அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல நாடக சீன்கள் அரங்கேறி வருகிறது. எடப்பாடி இந்தக் கூட்டணி தொடர்பாக கடந்த 15 நாட்களாக தனது சம்மதத்தை தெரிவிக்காமலே இருந்தார். அமித்ஷா சிவராத்திரி விழாவுக்கு தமிழகம் வந்தார். அப்போது அவரை சந்திக்க வருமாறு எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எடப்பாடி அதை மறுத்தார்.
அடுத்ததாக கேரள மாநில முன்னாள் ஆளுநர் சதாசிவம் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் திரிவேணி எர்த் மூவர்ஸ் மற்றும் எடப்பாடியின் சம்பந்தி ராமலிங்கம் ஆகியோர் செய்துவரும் தொழிலில் ஏற்பட்டுள்ள விதிமீறல்கள் பற்றி பெரிதாக விவாதிக்கப்பட்டுள்ளது. பனியன் தொழில் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்களில் லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ள எடப்பாடியின் முதலீடுகளை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.
"கூட்டணிக்கு வா.. இல்லையென்றால் நடவடிக்கை பாயும்'’என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பா
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல நாடக சீன்கள் அரங்கேறி வருகிறது. எடப்பாடி இந்தக் கூட்டணி தொடர்பாக கடந்த 15 நாட்களாக தனது சம்மதத்தை தெரிவிக்காமலே இருந்தார். அமித்ஷா சிவராத்திரி விழாவுக்கு தமிழகம் வந்தார். அப்போது அவரை சந்திக்க வருமாறு எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எடப்பாடி அதை மறுத்தார்.
அடுத்ததாக கேரள மாநில முன்னாள் ஆளுநர் சதாசிவம் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் திரிவேணி எர்த் மூவர்ஸ் மற்றும் எடப்பாடியின் சம்பந்தி ராமலிங்கம் ஆகியோர் செய்துவரும் தொழிலில் ஏற்பட்டுள்ள விதிமீறல்கள் பற்றி பெரிதாக விவாதிக்கப்பட்டுள்ளது. பனியன் தொழில் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்களில் லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ள எடப்பாடியின் முதலீடுகளை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது.
"கூட்டணிக்கு வா.. இல்லையென்றால் நடவடிக்கை பாயும்'’என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பாடி தனது ஸ்டைலை மாற்றிக் கொண்டார். ‘"தி.மு.க.தான் எங்களுக்கு எதிரி. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்'’என மாற்றிப் பேச ஆரம்பித்தார். இருந்தபோதும், பா.ஜ.க.வின் கூட்டணி அசைவுகளுக்கு ஏற்றபடி எடப்பாடி அசையவில்லை என்பதால் செங்கோட்டையனை கையில் எடுத்தார்கள் பா.ஜ.க. வினர். தமிழகத்திலுள்ள சிலர் மூலம் ஆரம்பத்திலிருந்தே நிர்மலா சீதாராமன் செங் கோட்டையனை ‘ஆபரேட்’ செய்துவருகிறார். செங் கோட்டையன் மூலம் கட்சிக்குள் ஒற்றுமை -பிரிந்தவர்களை சேர்ப் பது -சசிகலா ஆதரவு இவையெல்லாம் நிர்மலா சீதாராமனின் ஆபரேஷ னின் விளைவுகள்.
இந்நிலையில் எடப்பாடிக்கு எதிராக ஒரு முக்கியமான ஆதாரம் ஒன்றை அமலாக்கத்துறை திரட்டியது. அமலாக்கத் துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் எடப்பாடி குறித்த ஆதாரங்கள், அவரது முதலீடுகள் அதில் நடைபெறும் முறை கேடுகள் எல்லாவற்றையும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு டீம் பைல் பைலாக எடுத்து அமலாக்கத்துறைக்கு கொடுத்தது. இதில் எடப்பாடியின் உறவினரான தங்கமணி, "நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை'’என்று ஒதுங்கிக்கொண்டார். எடப்பாடியின் ஊழல் பைல்கள் மூச்சுமுட்டும் அளவிற்கு ஒன்றிய அரசின் கையில் ஒப்படைக்கப்பட்டது. அதில் முக்கியமானது எடப்பாடியின் மகன் மிதுன் ஏழரைக் கோடி ரூபாய் அளவிற்கு செய்த முறைகேடு.
இந்த முறைகேட்டை அமலாக்கத்துறை ஒரு வழக்காக மாற்றியது. அதில் மிதுனையும், சம்பந்தி ராமலிங்கத்தையும் கைது செய்வதற்கான வேலைகள் வேகம் பெற்றன. இந்த தகவல் மிதுனை சென்றடைந்தவுடன் ‘"என்னை கைது செய்தால் நான் உயிரோடு இருக்கமாட்டேன்'’என எடப்பாடியிடம் சொல்ல, டென்ஷனான எடப்பாடி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு தனியாக டில்லிக்கு பயணமானார்.
அமித்ஷாவை தனியாக சந்திப்போம் என நினைத்த எடப்பாடிக்கு, "தனியாக சந்திக்க வேண்டாம். கூட்டணி பற்றி பேசுவதென்றால் வாருங்கள்'’என அமித்ஷா அழைப்புவிடுத்தார். உடனே சட்டசபை கூட்டத்திலிருந்த வேலுமணி, வீட்டிலிருந்த கே.பி.முனுசாமி டெல்லியிலிருந்த சி.வி.சண்முகம் ஆகியோரையும் அழைத்தார். மிதுன் விவகாரத்தை ரகசியமாக பேசிக் கொள்ளலாம் என முதலில் தனியாகச் சென்ற எடப்பாடி, பத்திரிகையாளர்கள் ஃபாலோ செய்வதால் மூன்று கார்களை மாற்றி மாற்றி அமித்ஷாவை சந்திக்கச் சென்றார். அமித்ஷா ஒரு மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய ஒரு டீமோடு சந்திப்பை நடத்தினார். அதில் எடப்பாடிக்கு எதிரான ஆவணங்களை அமித்ஷா எடுத்துப்போட்டதை பார்த்த எடப்பாடி வாயடைத்துப் போனார். "எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் கூட்டணியை இப்பொழுது அறிவிக்க வேண்டாம்'’என்ற எடப்பாடியின் சொல்லை மீறி அமித்ஷா அ.தி.மு.க.வுடன் கூட்டணி என டிவிட்டரில் செய்தி வெளியிட்டார்.
சென்னைக்கு வந்த எடப்பாடி ஓ.பி.எஸ்.ஸை சேர்க்க முடியாது எனப் பேச டென்ஷனான நிர்மலா, செங்கோட் டையனை டெல்லிக்கு வரவைத்தார். அவருக்கு வ பிரிவு பாதுகாப்பு என செய்தி வரவைக்கப்பட்டது.
நிர்மலாவையும், அமித்ஷாவையும் சந்தித்த செங்கோட்டையனை ‘"இவர் ஒரு காற்றடைத்த பலூன்'’ என கமெண்ட் அடித்து, "இவருக்கு வ பிரிவு பாதுகாப்பா?'’ என அமித்ஷா சிரித்திருக்கிறார். இப்படித்தான் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி அமைந்து வருகிறது''’என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
"செங்கோட்டையன் சென்றது எனக்கு தெரியாது' என எடப்பாடி பதிலளிக்கிறார். "அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்கும்' எனச் சொன்னதாலேயே, மலைச்சாமி என்கிற எம்.பி.யை கட்சியை விட்டுத் தூக்கியடித்தார் ஜெ. ஆனால், செங்கோட்டையன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் கதறு கிறார் எடப்பாடி”என்கிறார்கள் அ.தி.மு.க. வினர். "அ.தி.மு.க. என்பது முழுவதுமாக பா.ஜ.க.வாக உருமாறிவிட்டது. இனி மாவட்டச் செயலாளர் மாற்றம் என்றாலும் டெல்லி உத்தரவு வரவேண்டும்' என் கிறார்கள். இதற்கிடையே பா.ஜ.க. மாநிலத் தலைவரை மாற்றும் வேலைகள் வேகம் பெற ஆரம்பிக்க பா.ஜ.க. மா.த.வின் புலம்பல் சத்தங் கள் வெளியே கேட்க ஆரம்பித் துள்ளது.