ஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை பற்றி இந்தியாவே கவலைப்பட்டுக்கொண்டி ருக்கும்போது எடப்பாடி அதைப்பற்றி சட்டமன்றத்தில் விரிவாகப் பேசினார். ஆனால், அவர் பேசிய அன்றே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தடபுடல் விருந்து வைத்தார். மட்டன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, இறால் தொக்கு, முட்டை ஆகிய ஏழுவகையான அசைவ உணவுகள் அந்த விருந்தில் பரிமாறப்பட்டன. அசைவ சாப்பாடு பிடிக்காதவர்களுக்கு அபாரமான சைவ உணவு வகைகளும் பரிமாறப்பட்டது. அவர்களுடன் அமர்ந்து எடப்பாடியும் சிரித்துக்கொண்டே சாப்பிட்டார். அத்துடன் ஏராளமான பரிசுப் பொருட்களும் கொடுத்தனுப்பி யுள்ளார். அந்தப் பரிசுப் பொருட்களில் முக்கிய இடம் பெற்றது "வைட்டமின் ப' அடங்கிய ஸ்வீட் பாக்ஸ்கள். ஒவ்வொரு எம்.எல். ஏ.வுக்கும் ரெண்டு ஸ்வீட் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டன. அதைக் கொண்டுபோய் எம்.எல்.ஏ.க்களின் டிக்கியில் வைப்பதற்கு ஒரு தனிப்படை சூப்பராக செயல்பட்டது. மொத்தம் 120 ஸ்வீட் பாக்ஸ்கள் பரிமாறப்பட்டன.

admk

கடந்த 90-களில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை சு.சாமியும், நடராஜனும் இணைந்து ஆபரேட் செய்தார்கள். அ.தி.மு.க.வைக் குலைப்பதற்காக நடைபெற்ற அந்த ஆபரேஷனை முறியடிக்க ஜெயலலிதா போயஸ் கார்டனில் இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கப்பட்டது. அதுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதன்முறையாக பெற்ற ஸ்வீட் பாக்ஸ். அதன்பிறகு எடப்பாடி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் சசிகலா உத்தரவின் பேரில் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க் களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கினார் எடப்பாடி. அந்நேரம் பா.ஜ.க., ஓ.பி.எஸ்.ஸை ஆதரிப்பதால் மிகவும் ரகசியமாக எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக எம்.எல்.ஏ.க்களின் வீட்டுப் பெண்களை சந்தோஷப்படுத்த தங்க நகைகளும் வழங்கப் பட்டன. அப்பொழுது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடிக்கு நெருக்கமான மணல் காண்ட்ராக்டர் இராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் மூலம் வழங்கப்பட்ட இந்த தொகையை என்னால் வழங்க முடியாது என செங்கோட்டையன் பின்வாங்கியதால், எடப்பாடி முதல்வரானார். இப்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் செங்கோட்டையன் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை. சூலூர் கந்தசாமி, பவானிசாகர் பண்ணாரி, திண்டிவனம் அர்ஜுனன் ஆகியோரும் இந்த விருந்தில் கலந்துகொண்டு எடப்பாடி கொடுத்த ஸ்வீட் பாக்ஸை வாங்கவில்லை.

செங்கோட்டையன், ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் அவருடன் ஓ.பி.எஸ்.ஸை ஆதரிக்கும் நான்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி அமைத்ததால் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்க தீவிரவாதத் தாக்குதல் நடந்த இந்த நேரத்திலும் ஒரு விருந்தை எடப்பாடி நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அடுத்தநாள் நடை பெற்றது. இந்த அதிருப்தியை சமாளிக்கும் ஆபரேஷனுக்காக எடப்பாடி 200 ஸ்வீட் பாக்ஸ்கள் வரை செலவளித்திருக்கிறார். ஆனால், எடப்பாடிக்கு எதிராகக் கட்சியில் அதிருப்தி தொடர்கிறது. இந்த முறை எடப்பாடி, தனக்கு எம்.எல்.ஏ. ssசீட் தரமாட்டார் என்பதால் செங்கோட்டையன் வெகுவேகமாக செயல்படுகிறார். ஓ.பி.எஸ்., சைதை.துரைசாமி என ஒரு டீமே எடப்பாடிக்கு எதிராக செயல்படுகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கட்சியை ஒற்றுமைப்படுத்தாவிட்டால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வாக்குகளைப் பெற முடியாது, இந்தக் கூட்டணி தோல்வியடையும் என செங்கோட்டையன் பா.ஜ.க. மேலிடத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

Advertisment

சசிகலாவை கட்சியில் சேர்க்கமாட்டேன் என்ற எடப்பாடி, சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரனுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளார். சசிகலாவின் பெரும் பணத்தை, சொத்தை கையில் வைத்திருக்கும் தினகரன், சசிகலா கட்சிக்குள் வரக்கூடாது’ என்பதில் உறுதியாக இருக்கிறார். அதேபோல் எஸ்.பி. வேலுமணி, எடப்பாடிக்கு எதிராக நான்தான் முதல்வர் வேட்பாளர் என இதுவரை கொம்பு சுற்றிவந்தார். சசிகலாவையும், எஸ்.பி.வேலு மணியையும் முறியடித்து, கட்சி எனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகத்தான் ஸ்வீட் பாக்ஸ் விருந்து நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

ஆனால் அ.தி.மு.க. வில் புயல் இன்னும் ஓயவில்லை. கட்சியில் சசிகலா, ஓ.பி.எஸ். போன்றவர்களை இணைப் பதற்கு மே மாதம் வரை கெடு கொடுத்திருக் கிறார்கள் எதிரணியைச் சேர்ந்தவர்கள். அந்தக் கெடுவிற்குள் கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இல்லை யென்றால் சசிகலா, எடப்பாடிக்கு எதிராக களமிறங்கி ஸ்வீட் பாக்ஸ் -கறிவிருந்து நடத்துவார் என்கிற எச்சரிக்கை எடப்பாடிக்கு விடப்பட்டுள்ளது. யார் கறி விருந்து நடத்தினாலும் எங்களுக்கு சந்தோஷம்தான் என மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள். ‘சோவெனப் பெய்யும் மழை போல’ சந்தோஷத்தில் ஸ்வீட் தின்று கொண்டி ருக்கிறார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். இவையெல்லாம் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிப்பதற்காக எடப்பாடி கொடுக்கும் விலை. இது அ.தி.மு.க.வினரின் அதிருப்தியை அடக்குமா என்பது வரும் நாட்களில் நடக்கும் நிகழ்வுகள் சொல்லிவிடும்.