"ஹலோ தலைவரே, அமித்ஷாவின் வருகையும் அவரது பேச்சும், அவர்களின் கூட்டணியை பலவீனப்படுத்துவது போல் அமைந்துவிட்டது என்று கமலாலயத் தரப்பே சொல்கிறது.''”
"ஆமாம்பா, கூட்டணி ஆட்சி அமைப்பதில்லை என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். ஆனால், அதற்கு எதிராக அமித்ஷா பிரகடனம் பண்ணிவிட்டுப் போயிருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, மதுரை வந்த அமித்ஷா, அங்குள்ளவர்களை குளிரவைக்கும் விதமாக மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு விசிட்டடித்தார். பிறகு பா.ஜ.க.வின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, கட்சியினருக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினார். அதேபோல், மதுரை ஒத்தக்கடைப் பகுதியில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய அமித்ஷா, ’வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும்’ என்று முழக்கமிட்டார். இதையறிந்து ’கூட்டணி ஆட்சியா?’ என்று ஏகத்துக்கும் டென்சன் ஆகியிருக்கிறாராம் எடப்பாடி. மேலும் பா.ஜ.க. கூட்டணியில், எடப்பாடி யால் வெறுத்து ஒதுக்கப்படும் டி.டி.வி. தினகரனுக்கு, 5 சீட்டுகள் ஒதுக்குவ தாக அமித்ஷா வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். அதேபோல் ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரையும் பா.ஜ.க. கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளும் நடந்து வருகிறதாம். இவற் றையும் அறிந்த எடப்பாடி, கொதித்துப்போயிருக்கிறா ராம். இந்தக் கூட்டணி ஒத்துவரும்னு தோணலை என்று, தன் சகாக்களிடம் அவர் புலம்பவும் ஆரம் பித்துவிட்டாராம்.''”
"அதேபோல் அமித் ஷாவை, தயாநிதிமாறனின் கேள்விகள் அப்செட் ஆக்கியதையும் பார்க்க முடிந்தது என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, மறுசீரமைப்பு என்கிற பெயரில், தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதி களின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு சதி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு தெளிவான பதில் மத்திய அரசிடமிருந்து வராத நிலையில், தயாநிதி மாறனோ, ’அரசியலமைப் புச் சட்ட திருத்தம் 84ன்படி, 2026க்கு முன் மேற்கொள்ளப் படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப் படையில்தான் தொகுதி மறு வரையறையை மேற்கொண் டாக வேண்டும். ஆனால் ஒன்றிய அரசோ, 2027ல் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தப்படும் என் றும், அதனடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும் எனவும் அறிவித்திருப்பது, அதன் நோக்கத்தை அம்பலப்படுத்தி யிருக்கிறது. தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண் ணிக்கை குறையாது என்கிற ஏமாற்றுவார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித் துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத் தை அளிக்கத் தயாரா? பதில் சொல்லுங் கள் அமித்ஷா அவர்களே’என்ற கேள்வி யை அமித்ஷாவை நோக்கி எழுப்பினார். இதை பா.ஜ.க. நிர்வாகிகள், மதுரையில் அமித்ஷாவின் கவனத்துக் கொண்டுபோக, அவர் பதட்டமாகிவிட்டாராம்.''”
"அமைச்சர் ஒருவரின் பெயர், வில்லங்க விவகாரத்தில் அடிபடுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, சமீபத்தில் சிவகங்கை மாவட்ட மல்லாக்கோட்டை யில் உள்ள ’மேகா ப்ளூ மெட்டல்’ எனும் குவாரியில் பாறை சரிந்து, ஆறு பேர் பலியானார்கள். இது குறித்து நமது நக்கீரனிலும் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த குவாரி லைசன்ஸ் காலாவதியானதும் அந்த குவாரி, அதன் உரிமையா ளர் மேகவர்மனின் மனைவி பெயரில் இருப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில், தலை மறைவாக இருக் கும் மேகவர்மன், ஜாமீன் வாங்கும் முயற்சியிலிருக் கிறார். இந்த நிலையில், குவாரி உரிமையாளர் மேகவர்மனைத் தொடர்புகொண்டு "உன்மேல உள்ள வழக்குகளை நாங்க பார்த்துக்கறோம். உங்க எல்லாப் பிரச்சினை யையும் நாங்க சால்வ் பண்றோம். அதுக்கு, உன்கிட்ட இருக்கும் ஐந்து குவாரிகளிலும் எங்க அமைச்சரும் பங்குதாரராக இருப்பார். நீங்க இதுக்கு ஒத்துக் கிட்டா, எல்லாத்தையும் சரி பண்ணிடறோம்'’என்று, தமிழக அமைச்சர் ஒருவரின் ராமர் பெயர்கொண்ட உறவினர் டீலிங் பேசிவருகிறாராம். அசைவ ஓட்டல்களை நடத்தும் அவரின் அப்ரோச்சில் மிரண்டுபோய்விட்டாராம் குவாரி உரிமையாளர்.''”
"அமைச்சர் நேருவுக்கும் லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கும் இடையிலான உரசல் அதிகரித்த படியே இருக்கிறதே?''”
"லால்குடி சட்டமன்றத் தொகுதியில் 4ஆவது முறையாக வெற்றி பெற்றவர் சௌந்தரபாண்டியன். இவருக்கும் மாவட்ட அமைச்சர் நேருவுக்கும் ஏழாம் பொருத்தம். இந்த நிலையில் அமைச்சர் தன் தொகுதிக்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிரங்கமாகவே எம்.எல்.ஏ. விமர்சித்திருக்கிறார். இந்த நிலையில், அமைச்சருடன் சமாதானமாகப் போக விரும்பிய அவர், அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோத னை நடத்தியபோது அங்கே சென்றார். அப்போது சந்தடி சாக்கில், தன் மகனுக்குத் திருமணம் வைத்திருப்பதாகவும், அதற்கு முதல்வர் ஸ்டாலினிடம் தேதி வாங்கித் தரும்படியும் நேருவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாத நேரு, அன்னியூர் சிவா மூலம், "திருமணத் திற்கு நான் வரமாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்' என்று தெரிவித்துவிட்டார். இதனால் அமைச்சருக்கு எம்.எல்.ஏ. அழைப்பு வைக்கவில்லை. அண்மையில் நடந்த அவர் வீட்டுத் திருமணத்திற்கு அமைச்சர் நேரு செல்லாமல் தவிர்த்துவிட்டார். இவர்களின் மோதல் போக்கு, கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”
"அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தத் தயாராகி வருகிறார்களே?''”
"தி.மு.க.வுக்கு இருக்கும் வாக்கு வங்கியில் கணிசமானவை, அரசு ஊழியர்களிடமும் ஆசிரியர் களிடமும்தான் உள்ளன. இவ்வளவு வாக்குபலம் கொண்ட இவர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கடந்த 15 ஆண்டுகால மாகப் போராடிவருகிறார்கள். முந் தைய அ.தி.மு.க. ஆட்சியில், இவர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகச் சொல்லி, நம்பவைத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என ஸ்டாலின் உத்தரவாதம் கொடுத்திருந்தார். ஆனால், அவரது ஆட்சிக்காலம் 4 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையிலும், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பெரும்கோபம் கொண்டனர். இந்த நிலையில், இது குறித்து ஆராய கமிட்டி ஒன்றை அமைத்தார் ஸ்டாலின்.''”
"ஆமாம்பா. அது வெறும் கண் துடைப்புன்னு அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டுச்சே?''”
"உண்மைதாங்க தலைவரே, அதனால், அரசை எதிர்த்து அரசு ஊழியர்களும் ஆசிரி யர்களும் ஸ்ட்ரைக் நடத்தத் திட்டமிட்ட னர். உடனே, இதற்கு தடை விதிக்க வேண் டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசுத் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால், மாநிலம் தழுவிய தங்களின் போராட்டத்துக்கு அனுமதி கிடைத்திருப்பதை வைத்து, அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்று அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தீவிர ஆலோ சனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்துக்குத் தயாராகிவருகிறார்கள். அப்படி இவர்களின் போராட்டம் வெடிக்குமானால், வரும் தேர்தலில் 200 இடங்களை வெல்வோம் என்று சொல்லி வரும் முதல்வர் ஸ்டாலினின் கனவுக்கோட்டையில் பலமாக ஓட்டை விழும் என்கின்றனர் இவர்கள். இதற்கிடையே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்வதாகவும், ஆனால், அவரை ஆக்ரமித்திருக்கும் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இதற்கு முட்டுக்கட்டை போட்டுவருவதாகவும் கோட்டை வட்டாரத்தில் செய்திகள் சிறகடிக்கின்றன.''”
"டெல்லியிடம் பா.ம.க. ராமதாஸ் இணக்கமாகிவிட்டார் போலிருக்கே?''”
"பா.ம.க.வில் நடக்கும் உள்கட்சிப் பிரச் சனைகளை தீர்க்க, டெல்லியின் விருப்பப்படி தைலாபுரத்தில் டாக்டர் ராமதாசை, பா.ஜ.க. பிரமுகரான ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் சந்தித்தனர். அப்போது, தேர்தல் நெருங்கும் நேரத்தில், நீங்கள் உங்கள் மகனுக்கு எதிராக மாறியதை உங்கள் எதிரிக் கட்சியான தி.மு.க. ரசித்துவருகிறது. இதற்கு நீங்கள் இடம் தரலாமா? என்று கேட்டிருக்கிறார் ஆடிட்டர். ராமதாஸோ, எனக்குத் தெரியாமல் நடத்திய விளையாட்டில் கிடைத்த பரிசுகளை எல்லாம் என்னிடம் ஒப்ப டைக்கச் சொல்லுங் கள்’ என்றாராம். இதுகுறித்து ஆடிட் டர், அன்புமணி யிடம் விவாதிக்க, அவர் இறங்கிவர வில்லையாம். இந்த நிலையில், சென் னைக்கு வந்த ராம தாஸை, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவ ரது பேரன் முகுந்தன் வீட்டில் மீண்டும் ஆடிட் டர் சந்தித்திருக்கிறார். அப்போது, உங்கள் எதிர் பார்ப்புகளும் விருப்பங்களும் நிறைவேறும். பா.ம.க.வை உடையாமல் பார்த்துக் கொள்ளுங் கள். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற வேண்டும் என்று தெரிவித்திருகிறார். இதில் சமாதானமான ராமதாஸ், ’நான் இப்போதும் பிரதமர் மோடியின் நண்பர்தான். அமித்ஷா வுக்கு என் வாழ்த்துகள்’ என்று தெரிவித்தாராம்.''
"தமிழகத்தின் மணல் குவாரி விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறதே?''”
"மணல் குவாரி உரிமம் தொடர்பாக சிக்கல்கள் நீடித்துவந்ததால், இத்தனை நாளாக திறக்கப்படாமல் இருந்த மணல் குவாரிகள், விரைவில் திறக்கப்படவிருக்கிறது என்கிறார்கள். காரணம், உரிமம் தொடர் பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாம். ஏற்கனவே தமிழகத்தில் மணல் குவாரிகளில் கோலோச்சி வந்த எஸ்.ஆர். குரூப்ஸுக்கும், மயிலாடுதுறை ராஜப்பாவுக் கும் இடையே உரிமம் தொடர்பான போட்டி நிலவிவந்தது. முதல்வர் தரப் போ, ராஜப்பாவுக்குத்தான் இந்தமுறை குவாரி உரிமத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூற, அமைச்சர் துரை முருகனோ, எஸ்.ஆர். குரூப் ஸுக்காக போராடிவந்தார். இந்த நிலையில், இப்போது ராஜப்பா வசம் குவாரிகளை நடத்துவதற்கான உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதைத் தொடர்ந்து, ராஜப்பா சமீபத்தில் தன்னுடைய சொந்த ஊரான மயிலாடு துறையில் வெற்றி பூஜையை, தடபுடலாகப் போட்டி ருக்கிறாராம்.''”
"கோவை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு நேர்ந்தது பற்றி போலீஸ் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்களே...''
"ஆமாங்க தலைவரே... கோவையைச் சேர்ந்த அந்த அ.தி.மு.க. பிரமுகர், ஆற்காட்டைச் சேர்ந்த தங்கள் கட்சியின் பெண் பிரமுகருடன் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டலில் அறையெடுத்துத் தங்கினார். இவர்களுடன் இன்னொரு ஜோடியும் அங்கே சென்றிருக்கிறது. இந்த நிலையில், அந்த நள்ளிரவில் அந்த ஓட்டல் அறையில் இருந்து பெண்களின் அலறல் சத்தம் கேட்க, தகவல் போலீஸுக்குச் சென்றிருக்கிறது. உடனே போலீஸின் ரோந்து வாகனம் அங்கே விரைந்திருக்கிறது. போலீஸைப் பார்த்ததும், அந்த கோவை அ.தி.மு.க. பிரமுகர் அங்கிருந்து ஓட்டமெடுத்துவிட்டாராம். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போலீஸ் அதிகாரிகளை அதட்டி உருட்டி, மிரட்டி வந்த அந்த கோவை பிரமுகர், இப்போது போலீஸைக் கண்டு, வியர்த்து விதிர்விதிர்த்து எஸ்கேப் ஆனதை அறிந்து, போலீஸ்காரர்களே சிரிக்கிறார்கள்.''’
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன்... சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் கடை வேண்டுபவர்களிடம், பகுதி தி.மு.க. செயலாளர் மதன்மோகன் பணம் வசூலித்ததாகக் கடந்த (ஜூன் 07-10) நக்கீரன் இதழில் ராங்கால் பகுதியில் வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார். தனது அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காமல், காழ்ப்புணர்ச்சியில் எவரேனும் இப்படி தவறான தகவலைத் தந்திருக்கக்கூடுமென்றும், தி.மு.க. ஆட்சி மீது களங்கத்தை ஏற்படுத்தவே இப்படியான அவதூறுகளைப் பரப்புகிறார்கள் என்றும் தனது மறுப்பில் குறிப்பிட்டுள்ளார்.'
__________________
மாணவிக்கு பாலியல் தொல்லை! காவலாளி போக்சோவில் கைது!
தாம்பரத்தில் சமூக நலத்துறை சார்பில் நடத்தப்பட்டுவரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி, அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி மேத்யூ என்பவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடுதியில் தங்கி படித்துவரும் விழுப்புரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 8ஆம் தேதி ஞாயிறன்று காலையில் தனது அறையிலிருந்து வெளியே வந்தபோது, விடுதியின் காவலாளி மாத்யூ அச்சிறுமியின் முகத்தை துணியால் மூடி, தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுக்க, அவனிடமிருந்து தப்பித்து ஓடும்போது தவறி விழுந்ததில் மாணவிக்கு கால் முறிந்தது. காவலாளி தப்பியோடிய நிலையில், அம்மாணவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை யில் சேர்த்து தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாணவி யிடம் விசாரணை செய்த போலீசார், காவலாளி மேத்யூ மீது போக் சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
-கீரன்