நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த 17-வது கிலோமீட்டரில் இருக்கிறது கொடநாடு எஸ்டேட். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கும் சொந்தமான கொடநாடு எஸ்டேட் சொகுசு பங்களாவினுள் ...கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நுழைந்து கொள்ளை அடித்தது. அப்போது அந்த கொள்ளையை தடுக்க முயன்ற எஸ் டேட் பங்களாவின் இரவுக் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யபட்டான். இன்னொரு காவலாளி கிருஷ்ண பகதூர் பலமாய்த் தாக்கப்பட்டான்.

sayan

ஜெயலலிதா இறந்த சில மாதங்களில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் எதனால் நடந்தது? யாராலும் நுழைய முடியாமல் இருந்த ஜெயலலிதாவின் பங்களாவினுள் கொள்ளை யடிக்கும் திட்டம் யாரால் நடத்தப்பட்டிருக்கும் என பலரும் கேள்விகளால் குழம்பிப் போயிருந்தனர். அந்த சமயத்தில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் ஏப்ரல் 28-ந் தேதி ஈரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதேநாளில்... கனகராஜின் நண்பனான கோவையை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சயான், அவன் மனைவி, குழந்தையோடு பாலக்காடு ரோட்டில் காரில் கழுத்தறுபட்டுக் கிடக்க, சயான் மட்டுமே உயிர் காப்பாற்றப்பட்டார்.

கனகராஜ், சயான், அவனது நண்பன் வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன், உதயக்குமார், மனோஜ்சாமி, ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, சந்தோஷ் சாமி உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். சயானும் , வாளையார் மனோஜும் நிபந்தனை ஜாமீனில் இருக்க, மற்ற 8 பேரும் ஜாமீனில் உள்ளனர். இந்த கொள்ளைக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தது மர வியாபாரியான சஜீவன் தான் . பங்காளாவினுள் நடந்த மர வேலைகள் அனைத்தையும் செய்த சஜீவன்தான் பங்களாவின் எல்லா அறைகளுக்குள்ளும் போய் வந்தவர். அதனால் அவரே இந்த கொள்ளையில் சூத்ரதாரியாக செயல்பட்டிருந்தார் என நக்கீரன்தான் அவரைப் பற்றி முதன்முதலாய் சொன்னதோடு, அவர் புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர வைத்தது.

Advertisment

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகி யோர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற காவலில் இருந்த நிலையில்.. சயா னும், மனோஜூம் "ஆமாம் எங்களை கொள்ளையடிக்கச் செய்தது சஜீவன்தான். அவரைப் பிடித்து விசாரித்தால், "கொள்ளையடிக்கச் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிக்குவார்' என அப்போது பிரஸ்மீட் கொடுத்தனர்.

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு கிடப்பில் இருந்த நிலையில்... அ.தி.மு.க. ஆட்சி மாறி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு வழக்கு தூசு தட்டப்பட்டது.

sayan

Advertisment

கடந்த மாதம் சயானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தற்போது நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் தங்கி வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார் சயான். கடந்த 13-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது -இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சயானிடம் தனி விசாரணை நடத்தவேண்டும். அந்த விசாரணையில் சயான் உள்ளிட்ட 10 பேர்தான் இருக்கிறார்களா? வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரிக்க அனுமதி வேண்டும் என கோத்தகிரி போலீசார், மாவட்ட நீதிபதி சஞ்சை பாபாவிடம் தெரிவித்தனர் .

இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி அனுமதி அளிக்க, விசாரணைக்கு ஆஜராகு மாறு கோத்தகிரி போலீசார் சயானிடம் சம்மன் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட சயான் கடந்த 17-ந் தேதி மாலை 3:20 மணிக்கு ஊட்டியில் உள்ள பழைய காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் ஆஜராக வந்தார். அவ ரிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அப்போது சயான் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் என்பது சாதாரணமானதல்ல என்பதை இப்போது நான் அறிவேன். அப்போதைய அரசியல் சூழலில், அது பெரிதான விஷயமாக எங்களுக்குப் படவில்லை. ஏனென்றால் ஜெயலலிதா இறந்து இருந்ததால் அப்படி தோன்றியிருக்கலாம்.

இறந்துபோன டிரைவர் கனகராஜ் "கொள்ளையடிக்கச் செல்லலாம். அங்குள்ள முக்கியமான பைல்களை எடுத்து வந்தால் நிறைய பணம் பார்க்கலாம்'' என்று, என்னிடமும், வாளையார் மனோஜிடமும் சொன்னபோது ஒரு வித பயம் இருந்தது. ஆனால் கொள்ளையடித்து முக்கியமான பைல்களை எடுத்துவரச் சொன்னதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். அதனால் நமக்கு எந்த பயமும் இல்லை என்று சொன்னபோது வந்த பயமும் காணாமல் போனது.

ஆனால் கொடநாடு பங்களாவின் உள்ளே நுழைந்து வெளியேவருவது என்பது சாதாரணமான விஷயமல்ல. அதை எப்படி செய்யவேண்டும், எந்த கேட் வழியாக பங்களாவினுள் நுழைய வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தது கூடலூர் பகுதி மர வியாபாரி சஜீவன்தான். பங்களாவில் உள்ள இண்டு, இடுக்குகளையெல்லாம் அறிந்த சஜீவன் இப்போது அ.தி. மு.க.வில் மாநில வர்த்தக அணி அமைப்பாளராக இருக்கிறார்.

எடப்படியும், சஜீவனும் தான் எங்களை கொள்ளையடிக்க உத்தரவிட்டார்கள். ஸ்கெட்ச் போட்டது சஜீவன். இப்போது குடும்பத்தினரை எல்லாம் இழந்துவிட்டு, மாட்டிக்கொண்டிருப்பது நாங்கள்தான்'' என்றிருக்கிறார் சயான் கண்ணீர் வழிய.

3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை முடிந்து 6.40 மணியளவில் வழக்கறிஞரோடு வெளியே வந்த சயான், "இனி குற்றவாளிகளும் சீக்கிரம் வெளியே வருவார்கள்'' என்றார் மழையில் நனைந்த படியே.