நெடுஞ்சாலைத்துறையில் தமிழகம் முழுவதும் சாலைகளில் எச்சரிக்கைப் பலகைகள் அமைத்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சாலைகளில் வண்ணக் கோடுகள் வரைதல், சாலைகளின் ஓரங்களில் உலோகத்திலான தகர தடுப்பு வேலிகள் அமைத்தல், சாலைகளில் கேட்ஸ் ஐ மற்றும் ஸ்டட் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள், எடப்பாடி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன. அதில் மட்டும் சுமார் 2000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

Advertisment

ve

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள், "புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டித்துரையின் ஹரிவே லைன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் துக்கே மேற்கண்ட வேலைகளுக்கு தமிழகம் முழுவதுமான டெண்டர்கள் தரப்பட்டன. காரணம், எடப்பாடிக்கு நெருக்கமான காண்ட்ராக் டர்களில் பாண்டித்துரையும் மிக முக்கியமானவர். இதே நெடுஞ்சாலைத்துறையில் எழுத்தராக (கிளர்க்) வேலைபார்த்து வந்தவரான பாண்டித் துரை, எடப்பாடியின் ஆசியால் தற்போது கோடீஸ் வர காண்ட்ராக்டராக வலிமையடைந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சாலைகளில் வைக்கப் படும் எச்சரிக்கை பலகைகள் வெளிச்சந்தையில் அதிகபட்சம் 3000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், நெடுஞ்சாலைத்துறையில் அந்த பலகைகள் 8,000 முதல் 10,000 ரூபாய் என கணக்கிட்டு பாண்டித்துரையின் ஹரிவே லைன்ஸ் நிறுவனத்துக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை பலகைகளில் ஒட்டப்படுகிற ஒளிரும் பேப்பர்கள் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒளிரும் தன்மையுடன் இருக்க வேண்டும். ஆனால், அங்கீகரிக்கப்படாத தரமற்ற கம்பெனிகளிடமிருந்து தரம்மற்றதை வாங்கி ஒட்டியதால் ஒரே வருடத்தில் ஒளிரும் தன்மையை இழந்துவிட்டன.

Advertisment

மலைகள், ஏரிக்கரைகள் உள்ளிட்ட உயரமான பகுதிகளிலுள்ள சாலைகளில் உலோகம் மற்றும் தகர தடுப்புகளான வேலிகள் அமைக்க 1 மீட்டருக்கு அதிகபட்சம் 1000 ரூபாய் போது மானது. ஆனால், 1 மீட்டருக்கு 5,000 ரூபாய் பில் பாஸ் செய்திருக்கிறார்கள் அதிகாரிகள். அதே போல, சாலைகளில் வண்ணக்கோடுகள் வரை வதற்கு 1 சதுர மீட்டருக்கு 300 ரூபாயே அதிக மானது. ஆனால், 800 ரூபாய்க்கு பில் போடப் பட்டுள்ளது. அவசிய மற்ற சாலைகளில் கூட கோடுகள் வரைந்து கோடிகளில் கொள்ளை யடித்திருக்கிறார்கள்.

இந்த வண்ணக் கோடுகள் பகலிலும் இரவிலும் ஒளிர்வதற்காக 1 ரூபாய் நாணயத்தின் கனமளவுக்கு கண்ணாடி பவுடர் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் எந்த சாலைகளிலும் இந்த கனம் இருக்காது.

இதேபோன்றுதான் கேட்ஸ் ஐ மற்றும் ஸ்டட் பொருத்துவதும் கூட தேவையற்ற இடங் களிலெல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் கூடுதல் விலையே கோட் செய்யப்பட்டு பில்கள் பாஸாகியிருக்கின்றன. மேற்கண்ட பணிகளை பாண்டித்துரையின் ஹரிவே லைன்ஸ் நிறுவனத் துக்கு தருவதற்காகவே, 10 லட்சம், 10 லட்சம் என வேலைகளின் மதிப்புகள் பிரிக்கப்பட்டு கோட்டப் பொறியாளர்களே (டிவிஷனல் இன்ஜினியர்ஸ்) முடிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

Advertisment

ve

கோட்டப் பொறியாளர்களும் உயரதிகாரி களின் உத்தரவுபடி காண்ட்ராக்டர் பாண்டித் துரைக்கே இந்த பணிகளை ஒதுக்கியுள்ளனர். அதாவது, பாண்டித்துரையின் ஹரிவே லைன்ஸ் உட்பட 4 பேர் போட்டியிடுவார்கள். அதில் 3 பேர் குறிப்பிட்ட காரணங்களுக்காக நீக்கப்படுவார்கள். தகுதி பெற்றதாக ஹரிவே லைன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்படும்''’ என்று விவரிக்கிறார்கள்.

இந்த ஊழல்களை மிக ரகசியமாக ஆராய்கிறது ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம். ஆணைய வட்டாரங் களில் விசாரித்த போது, "தமிழக நெடுஞ்சாலைத் துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்கள் 41, தேசிய நெடுஞ்சாலை கோட்டங்கள் 13 என மொத்தம் 54 கோட்டங்கள் இருக்கின்றன. இதில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் (அலகு) சாலை பணி களுக்கும் அதனை பராமரிப்பதற்கும் ஆண்டு தோறும் 4000 கோடி ரூபாயும், அதேபோல, தேசிய நெடுஞ்சாலை பிரிவில் (அலகு) 1,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த இரண்டு அலகுகளிலும் ஆண்டுக்கு 5,000 கோடி என கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சாலை அமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 50,000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில், சாலை பாதுகாப்பிற்காக மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 4,000 கோடி ஒதுக்கப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளனர். இந்த பணிகளில் 50 சதவீதம் கூடுதல் மதிப்பு என்பதால் சுமார் 2,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

அது, துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடிக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் பங்கு பிரிக்கப்பட்டுள்ளன. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தலைமைப் பொறியாளராக இருந்த சாந்தி, தரக்கட்டுப்பாட்டு பிரிவின் மூலம் தரத்தை உறுதிப்படுத்த வேண்டிய நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பொறியாள ராக இருந்த கீதா ஆகிய இருவரின் மேற் பார்வையிலேயே இந்த ஊழல்கள் நடந்தன.

இப்போது தி.மு.க. ஆட்சியிலும், வேலூர் மாவட்டம் பானாவரம் -சேந்தமங்கலம் -கணபதி புரம் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் வரை உலோக தடுப்பான் அமைத்தல் பணிக்காக காண்ட் ராக்டர் பாண்டித்துரையை தேர்வு செய்துள்ளனர். இந்த பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை நிர்ணயித்த தோராய மதிப்பு 48 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய். டெண்டரில் ஹரிவே லைன்ஸ், மகாலஷ்மி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன், எஸ்.குணசேகரன், எஸ்.டி.செல்வம் ஆகிய 4 பேர் கலந்துகொண்டனர். டெண்டர் திறக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதில் ஒரிஜினல் இ.எம்.டி. தொகையை காட்டாததால் மகாலஷ்மி கன்ஸ்ட்ரக்ஷனின் டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மற்ற மூவரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. இதில் ஹரிவே லைன்ஸ் நிறுவனம் 48,59,111 ரூபாய் கோட் பண்ணியிருந்தது. நெடுஞ்சாலை துறை நிர்ணயித்திருந்த தொகையை விட 0.020 சதவீதம் இது குறைவு. மற்ற இரண்டு காண்ட்ராக்டர்களின் முறையே 49,30,069 (1.440 சதவீதம் ), 50,05,886 (3.000 சதவீதம்) கூடுதல் தொகையை கோட் பண்ணியிருந்தனர். இதனால், நெகோசியேஷனுக்கு தகுதி இல்லை என அவர்கள் இருவரையும் நிராகரித்து விட்டு ஹரிவே லைன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்திருக்கிறார் கோட்டப் பொறியாளர்.

vvஅதேபோல,சதுரங்கப்பட்டினம் -செங்கல் பட்டு -காஞ்சிபுரம் -அரக்கோணம் -திருத்தணி சாலையில் கேண்டிலிவர் காண்ட்ரி போர்ட் அமைப்பதற்காக 45 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பி லான டெண்டர் கோரப்பட்டது. இதிலும் பாண்டித்துரையின் ஹரிவே லைன்ஸ் உட்பட மேற்கண்ட 4 காண்ட்ராக்டர்களே விண்ணப்பித்த னர். இதிலும், ஹரிவே நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். வாலாஜா -சோளிங்கர் -அரக்கோணம் சாலையில் கேண்டிலிவர் காண்ட்ரி போர்ட் அமைக்க 29.07 லட்சம் மதிப்பிலான டெண்டரும் ஹரிவே லைன்ஸ் நிறுவனத்திற்கே கிடைத்துள்ளது.

இவை தொடர்பான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டு நாம் விசாரித்தபோது,”"சாலை பாது காப்பு பணிகளுக்கான டெண்டர்கள் அனைத்தை யும் எடப்பாடிக்கும் அதிகாரிகளுக்கும் கப்பம் கட்டிவந்த பாண்டித்துரையிடமே ஒப்படைப்பதற் கான முதல் கட்டம்தான் வேலூர் கோட்டத்தில் நடந்துள்ளது. மேற்கண்ட பணிகளுக்கான எல்லா டெண்டர்களிலும் குறிப்பிட்ட 4 பேர்தான் விண் ணப்பிப்பாங்களாம்; ஒரே மாதிரியாகத்தான் தொகையை கோட் பண்ணுவாங்களாம்; ஒரே கார ணங்களுக்காகவே மற்ற மூவரும் நிராகரிக்கப்பட்டு ஹரிவே லைன்ஸ் நிறுவனம் மட்டுமே முறைப்படி தேர்வு செய்யப்படுமாம். ஆக... எடப்பாடி ஆட்சி யில் நடந்த அதே கூத்துதான் தி.மு.க. ஆட்சியிலும் நெடுஞ்சாலைத்துறையில் நடக்கிறது. ஊழல் மற்றும் கமிசனின் அளவில் மட்டும் ஏற்ற இறக்கம் உண்டு''”என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவை தொடர்புகொண்டு கேட்டபோது, "கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டரில் நடந்த எந்த தவறுகளும் நடக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அதனால், தவறுகள் நடக்காது. எடப்பாடி ஆட்சியில் நடந்த ஊழல்கள் களையப்படும். முந்தைய ஆட்சியில் சாலை பாதுகாப்பு பணிகளில் குறிப்பிட்ட ஒரு நபரின் ஆதிக்கமே இருந்துள்ளது. கோட்டம்வாரியாக பணிகள் பிரிக்கப்பட்டு காண்ட்ராக்ட் கொடுக் கப்பட்டதால்தான் ஊழல்கள் மலிந்துவிட்டன. அதையெல்லாம் மாற்றி தமிழகம் முழுவதும் 8 சர்க்கிள் இருப்பதால், சர்க்கிள் மூலமாக பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் டெண்டர் நடைமுறைகளை மாற்றச் சொல்லியுள்ளேன். இதன் மூலம், தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பரவலாக பணிகள் கிடைக்க வாய்ப்புண்டு! டெண்டர் முறைகேடுகள் எதுவும் நடக்காது" என்கிறார் உறுதியாக.