Advertisment

எடப்பாடியின் பதவிக்கு ஆபத்து! லகானை எடுக்கும் மோடி!

eps

.தி.மு.க.வின் எழுச்சி மாநாட்டை பிரமாண்டமாக எடப்பாடி நடத்தி முடித் திருக்கும் நிலையில், சத்தமில்லாமல் அவருக்கு எதிரான சிக்கல்கள் டெல்லியில் உருவாகியிருக்கிறது. எடப்பாடியின் லகான் மீண்டும் மோடியின் கைகளுக்குப் போகிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

Advertisment

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த ஆண்டு வெடித்தது. இந்த நிலையில்தான் அ.தி. மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டி, பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துவது என்கிற தீர் மானம் நிறைவேற்றப்பட்டு தேதியும் குறிக்கப்பட்டது.

Advertisment

55

இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். உள்ளிட்ட பல் வேறு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்யப்பட்டு, அங்கு எடப்பாடி பழனிச் சாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், பொதுக் குழுவின் தீர்மானம் செல்லும் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது.

இதனை

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அ.தி. மு.க.வின் பொதுச்செய லாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என சட்டவிதிகளின் படி தலைமைத் தேர்தல் ஆணை யத்துக்கு கடிதம் எழுதினார் எடப்பாடி பழனிச் சாமி.

ஆனால் இத னை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணை யத்தில் முறையிட்டார் ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையமோ இதனைப் புறக்கணித்தது. மேலும், பொதுச்செயலாளராக எடப்பாடிபழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்து அதனை தனது இணையதளத்திலும் பதிவேற்றம் செய்தது தலைமைத் தேர்தல் ஆணையம்.

இதனால் அதிர்ச்சியடைந்ததுடன், சீச்சீ…இந்த பழம் புளிக்கும் என்கிற பாணியில் இனியும் எடப்பாடியோடு மல்லுக்கட்டுவது தனக்கான அரசியலுக்கு சாதகமாக இருக்காது என்கிற முடிவை எடுத்தார் ஓ.பி.எஸ். அவரது ஆதரவாளர்களும் சோர்ந்துபோனார்கள். டெல்லியை நம்பி மோசம் போனோம் என்று பா.ஜ.க. தலைமையை திட்டித்தீர்க்கும் அளவுக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சோர் வானார்கள். ஒரு கட்டத்தில், எடப்பாடியின் ஆதிக்கத்தையும் அரசியலையும் தடுக்க வேண்டுமென்பதற்காக, டி.டி.வி. தினகரனோடு கைகோர்த்துக்கொண்டார் ஓ.பி.எஸ்.

இந்த நிலையில்தான், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு, எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்தல்dd ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. சுரேன் பழனிச்சாமி இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். அதில், "பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தவறு. ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்'’என்று வலியுறுத்தினர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருஷேந்திர குமார், இந்த மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத் துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கடந்த 18-ந் தேதி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருக்கும் பதில், எடப்பாடி தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விசயங்கள் மீண்டும் ஓ.பி.எஸ். தரப்பை உற்சாகத்திலும், எடப்பாடி தரப்பினரை அதிர்ச்சியிலும் தள்ளியிருக்கிறது.

இது குறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளரும் வழக்கறிஞருமான பெங்களூர் புகழேந்தியிடம் பேசியபோது, "தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனு, சில உண்மைகளைச் சொல்லியிருக்கிறது. அதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்தே எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செய லாளராக அங்கீகரித்திருக்கிறோம். அதேசமயம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மூல வழக்குகளில் தீர்ப்பு வரும்போது அதனை தேர்தல் ஆணையம் பின்பற்றும். உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்பதை ஆணையம் உணர்ந்துள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் முடிவில் வரும் இறுதி தீர்ப்புதான் அ.தி.மு.க.வின் தலைமையை நிர்ணயிக்கும் என தேர்தல் ஆணையத் தின் செயலாளர் ஜெயதேவ் லகரி ஏற்கெனவே தெரி வித்திருக்கிறார். அதனை உறுதிசெய்யும் வகையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனு இருக் கிறது. அதனால், அ.தி.மு.க. மீண்டும் இரட்டை தலை மைக்குள் வரும்''‘என்கிறார் மிகஅழுத்தமாக.

இதுகுறித்து மேலும் நாம் விசாரித்த போது, "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியை கட்டமைக்க அண்ணாமலை முயற்சித்தாலும், அ.தி.மு.க.வின் வாக்குவங்கியை கபளீகரம் செய்வதில் முனைப்பாக இருக்கிறது பா.ஜ.க. தலைமை. ஆனால், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாள ராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப் பதை வைத்து, பா.ஜ.க.வுடனான கூட்டணி வேண்டாம் என்கிற முடிவை தேர்தல் நெருக்கத்தில் எடப்பாடி எடுப்பார் என தெரிகிறது.

அதனால்தான், பா.ஜ.க. தலைமை, எடப்பாடியின் அதிகாரத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை உசுப்பிவிட்டு, இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பதில் மனுத்தாக்கல் செய்ய வைத்திருக்கிறது. அதனால், மோடி-அமீத்சாவின் விருப்பத்துக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தல் அரசியலை எடப்பாடியால் எடுக்க முடியாது. மீறி எடுத்தால் அவரது பொதுச்செயலாளர் பதவிக்கு சிக்கல் உருவாகும்'' என்கிறார்கள் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள்.

nkn230823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe