Advertisment

தொழிலதிபர்கள் கூட்டணியுடன் 90 சீட்டுக்கு குறிவைக்கும் எடப்பாடி! - கொங்கு ஆபரேஷன்!

eps

சாதியும் பணமும் சாதிக்கும் என நம்புகிற ஒரு டீம், எடப்பாடி பழனிச் சாமியை மீண்டும் முதல்வராக கொண்டுவர வேண்டும் எனத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். வெளியில் தெரியாத இந்த ஆபரேஷனுக்கு, கொங்கு ஆபரேஷன் என ரகசிய பெயர் வைத்துள்ளனர் கொங்கு மண்டல தொழிலதிபர்கள்.

Advertisment

eps

இதுபற்றி அ.தி.மு.க.வின் முன்னாள் மா.செ. சீனியர் நிர்வாகி ஒருவர் பல விபரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ""தமிழக அரசியல் வரலாற்றில் பல சமூகத்தை சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் மூன்றரை வருடம் முதல்வராக தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக செய்துள்ளார். தேவர் சமூகத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். எவ்வளவோ குடைச்சலை ஏற்படுத்தியும் அந்த சமூகத்தில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி தன் பக்கம் கவர்ந்து வைத்திருக்கிறார்.

Advertisment

ஆட்சியை மட்டுமல்ல அ.தி.மு.க. என்கிற பெரிய கட்சியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, மாநகர, பகுதி, நகர,வட்ட,, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் முதன்மை நிர்வாகிகள் ஏன் தொண்டர்க

சாதியும் பணமும் சாதிக்கும் என நம்புகிற ஒரு டீம், எடப்பாடி பழனிச் சாமியை மீண்டும் முதல்வராக கொண்டுவர வேண்டும் எனத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். வெளியில் தெரியாத இந்த ஆபரேஷனுக்கு, கொங்கு ஆபரேஷன் என ரகசிய பெயர் வைத்துள்ளனர் கொங்கு மண்டல தொழிலதிபர்கள்.

Advertisment

eps

இதுபற்றி அ.தி.மு.க.வின் முன்னாள் மா.செ. சீனியர் நிர்வாகி ஒருவர் பல விபரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ""தமிழக அரசியல் வரலாற்றில் பல சமூகத்தை சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் மூன்றரை வருடம் முதல்வராக தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக செய்துள்ளார். தேவர் சமூகத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். எவ்வளவோ குடைச்சலை ஏற்படுத்தியும் அந்த சமூகத்தில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி தன் பக்கம் கவர்ந்து வைத்திருக்கிறார்.

Advertisment

ஆட்சியை மட்டுமல்ல அ.தி.மு.க. என்கிற பெரிய கட்சியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, மாநகர, பகுதி, நகர,வட்ட,, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் முதன்மை நிர்வாகிகள் ஏன் தொண்டர்கள் கூட தன்னை தலைவராக ஏற்றுக்கொள் ளும்படி எடப்பாடி உருவாகி விட்டார். வருகிற தேர்தலில் ஜெயிக்க, என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று அவரது நெருங்கிய சொந்தங்களிடம் ஏற்கனவே கூறி விட்டார். அதன்படிதான் கொங்கு தொழிலதிபர்கள் குழு இதுவரை ஐந்து முறை மீட்டிங் நடத்தியுள்ளது.

சென்ற 18ந் தேதி முதல்வர் எடப்பாடி தனது சொந்த மாவட்டமான சேலம் வந்திருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான கொங்கு குழுவுடன் இரவு நீண்ட நேரம் பேசியுள்ளார். அந்த தகவலை மூத்த அமைச்சர் ஒருவரே என்னிடம் கூறினார்'' என்றவர் மேலும் தொடர்ந் ததார். ""234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 54 போக மீதி 180 தொகுதிகளில் அ.தி.மு.க.போட்டி போடும் இதில் ஐந்து சீட் வரை குறைவாக இருக்கலாம். ஆனால் 175 தொகுதிகளில் இரட்டை இலை சின்னம்தான். இதில் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகள் இருக்கும். குறிப்பாக சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி இந்த பகுதிகளில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி களிலும் நாம் வெல்ல வேண்டும் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர் களில் அதிகம் நமது கொங்கு மண்டலத்திலிருந்து வெற்றி பெற்றவர்கள்தான். ஆக என் கணக்குப்படி சென்னை தொடங்கி கோவை வரை உள்ள தொகுதிகளில் உறுதி யாக வெற்றி பெற வேண்டி யது 90 தொகுதிகள். அப்படி ஜெயித்துவிட்டால், மீண்டும் நான் தான் முதல்வராவேன்.

இது தவிர மத்திய, தென் மாவட்டங் களை சேர்ந்த 10 அமைச்சர்களிடம் அவர்கள் நிற்கும் தொகுதி உட்பட மூன்று தொகுதி களில் வெற்றி பெற வேண்டும் என சொல்லியிருக் கிறேன் அப்படி பார்த்தால் 30 தொகுதி வந்து விடும் ஆக 120 தொகுதி களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடி யும். 120 வரா விட்டாலும் 100 வெற்றி பெற்றால் போதும் மத்தியில் பா.ஜ.க. நமக்கு மிகப் பெரிய பலம். தனிக் கட்சி மெஜா ரிட்டியில் ஆட்சியை பிடிக்கலாம். வெற்றிக்கு பிறகு வரும் சூழலை சாதகமாக பயன்படுத்த எனக்கு தெரியும் எனச் சொல்லியிருக்கிறார்.

தனது சாதி வாக்கு களால் கொங்கு மண்டலம் வசமாகும் என நம்பும் எடப்பாடி, முதல் கட்டமாக தொகுதிக்கு 15 கோடி பிறகு இறுதி கட்டத்தில் மேலும் 5 முதல் 10 கோடி என முடிவு செய் துள்ளார்கள். 100 தொகுதிக்கு 100 தொழிலதிபர்கள், இவர்களை ஒருங் கிணைக்கும் வேலையை எடப்பாடியாரின் சம்பந்திக்கு சம்பந்தியான ஈரோடு என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலதிப ரான ராமலிங்கமும், இன்னொரு சம்பந்தி முறையாகிற கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் ஈரோடு மணி கவுண்டர் மற்றும் முதல்வரின் மகனான மிதுன் ஆகியோர் பார்த்துக் கொள்வார்கள் என பேசியிருக்கிறார்கள்.

அதே போல் தி.மு.க. கூட்டணியில் உள்ள கவுண்டர் சமூக கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை உடைக் கும் வேலையை செய்ய தனியாக ஒரு டீம் போட்டுள்ளார்கள். ஒரு தொகுதிக்கு பொறுப்பேற்கும் தொழிலதிபர் யார் என்று வெளியில் தெரியாது. ஆனால் செலவுக்கு தேவையான பணம் மட்டும் அவரிடமிருந்து வரும் அது கட்சியோ அல்லது முதல்வரோ கொடுத்த பணமாகவும் இருக்கலாம். இதில் வாக்களர்களுக்கு ஜாக்பாட்டாக, இரு முறை கவனிப்பு நடக்கும்.

eps

தேர்தல் நடைபெறுவதற்கு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்பே ஒட்டுக்கு 500 வீதம் வழங்கி விடும் பிறகு தி.மு.க. வாக்கு பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு 200 அல்லது 300 ஐ கொண்டு போய் சேர்க்கும் அதன்பிறகு மீண்டும் அ.தி.மு.க. டீம் 500 பட்டுவாடா செய்யும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் வாழும் காலனிகளுக்கு அவர்கள் வணங்கும் சாமி சிலையுடன் புதிய கோயில்கள், உணவுக்காக ஆடு, மாடு, போன்றவையும் வழங்கப்படுகிறதாம்'' என விரிவாக கூறினார்.

மேலும் அவர் ""மாப்ளே அடுத்தமுறையும் இந்த ஓ.பி.எஸ்.தான் துணை முதல்வரா என முதல்வரின் சொந்தக்காரர் ஒருவர் கேட்க... அதையெல்லாம் பி.ஜே.பி. பாத்துக்குவாங்க. ஒரு வேளை நமக்கு மெஜாரிட்டி இல்லை 100 சீட் வரை தான் ஜெயிச்சோமுனா அப்போ நமக்கு பி.ஜே.பி.தான் உதவி செய்யும். பி.ஜே.பி. துணை முதல்வர் பதவி கேட்டா நமக்கென்ன கொடுத்திட்டு போவோமுனு எடப்பாடி சொன்னாராம். பணத்தையும் சாதியையும் பயன்படுத்திக் கொண்டு சாமர்த்தியமாக அரசியல் செய்யும் எடப்பாடி, தன் பதவியைத் தக்க வைக்கவும் பக்காவாகத் திட்டம் போட்டுள்ளார்'' என்றார் அந்த சீனியர் நிர்வாகி.

"தி.மு.க.வில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற இளைஞர் அணி உதயநிதி பயணம் ஒரு புறம் என்றால் வரும் தேர்தலிலும் எனக்கு தான் விடியல் என தன் சமூகத்தை உள்ளடக்கிய வெய்ட்டான திட்டமிடலோடு களத்தில் உள்ளார் முதல்வர் எடப்பாடி. அதே நேரத்தில், மொத்த அ.தி.மு.க.வுக்கும் பெப்பே காட்டும் வகையில், எடப்பாடி உள்ளிட்ட அமைச்சரவையில் உள்ள அனைவரின் ஃபைல்களையும் தூசு தட்டி எடுத்து வைத்துள்ள பா.ஜ.க. போட்டுள்ள கணக்கே தனி என்கிறது டெல்லித் தரப்பு.

-ஜீவாதங்கவேல்

nkn281120
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe