே மங்கு சனியா.... பொங்கு சனியான்னு தெரியப்போகுது!'' எனப் பேசியபடி நகர்ந்தனர்.
வேஷ்டி சேலை வழங்குவதில் பாரபட்சம்?
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களைக் கவருவதற்காக வேஷ்டி சேலை, ஹாட்பாக்ஸ், அண்டா, வாளி உள்ளிட்ட பொருட்களை வீடு தோறும் வழங்கும் பழக்கத்தை துவக்கியது அ.தி.மு.க. ஆளுங் கட்சி அமைச்சர்களின் ஆதர வாளர்களும் இதே பாணியை கையிலெடுத்துள்ளனர். ஆனால் அது சர்ச்சையில் முடிந்திருப்பது தான் வேதனையே! திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின் னாளப்பட்டி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளிலும் துணை முதல் வர் உதயநிதி உருவம் பொறித்த அண்டாக்கள், பாரபட்சமின்றி ஒன்றிய செயலாளர் முருகேசன் ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டது. அதுபோல், அமைச்சர் ஐ.பெரிய சாமியும் பாராபட்சமில்லாமல் வேஷ்டி, சேலைகளை வழங்க உத்தரவிட்ட தகவல் தொகுதி முழுக்க பரவியது. இந்நிலையில், 12ஆவது வார்டில் மட்டும் கவுன்சிலர் காமாட்சியின் கணவர் கோபி, குறிப்பிட்ட சில தி.மு.க. வினருக்கு மட்டும் வேஷ்டி சேலை களை வழங்கியது சர்ச்சையாகி யுள்ளது. ஒருசில கவுன்சிலர்களின் தவறால், அமைச்சர் மீதான நல்லெண்ணம் குறைய வாய்ப் புள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனைப்படுகிறார்கள்.
இது என்ன தர்ம சத்திரமா? விரட்டிய மா.செ!
கோவை சூலூர் தொகுதி யில், சாம்பளாபுரம் 4வது வார்டு பேரூராட்சிக்கு உட்பட்ட 27 வயது பெண் ஒருவருக்கு, கைகள், கால்களில் ஏற்படும் தசை பலவீன நோய் உருவாகி இடுப்புப் பகுதி சிதிலமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஃஙஈஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆஸ்ரீண்ய்ங்ற்ர்க்ஷஹஸ்ரீற்ங்ழ் க்ஷஹன்ம்ஹய்ய்ண்ண் நோய்த்தொற்று கண்டறியப் பட்டு, ஒரு ஊசிக்கு மட்டும் ரூ.12 ஆயிரம் செலவாகுமென்று நிர்வாகம் அறிவுறுத்தியது. அருந்ததிய சமூகத்தினைச் சேர்ந்த தாங்கள் கூலி வேலை பார்ப்பதால் அந்தளவிற்கு பணம் புரட்ட இயலாது என தி.மு.க. கூட்டணிக்கட்சியின் மா.செ. ஒருவரை அணுக, அவரோ, தன்னாலான உதவி களை செய்துவிட்டு, தி.மு.க.வின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேச னை சென்று பாருங்களென்று அனுப்பி வைத்துள்ளார். அவரோ, ஆறுதல் கூட கூறாமல், "நான் என்ன மடமா கட்டி வைத்திருக்கின்றேன்?'' என்று நோயாளியை விரட்டி யடித்தது அருந்ததிய மக்க ளிடம் விவாதப்பொருளாகி யுள்ளது.
ஒண்ணும் செய்யமுடியாது! கண்ணை கசக்கும் தளவாய்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/election2-2026-03-03-11-19-04.jpg)
குமரி மாவட்டம், பத்ம நாபபுரம் தொகுதியை கண் வைத்து அ.தி.மு.க மேற்கு மா.செ. ஜெயசுதர்சன் கடந்த 4 மாதங் களாக மூலை முடுக்கெல்லாம் சுற்றி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், அந்த தொகுதி பா.ஜ.க.வுக்கு தான் என்று ஓரளவு முடிவாகியிருப்ப தாகக் கூறப்படும் நிலையில், பதறிப்போன ஜெயசுதர்சன், தளவாய்சுந்தரத்திடம் சென்று "அண்ணே, நான் மா.செ., ஆனதிலிருந்து அந்த தொகுதி யை எனக்கு சாதகமாக்கி வைத்திருக்கிறேன்''’என்று கண்ணை கசக்கியிருக்கிறார். தளவாய்சுந்தரமோ, “"இதில் ஒண்ணுமே என்னால் செய்ய முடியாது உனக்கு கடவுள் ஆசியும் தலையெழுத்தும் நல்லா இருந்தா உனக்கு சீட் கிடைக்கும். என்னையே கண்ணை கசக்க வைக்கிறாங்க பா.ஜ.க.வினர். இதை நான் யார் கிட்ட போய் சொல்ல''’என்று, பா.ஜ.க. கேட்கும் 4 தொகுதியை சேர்ந்த சீட் கனவிலிருக்கும் அ.தி.மு.க. வினரிடம் தளவாய்சுந்தரம் புலம்பிவருகிறாராம்.
முத்துக்குமாரை மறந்த நாம் தமிழர்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/election3-2026-03-03-11-40-03.jpg)
நாம் தமிழர் கட்சி உரு வானபோது சீமானை மட்டு மின்றி நடிகர் மணிவண்ணன் உள்பட நிறைய தமிழர்களை ஊர்ஊராக அழைத்துச்சென்று கூட்டம் போட்டவர் புதுக்கோட் டை முத்துக்குமார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுக் கோட்டை நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை ஆலங்குடி தொகுதியிலுள்ள வடகாட்டில் அவரது மாமனார் துணையோடு அடக்கம் செய்து வீரவணக்கம் செலுத்தினர். சில ஆண்டுகள் வரை முத்துக்குமார் படத்தோடு நாம் தமிழர் பதாகை வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் நினைவேந் தல் நிகழ்ச்சிகளை நடத்தினர். பிறகு முத்துக்குமார் பெயரையே மறந்துபோனார்கள். பதாகைகளில் அவர் படம் இல்லை. நினைவேந் தல் இல்லை. அவர் அடக்கம் செய்யப்பட்ட தடயமே இல்லா மல் போனது. இப்போது முத்துக் குமார் ஆதரவாளர்கள், "நாம் தமிழர் ஏன் முத்துக்குமாரை மறந்தது?'' என்ற கேள்வியை சமூக வலைத்தளத்தில் முன் னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் நாம் தமிழர் வாக்கு வங்கி அடிபடுமோவென்ற கேள்வி எழுந்துள்ளது.
-நாகேந்திரன், பகத், மணிகண்டன், மூர்த்தி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/03/election1-2026-03-03-11-18-35.jpg)