""ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் ரிலீஸ்னு டெல்லித் தரப்பில் இருந்து சிக்னல் கிடைச்சதால், சசிகலா தரப்பிடம் அதிக உற்சாகம் தெரியுது.''
""ஆமாம்பா. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவுக்குன்னு நாம பேசி, நம்ம நக்கீரனில் வெளியான செய்தி அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள்வரை விவாதத்தைக் கிளப்பியிருக்கு.''’
""அதேநேரத்தில், சசிகலா சைடில் கவனமா காய் நகர்த்துறாங்க. அ.தி.மு.க.வில் சசிக்கு எதிரான மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ்.சையும் முக்குலத்தோர் லாபி மூலம் அவர் தரப்பு தங்கள் பக்கம் வளைச்சிடுச்சாம். எடப்பாடியிடமும் தினகரனிடமும் கைகட்டி நிக்கிறதுக்கு சசிகலா எவ்வளவோ மேல்ங்கிற மனநிலைக்கு ஓ.பி.எஸ்.சும் வந்துட்டாராம்.''
""சிறை தண்டனையோடு 10 கோடி அபராதமும் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டதே.. அதைக் கட்டினால்தானே ரிலீஸ்?''
""சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பைத் தான் ஏற்கவில்லை என்று காட்டத்தான், அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி அபராதத்தை அவர் கட்டலையாம். சீராய்வும் மனு மூலம், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உடைத்துவிட்டால், தேர்தலில் நிற்பதற்கும் தனக்கு தடை இருக்காதுன்னு சசிகலா நினைக்கிறாராம். சசியின் முதல்வர் கனவு இன்னும் கலையலைன்னு மன்னார்குடித் தரப்பே சொல்லுது.''
""சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கே?''
""இந்த அறிவிப்பால், பதவி உயர்வுக்குக் காத்திருந்த அரசு ஊழியர்களும், புதிய வேலை வாய்ப்புக்காகக் காத்திருந்த இளைஞர்களும் அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க. கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் வயது வரம்பு நீட்டிப்பு பொருந்தாதாம். மே கடைசியில்
""ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் ரிலீஸ்னு டெல்லித் தரப்பில் இருந்து சிக்னல் கிடைச்சதால், சசிகலா தரப்பிடம் அதிக உற்சாகம் தெரியுது.''
""ஆமாம்பா. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவுக்குன்னு நாம பேசி, நம்ம நக்கீரனில் வெளியான செய்தி அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள்வரை விவாதத்தைக் கிளப்பியிருக்கு.''’
""அதேநேரத்தில், சசிகலா சைடில் கவனமா காய் நகர்த்துறாங்க. அ.தி.மு.க.வில் சசிக்கு எதிரான மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ்.சையும் முக்குலத்தோர் லாபி மூலம் அவர் தரப்பு தங்கள் பக்கம் வளைச்சிடுச்சாம். எடப்பாடியிடமும் தினகரனிடமும் கைகட்டி நிக்கிறதுக்கு சசிகலா எவ்வளவோ மேல்ங்கிற மனநிலைக்கு ஓ.பி.எஸ்.சும் வந்துட்டாராம்.''
""சிறை தண்டனையோடு 10 கோடி அபராதமும் சசிகலாவுக்கு விதிக்கப்பட்டதே.. அதைக் கட்டினால்தானே ரிலீஸ்?''
""சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பைத் தான் ஏற்கவில்லை என்று காட்டத்தான், அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி அபராதத்தை அவர் கட்டலையாம். சீராய்வும் மனு மூலம், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உடைத்துவிட்டால், தேர்தலில் நிற்பதற்கும் தனக்கு தடை இருக்காதுன்னு சசிகலா நினைக்கிறாராம். சசியின் முதல்வர் கனவு இன்னும் கலையலைன்னு மன்னார்குடித் தரப்பே சொல்லுது.''
""சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கே?''
""இந்த அறிவிப்பால், பதவி உயர்வுக்குக் காத்திருந்த அரசு ஊழியர்களும், புதிய வேலை வாய்ப்புக்காகக் காத்திருந்த இளைஞர்களும் அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க. கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் வயது வரம்பு நீட்டிப்பு பொருந்தாதாம். மே கடைசியில் மட்டும் ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் ஓய்வு பெற இருந்தாங்க. இவர்களுக்குக் குறைந்த பட்சம் தலா 15 லட்சம் முதல் 40 லட்ச ரூபாய் வரை எடப்பாடி அரசு செட்டில்மெண்டு செய்தாகனும். அதாவது மொத்தமா, ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய். இந்த நிதிச்சுமையில் இருந்து தப்பிக்கத்தான் இப்படியொரு திட்டத்தை அறிவித்தாராம் எடப்பாடி.''
""நிதி தள்ளாட்டம், ஊழல் கொண்டாட்டம் விவகாரங்கள் பற்றி எரியுதே?''
""ஆமாங்க தலைவரே, தீயணைப்புத் துறையிலேயே ஊழல் தீ பற்றி எரியுதாம். அந்தத் துறைக்குத் தேவையான கொரோனா தடுப்புக்கருவி கள் வாங்க முடிவெடுத்திருக்காங்க. இதற் கான டெண்டர் விவகாரத்தில் ஆர்வம் காட்டிய, அந்தத் துறையின் இணை இயக்குநரான பிரியா ரவிச்சந்திரன் தனக்கு நெருக்கமான சில நிறுவனங்களிடம் டீலிங்கில் இறங்கினாராம். இது துறை இயக்குநர் சைலேந்திரபாபுவின் காதுக்குப் போக, எரிச்சலான அவர், டெண்டர் குறித்து முடிவெடுக்கும் கூட்டத்தையே ரத்து பண்ணிட்டா ராம். பிரியா ரவிச்சந்திரன், முதல்வர் எடப்பாடிக்கு உறவுக் காரர்னு தெரிஞ்சும், அதிரடி அதிகாரியான சைலேந்திரபாபு கொஞ்சமும் அலட்டிக்கலையாம்.''
""நெடுஞ்சாலைத் துறை ஊழல் விவகாரமும் நாறிக்கிட்டு இருக்குதே?''
""நெடுஞ்சாலைத் துறையில் நடந்துக்கிட்டிருக்கும் ஊழல்கள் பற்றி, கடந்த நமது நக்கீரன் இதழி லேயே விரிவாக எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து தி.மு.க. தரப்பிலிருந்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் விஜயகுமாருக்குப் புகார் போனது. இருந்தும் எந்தவித நடவடிக்கை யும் இல்லை. ஊழல் ஃபைல்களுக்கெல்லாம் மணக்க மணக்க சாம்பிராணி போட்டுக் கிட்டு இருக்காங்களாம். காரணம், இப்படிப்பட்ட புகார்கள் வந்தா, அதே வேகத்திலேயே அது பற்றியெல்லாம் நடவடிக்கை வேண்டாம்ன்னு கோட் டையிலிருந்தே உத்தரவு வந்துடுதாம்.''
""இந்த பரபரப்புக்கு நடுவில் சென்னை குளோபல் மருத்துவமனை மீதான வழக்குகளை எடப்பாடி அரசு, திடீர்ன்னு டிராப் பண்ணியிருக்கே?''
""108 ஆம்புலன்ஸ் டிரைவர்களைத் தனது ஏஜண்டுகளாக்கிக்கிட்டு, தனியார் மருத்துவமனையான குளோபல், ஆள் பிடிச்ச விவகாரத்தை நமது நக்கீரன்தான் முதன் முதலில் அம்பலப்படுத்துச்சு. இதைத் தொடர்ந்து, இந்த மருத்துவமனைத் தரப்பு மீது வழக்குகளும் பதிவாச்சு. இந்த சூழல்ல, மருத்துவமனைத் தரப்புக்கு நெருக்கமான துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிட மிருந்து பிரஷர் வந்ததால், குளோபல் மீதான வழக்குகள் டிராப் செய்யப்பட்டிருக்கு. தமிழக அரசுக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதிகளை, வெங்கையா நாயுடு மூலம்தான், எடப்பாடி அரசு கேட்டுக் கெஞ்சிக்கிட்டு இருக்குதாம்.''
""கொரோனாத் தொற்று நாட்டையே மூச்சுத் திணறவைக்கும் நிலையிலும், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய நிதியை, மோடி அரசு இழுத்தடிக்குதே?''
""இப்ப இருக்கும் பேரவலமே இதுதாங்க தலைவரே, உ.பி.யைத் தவிர மற்ற மாநிலங்களை மோடி அரசு கவனத்திலேயே எடுத்துக்கலை. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியில் தவியாத் தவிக்கிறோம். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட எங்களால் செய்யமுடியலை. இப்படியே போனால் மக்களின் நம்பிக்கையை நாங்கள் இழக்க நேரும். அதனால், எங்களுக்குத் தரவேண் டிய பேரிடர்க் கால நிதியையாவது கொடுங்கன்னு மாநில அரசுகள் கரடியாக் கத்தியும் டெல்லி பதிலே சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்குது. இது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களையும் எரிச்சலில் ஆழ்த்தியிருக்கு. அதே சமயம், உங்கள் கொரோனா தடுப்புப் பணிகள் பத்தி வாரா வாரம் எங்களுக்கு ரிப்போர்ட் அனுப்புங்கள்னு மாநில அரசுகளுக்கு உத்தரவு போடுதாம் டெல்லி.''
""மே 17-க்குப் பிறகும் ஊரடங்கு தொடருமா? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?''
""சொல்றேங்க தலைவரே, இது சம்மந்தமா மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்சவர்த்தன், கடந்த 6-ந் தேதி, ஐ.சி.எம்.ஆர். அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியிருக்கார். அப்ப அவங்க, கொரோனாவின் வீரியம் ஜூனில் அதிகரிச்சி, அதுக்குப் பிறகுதான் படிப்படியா குறையும். அதனால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளையே முடிவெடுக்கச் சொல்லலாம்ன்னு தெரிவிச்சிருக் காங்க. அப்படின்னா ஜூன் வரை எப்படி சமாளிக் கிறதுன்னு அதிர்ச்சியடைஞ்ச அமைச்சர், இதனால் மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிப்படையும். இதையெல்லாம் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பவர் புள்ளிகளுக்கு எப்படிப் புரியவைக்கிறதுங்கிற கவலையில் இருக்காராம். அதே நேரத்தில், குடியரசுத்தலைவர்- பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பிகளோ இஷ்ட தெய்வங் கள் உள்ள கோவில்களுக்குப் போய் பூஜை செய்வதற்கான காலத்தை எதிர்பார்த்துக்கிட்டி ருக்காங்க.''
""ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு... டாஸ்மாக் திறப்பை எதிர்த்து தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே நேரத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த டி. ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், ஜெயமுருகன் உள்ளிட்டோர் மது ஆலை நடத்திக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் கடுமையா வைக்கப்பட்டது. பா.ம.க. உள்பட அரசியல் கட்சிகள் இரண்டு கழகங்களின் நிலைப்பாட்டையும் விமர்சித்தன. முதல்வர் எடப்பாடியோ, கூட்டணிக் கட்சியான பா.ம.க தன் முடிவை விமர்சிப்பதைக்கூட பெருசா எடுத்துக்கலை. ஆனா, தன்னோட சேலம் மாவட்டத்துல டாஸ்மாக்கை எதிர்த்து பா.ம.க. போராட்டம் நடத்தியதை அறிந்து அப்செட்டாயிட்டாரு. பேச்சு பேச்சாவே இருக்ககூடாதா, போராட் டம் வரைக்கும் போகணும்ங்கிறதுதான் அவரோட எதிர்பார்ப்பு.''
""எல்லா எதிர்பார்ப்புகளுக் கும் இப்ப நம்பிக்கை தரக்கூடிய இடம் நீதிமன்றம் மட்டும்தான். வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவன முறைகேடுகள் பத்தி, எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகையில், அதன் செய்தியாளர்களான சந்தியா ரவிச்சந்திரனும் அவர் கணவரான பிரேம் சங்கரும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தாங்க, இதனால் எரிச்சலான வி.வி.மினரல்ஸ் தரப்பு, நெல்லை நீதிமன்றத்தில் அவங்க மேல வழக்குத் தொடர்ந்துச்சு. இந்த வழக்கின் மேல்முறை யீட்டை விசாரிச்ச உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளும், பெரும் முதலாளிகளும், தங்கள் நீளமான கைகளையும் ஆழமான பைகளையும் வச்சிக்கிட்டு, பத்திரிகையாளர் களுக்கு எதிராக அவதூறு உள்ளிட்ட வழக்கு களைப் போட்டு, அவங்களை அலைக்கழிப்பது என்பது, பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதுன்னு அழுத்தம் திருத்தமாகத் தீர்ப்பளிச்சிருக்கார். இந்தத் தீர்ப்பு நீதிக்காகப் போராடும் பத்திரிகையாளர்களுக்கு பெரிய நம்பிக்கையையும் பாதுகாப்புணர்வையும் கொடுத்திருக்கு.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்...''
""கவர்னர் பன்வாரிலால் புரோஹித், டெல்லிக்கு அனுப்புறதுக்காக சீக்ரெட் ரிப்போர்ட்டை ரெடி பண்ணிக்கிட்டு இருக் காராம். அதில் எடப்பாடி தொடங்கி அவர் கேபினட்டில் 12- க்கும் மேற்பட்ட அமைச்சரவை சகாக்களின் ஊழல் விவகாரங்கள் பற்றிய அணுகுண்டுச் செய்திகள் ஆதாரப்பூர்வமா இருக்குதாம். இது எடப்பாடி அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற் படுத்தும்ன்னு ராஜ்பவன் வட்டாரத்திலும் கோட்டை வட்டாரத்திலும் பரபரப்பா பேசுறாங்க.''