மிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, "மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம்' என்கிற பயணத்தை மேற்கொண்டுவரும் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் மனநிலையை உள்வாங்கி அதன் மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க எண்ணி, திடீர் திருப்பமாக, கடந்த மாத இறுதியில் தன்னுடைய மகன் மிதுனை அனுப்பி சசிகலாவுடன் ரகசிய சந்திப்பை நடத்தியுள்ளார். 

Advertisment

இந்த ரகசிய சந்திப்புக்கு அப்படியென்ன அவசியம் என்ற கேள்விக்கு பதிலாகப் பல செய்திகள் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்குள்ளே பல சிக்கல்கள் நிலவிவருகிறது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் கனவு நிறைவேற வேண்டுமானால் பா.ஜ.க. கூட்டணியை கைகழுவி, புதிய கூட்டணியை அமைத்தால் மட்டுமே அது சாத்தியம். இல்லையென்றால் அது கனவாகவே இருக்கும் என்பதே மூத்த நிர்வாகிகளின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்தால் மட்டுமே நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கக்கூடும். அதிலும், ஜெ.வின் ஆளுமையில் சசிகலாவுக்கு பங்குண்டு. அந்த பலம் நமக்கு இருந்தால் நிச்சயம் மேலும் பல வியூகங்களை நம்மால் கட்டமைக்க முடியும் எனப் பலமுறை மூத்த நிர்வாகிகள் எடப்பாடியிடம் எடுத்துச்சொல்லியும், சசிகலா கட்சிக்குள் வந்தால் நமது எதிர்காலம் காலி என்பதை மனதில்கொண்டு பிடிவாதமாக மறுத்துவந்தார் எடப்பாடி. 

ஏற்கெனவே தன் மகனின் ஆசைக்காக தனி விமான நிறுவனத்தை கொண்டுவரத் திட்டமிட்டு, டெல்லி லாபி மூலமாக அதை முன்னெடுத்த போதுதான் விசயம் கசிந்து அமித்ஷா காதுக்கு  செல்லவே, எடப்பாடி உறவினர்களின் வீடுகளுக்கு ஈ.டி. ரெய்டு விடப்பட்டது. ரெய்டின்போது எடப்பாடி மகன் அனைத்து விவரங்களையும் வாக்குமூலமாகக் கொடுக்க, எடப்பாடியும் அவரது மகனும் கைதாகும் சூழல் உருவானது. உடனடியாக எடப்பாடி தரப்புக்காக திரிவேணி குழும உரிமையாளர், ஒன்றிய அரசோடு பேசி, கைது நடவடிக்கையிலிருந்து தப்பவைத்தார். அதேபோல, கொடநாடு வழக்கில் ஒட்டுமொத்த மாஸ்டர் பிளானையும் செய்தது மிதுன் தான் என்பதற்கான முழு ஆதாரத்தையும், சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் வரையிலும் அப்போதைய விசாரணை அதிகாரியாக இருந்த சுதாகர் கைப்பற்றி சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத் துள்ளார். 

sasi1

Advertisment

இந்நிலையில், ‘அ.தி.மு.க. எதிர்பார்த்த கூட்டணி நிச்சயம் அமையும், அது பா.ஜ.க. உடனான கூட்டணி கிடையாது’ எனப் பேசிவந்த எடப்பாடிக்கு அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளை வைத்து செக் வைத்தார் அமித்ஷா. அதுக்கும் எடப்பாடி பிடிகொடுக் காமல் நழுவ, எடப்பாடியின் மகன் மீதான இரண்டு முக்கிய வழக்கு விவகாரங்களை அமித்ஷா கையிலெடுத்து தேர்தல் நேரத்தில் அவரை ஆட்டிப்படைத்து வருகிறாராம். 

இந்த சூழ்நிலையில்தான், எடப்பாடியை தவிர்த்து அனைவரும் ஒட்டுமொத்தமாக சசிகலாவிடம் மறைமுகத் தொடர்பில் இருப்பதாகவும், அந்த வகையில்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொடநாட்டில், அ.தி.மு.க. சார்ந்த முக்கிய மூத்த நிர்வாகிகள் சந்தித்து இது தொடர்பாக பேசியதாக சொல்லப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக எடப்பாடியை தவிர்த்து அனைவருமே ஒன்றுகூடியிருக்கும் சூழலில், நிச்சயம் ஓ.பி.எஸ்.ஸுக்கு நடந்த சம்பவத்தை நமக்கே மீண்டும் நினைவூட்டும் வகையில் செய்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில், சசிகலாவை நாமே சந்தித்து பேசிவிடலாம் என்கிற யோசனையை முன்வைத்து, தன் மகன் மிதுனை கடந்த மாத இறுதியில் சந்திக்க அனுப்பியுள்ளார் எடப்பாடி. 

சசிகலாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய மிதுன், "தற்போது அ.தி.மு.க. சார்பாக நடக்கும் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' பிரச்சாரப் பயணத்தில் நீங்களும் கலந்துகொண்டு, அப்பாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசுங் கள், மற்றபடி நீங்கள் கேட்டபடியே கட்சி உங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும் என அப்பா சொல்லச் சொன் னார்" எனச்சொல்ல, அதற்கு சசிகலா வோ, "முதலில் நீ வருவதை நிறுத்திவிட்டு அவரை வரச்சொல். கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை என்னிடமே ஒப்படைக்கச்சொல். மற்றதையெல்லாம் அப்புறம் பார்ப்போம். இதுகுறித்து அவர் இந்த மாத இறுதிக்குள் முடிவெடுக்க வில்லை என்றால், செட்டம்பர் மாத முதல் வாரத்தில் ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து, உங்க அப்பா மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வரும்" எனத் திட்டவட்டமாகப் பேசி அனுப்பியுள்ளார். 

Advertisment

ஏற்கெனவே முதலில் ஓ.பி.எஸ். சசிகலாவை சந்தித்துப்பேசிய நிலையில், அதற்கு முன்பாக மறைமுகமாக கொடநாட்டில் சந்தித்துப் பேசிய அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் என அனைத்தையும் பார்த்து, ஏதோ திட்டமிடலை செய்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்துகொண்ட எடப்பாடி, அனைத்துப் பக்கத்திலிருந்தும் தனக்கு எதிராகக் காற்று சுழன்றடிக்கும்போது என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நிற்கிறாராம்.  அ.தி.மு.க.வில் ஏதேனும் மாற்றத்தை கட்டமைக்கப் போகிறார்களா, இல்லை மீண்டும் தேர்தல் நேரத்திலே சிக்கலை உண்டாக் கப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

-சே 

படங்கள்: ஸ்டாலின்