டைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை உருவாக்கப்போகிறது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க.வின் முக்கிய வியூகம் தெளிவாக தெரிய வந்துள்ளது. எடப் பாடிக்கும் அண்ணாமலைக்கும் வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது. எடப்பாடி அ.தி.மு.க.வின் தேர்தல் பணிமனையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பேனர் வைத்தார்.

ee

Advertisment

அதை பாஜ.க. கூட்டணி யிலிருந்து அ.தி.மு.க. வெளியே வந்துவிட்டது என எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் செய்தி பரப்பினார்கள். அந்த பேனரில் மற்ற கூட்டணிக் கட்சியினர் படங்கள் இடம்பெற்றிருந்தது.

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியின் படம் இடம்பெற்றிருந்த அந்த பேனரில், நரேந்திரமோடியின் படம் இடம் பெறவில்லை. அ.தி.மு.க.வை ஆதரிக்கிறோம் என வெளிப் படையாக பா.ஜ.க. சொல்ல வில்லையென்றால் பா.ஜ.க. தலைவர்களின் படத்தை அ.தி.மு.க. பேனரில் போட எந்தத் தொண்டனும் அனுமதிக்க மாட்டான் என எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதிவந்தனர்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்பதை மாற்றி தேசிய ஜனநாயக கூட்டணி என அந்த பேனர் மாற்றப்பட்டது. இதைப் பற்றி பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பேசிய 6 மணி நேரத்தில் பேனர் மாற்றப்பட்டது. அதுபோல "மாற்றங்கள் நிகழும். நான் டெல்லிக்கு செல்கிறேன். தலைவர்களை பார்த்து பேசி முடிவெடுக்கிறேன்' என அறிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என மாற்றப்பட்ட பேனர் மறுபடியும் அ.தி.மு.க. கூட்டணி என திருத்தப்பட்டது.

இவையெல்லாம் எடப் பாடிக்கும் அண்ணாமலைக்கும் இடையே நடந்த பேச்சுவார்த் தைகளால் நடைபெற்ற விஷயம்.

அண்ணாமலை தனது சாதி அடிப்படையில் எடப்பாடியுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால் ஆதரவு யாருக்கு ஓ.பி.எஸ். அணிக்கா? எடப்பாடி அணிக்கா? என்பதில் இருவருக்குமிடையே சண்டை நீடிக்கிறது.

அண்ணாமலையின் பேரைச் சொன்னாலே எடப்பாடி டென்ஷனாகிறார். அண்ணா மலைக்கும் பி.ஜே.பி.க்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்த எடப்பாடி, திட்ட மிட்டு தேசிய ஜனநாயக முற் போக்கு கூட்டணி என பேனரில் கூட்டணியை மாற்றினார்.

அதன்பிறகு "பா.ஜ.க. தலை வர்கள் ஏன் அவசரப்படுகிறீர் கள்?' என எடப்பாடியிடம் பேசியதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி என பேனரை மாற்றி னார்.

எடப்பாடியைப் பொறுத்த வரை அவருக்கு பா.ஜ.க. மேல் பயமிருக்கிறது. அதனால்தான், நாங்கள் பாஜ.க.வை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்கிற வகையில் அவர் வைத்த பேனரை அவரே மாற்றினார்.

பா.ஜ.க.வைப் பொறுத்த வரை இடைத்தேர்தல் விஷயத் தில் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.

அ.தி.மு.க.வை ஓ.பி. எஸ்.ஸை பயன்படுத்தி அழித்து விட வேண்டும் என்கிற காய் நகர்த்தல்கள்தான் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.