பழங்குடியின மாணவர்களின் கல்வி! -அரசு கவனிக்குமா?

ss

லைப்பகுதிகளில், தொலை தூரங்களில் வசிக்கும் பழங்குடியினத்தவரின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1998ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளை நிறுவியது. இந்த பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் பெருமளவில் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன என்று குற்றம்சாட்டுகிறார்கள் பெற்றோர்கள்.

sts

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 320 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உத்தேசமாக 30,000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேற்படி பள்ளிகளில், 210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 49 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 50க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்களும் என சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒன்றிய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009, தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த கடந்த 15-11-2011க்கு பிறகு, 2016ஆம் ஆண்டில் பெரும்பாலான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், அதன்பிறகு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் கடந்த 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 420 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டதால் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு அரசாணையை வெளியிட்டு பழங்குடி யினத்தை சேர்ந்த இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பொது விளம்பரம் மூலம் விண்ணப்பங்களை பெற்று எழுத்து தேர்வு நடத்தி, தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வது என்று ஒரு அரசாணையை

லைப்பகுதிகளில், தொலை தூரங்களில் வசிக்கும் பழங்குடியினத்தவரின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1998ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளை நிறுவியது. இந்த பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் பெருமளவில் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன என்று குற்றம்சாட்டுகிறார்கள் பெற்றோர்கள்.

sts

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 320 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உத்தேசமாக 30,000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேற்படி பள்ளிகளில், 210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 49 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 50க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்களும் என சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒன்றிய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009, தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த கடந்த 15-11-2011க்கு பிறகு, 2016ஆம் ஆண்டில் பெரும்பாலான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், அதன்பிறகு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் கடந்த 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 420 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டதால் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு அரசாணையை வெளியிட்டு பழங்குடி யினத்தை சேர்ந்த இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பொது விளம்பரம் மூலம் விண்ணப்பங்களை பெற்று எழுத்து தேர்வு நடத்தி, தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வது என்று ஒரு அரசாணையை வெளியிட்டது. சுமார் 320க்கும் மேற்பட்ட பழங்குடியின ஆசிரியர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.

stt

இவர்களின் பணி நிய மனத்துக்கு பிறகு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்ததுடன் தேர்ச்சி விழுக்காடும் அதிகரித்தது. குறிப்பாக நீட், ஓஊஊ போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிந்தது. இந்நிலையில், தொகுப்பூதிய ஆசிரியர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து விடுவித்துவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களை பொதுவிளம்பரத்தின்மூலம் பணிக்கு தேர்வுசெய்ய 02-07-2024 அன்று பழங் குடியினர் நல இயக்குனரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிக்கு ஆசிரி யர்கள் ஆர்வம்காட்டாததால், 10 சதவீத விண்ணப்பங்கள்கூட வரவில்லை. எனவே பழங்குடி யின மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் பல முறை கோரிக்கை வைத்து, அது தினசரிகளில் வெளி யானதால், மேற்படி நிர்வாகிகள் மீது நேரடியாக தமிழ்நாடு அரசு ஊழியர் நன் னடத்தை விதி களின்படி, தண்ட னைக்குரிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிடங் களை நிரப்ப நடவடிக்கை எடுக் காமல் மனம்போன போக்கில் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி, பணியிட மாறுதல், துறை மாறுதல் மற்றும் பதவி உயர்வுகள் என வழங்கியதற்கு முழுக்காரணம், இந்த பதவிக்கு பொருத்தமில்லாத அலுவலரான மத்திய தொழிலாளர் நலத்துறை அலுவலர் ச.அண்ணா துரையின் மாற்றுப்பணி நியமனமே என்கிறார்கள். கடந்த 2022ஆம் ஆண்டு திடீரென இவரை பழங்குடியினர் நல இயக்குனராக நியமித்து தமிழக அரசு ஆணை யிட்டுள்ளது. இவர் நிர்வாகக் குளறுபடிகள் செய்ததன் காரணமாகவே மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது என கூறப்படுகிறது.

sst

சங்க நிர்வாகிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்... "அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கும் பதவி உயர்வு வழங்குவதற்கும் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வு டெட் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்" என இது குறித்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பை எதிர் நோக்கியிருந்த நிலையில் ஊடகங்களில் "அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் பணி செய்தவர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், இதனால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டதாகவும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் பழங்குடியினர் நலத்துறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டுள்ளனர்' என குற்றம்சாட்டி ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக 17க்ஷ விதியின்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"தற்போதய நில வரப்படி, சுமார் 2000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதை 2024 -25 கல்வி யாண்டு தொடங்குவதற்கு முன்பே நிரப்ப வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர்கள் விடுதிக் காப்பாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு தொடர்ந்து பல வகைகளில் கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் காலம்தாழ்த்திவந்த நிலையில், இச்செய்தி ஊடகங்களில் வெளிவரக் காரணமாக இருந்ததாகக் கூறி, சங்கத்தை சேர்ந்த விடுதிக் காப் பாளர்களான விவேக், சுதாகர், சங்கர சபாபதி ஆகி யோர்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள னர். இது கல்வியாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தை பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பெற்றுள்ள தற்கு ஒப்பந்த ஆசிரியர்களே பெரும் காரணம். அப்படிப்பட்டவர்களை அரசு வீட்டுக்கு அனுப்பியது மிகப்பெரும் ssதவறு. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் செய்தால் போராட்டத்தில் இறங்குவோம்" என்று அறிவுச் சமூகம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ். கூறுகையில், "பழங்குடியினர் நலத்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப் படாமல் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே பணி புரிந்துவருகிறார். பல பள்ளிகளில் ஆசிரி யரே இல்லை. இதனால் பழங்குடி மாண வர்களின் கல்வி உரிமை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அவல நிலையை போக்க கோரி அரசுக்கு கோரிக்கை வைத்த சங்க நிர்வாகிகள் மீது பெரும் தண்டனைக்குரிய குற்றமாகக்கூறி அவர்களின் குரல் வளையை நெரிப்பது ஜனநாயக விரோதம். பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறைக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஒருவரை இயக்குனராக நியமிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறுகையில், "ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள தால் பழங்குடியினர் குடும்பத்தின் பிள்ளைகளின் கல்வித்திறன் குறையும். அவர்களின் எதிர்காலம் மீதான அக்கறையில், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை ஆசிரியர்கள் காப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்து அரசின் கவனத் திற்கு கொண்டு சென்றதற்காக அவர்கள் மீது பழங்குடியினர் நலத்துறை, குற்றக் குறிப்பாணை வழங்கியுள்ளது. நியாயமான கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்த சங்க நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் மிரட்டுவது சரியா? சர்வாதிகாரப்போக்கு ஏன்?'' என்று கேள்வியெழுப்புகிறார்.

அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர் உட்பட அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இந்த கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வரும் நிலையில் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று கருதினால் அரசு உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக் காப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது எடுத்த நடவடிக்கையை கைவிட வேண்டும். அவர்கள் தங்கள் சொந்தக் கோரிக்கைக்காக போராடவில்லை. நலிவுற்ற நிலையிலுள்ள பிள்ளைகளின் கல்வி மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டுள்ள னர் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்'' என்று இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு இந்த கல்வி விஷயத்தில் அதை செயல்படுத்தி காட்டுமா என்கிறார்கள் கல்வியாளர்கள்.

nkn270724
இதையும் படியுங்கள்
Subscribe