மோடியை வளைக்க எடப்பாடி திட்டம்! பலிக்குமா?

புதுப்பிக்கப்பட்டது
eps-modi

 

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி உறுதியாகப் பிணைக்கப் பட்டுவிட்ட நிலையிலும், "எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர்' என அழுத்தம்திருத்தமாகக் கூற மறுத்துவருகிறார் அமித்ஷா.

இந்தநிலை இப்படியே தொடர்ந்தால் தொண்டர்களின் அதிருப்தி காரணமாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பள்ளத்தில் விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சர்வே ரிப்போர்ட்டுகள் வருகின்றன. அதை மாற்றுவதற்காக தீவிர முயற்சி எடுத்துவருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆகவேதான், தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைவதற்கு முன்பே முதல் ஆளாக களத்திலிறங்கி மக்களையும் தொண்டர்களையும்  சந்தித்து வருகிறார் எடப்பாடி.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கொங்கு மண்டலமும், தென்மண்டலமும்தான் அ.தி.மு.க.வின் பலம். ஆனால், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள்... கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தில் ஓட்டையைப் போட்டு, தென்மண்டலத்தையும் சிதறியடித்துவிட்டது. போதாக்குறைக்கு ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் போன்றோரின் தனி ஆவர்த்தனம் வேற

 

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி உறுதியாகப் பிணைக்கப் பட்டுவிட்ட நிலையிலும், "எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர்' என அழுத்தம்திருத்தமாகக் கூற மறுத்துவருகிறார் அமித்ஷா.

இந்தநிலை இப்படியே தொடர்ந்தால் தொண்டர்களின் அதிருப்தி காரணமாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பள்ளத்தில் விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சர்வே ரிப்போர்ட்டுகள் வருகின்றன. அதை மாற்றுவதற்காக தீவிர முயற்சி எடுத்துவருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆகவேதான், தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைவதற்கு முன்பே முதல் ஆளாக களத்திலிறங்கி மக்களையும் தொண்டர்களையும்  சந்தித்து வருகிறார் எடப்பாடி.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கொங்கு மண்டலமும், தென்மண்டலமும்தான் அ.தி.மு.க.வின் பலம். ஆனால், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள்... கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தில் ஓட்டையைப் போட்டு, தென்மண்டலத்தையும் சிதறியடித்துவிட்டது. போதாக்குறைக்கு ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் போன்றோரின் தனி ஆவர்த்தனம் வேறு. இந்த பிளவை சரிப்படுத்த திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, கொங்கு மண்டலமான கோவையிலிருந்து தனது ‘"மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்!'’ சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தில், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்களை சந்தித்துவரும் அவர், தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் தென்மாவட்டங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சுற்றுப்பயணம்  அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை. டெல்டா மாவட்டத்தில் பல இடங்களில் கூட்டம் எதிர்பார்த்ததைவிட மிக மிகக்குறைவாகவே இருந்தது.

வருகிற 27-ம் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில்  பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்திற்கு வருகை தரவுள்ள பிரதமரைச் சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.  

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மறுத்துவரும் நிலை யில், தன்னுடைய தலை மை கைவிட்டுப் போய் விடக்கூடாது என்பதற் காகவே பிரதமரைச் சந்திக்க எடப்பாடி தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசியலில் தனக்குள்ள அங்கீ காரத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எடப் பாடி பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டத்தை கூட்டி தன்னுடைய செல்வாக்கைக் காட்ட தொடர்ந்து முயற்சி செய்துவருவதாகக் கூறுகிறார்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள். தன்னுடைய செல்வாக்கை பிரதம ருக்கும், பா.ஜ.க.விற்கும் உறுதிப்படுத்துவதற் காகவே பகீரத பிரயத்தனம் செய்துவருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

தற்போது, கிராமங்கள்தோறும் பூத் கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கமிட்டியிலுள்ள 9 நிர்வாகிகளும் கட்டாயம் தங்களுடைய குடும்பத்துடன் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் தலைக்கு ரூ.200 வீதம் நிர்ணயித்து பெண்களுக்கு கூடுதலாக ஒரு சேலையும் வழங்கப்பட்டுவருகிறது. 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெரிய அளவில் பணம் சம்பாதித்த அமைச்சர்கள்தான், தற்போது இந்த பிரச்சாரத்திற்கு செலவு செய்து வருகின்றனர். அதேசமயம், பெரிய அளவில் பணமில்லாத மாவட்டங்களுக்கு எஸ்.பி.வேலு மணி நேரடியாகச் சென்று அவர்களுக்கு தேவையான பணத்தைக் கொடுக்கவும், பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டிவருகின்றனர். விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கடலூரில் சம்பத், நன்னிலம் காமராஜ், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் என்று அந்தந்த மாவட்டங்களில் யாரெல்லாம் மிகவும்    பலம் வாய்ந்தவர்களாக உள்ளார்களோ, அவர்கள் அந்தந்த மாவட்டத்தில் ஆட்களைச் சேர்ப்பதற்குத் தேவையான செலவினங் களை பார்த்துக்கொள் கின்றனர். 

அப்படியிருந்தும், எதிர்பார்த்த கூட்டம் பல இடங்களில் மிஸ்ஸானதில் படுவருத்தத்தில் இருக்கிறாராம் எடப்பாடி. தவிரவும் மோடியைச் சந்திக்கும்போது, மக்கள் செல்வாக்கும், தொண் டர்களின் ஆதரவும் தனக்கே இருப்பதாகவும், எனவே எடப்பாடி பழனிச்சாமிதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக இருப்பார் எனவும் உறுதிபடக் கூறவேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவிருக்கிறாராம். 

ஆனால், பிரதமர் இவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குவாரா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில்... எடப்பாடி பழனிச்சாமியின் கனவு பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

_____________
தமிழகத்தில் மோடி!

ரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். வருகின்ற 26-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, இரவு திருச்சிக்கு வந்து ஓய்வெடுக்கிறார். மீண்டும் 27-ஆம் தேதி காலை 11 மணியளவில் திருச்சியி லிருந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவுள்ளார். 

சுமார் மூன்றுமணி நேரம் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி கலை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, ஆதீனங்கள் மற்றும் சாதுக்களை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

nkn260725
இதையும் படியுங்கள்
Subscribe