அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகாரச் சண்டையால் திட்டமிட்டபடி ஜூலை 11-ல் பொதுக்குழு நடக்குமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், அதே உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சில் எடப்பாடியின் வியூகத்தை உடைத்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். இதனை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் எடப்பாடி.
மூத்த வழக்கறிஞர்களிடம் அ.தி.மு.க. சட்டவிதிகள், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடந்த மாற்றங்கள், பொதுக்குழு-செயற்குழு திருத்தங்கள் மற்றும் முடிவுகள் என அனைத்தையும் விவாதித்து வருகிறார் மனோஜ்பாண்டியன். இந்த நிலையில், "அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக யார் தடை கோரினாலும் எங்களின் தரப்பு கருத்துக்களை கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது' என உச்சநீதி மன்றத்தில் கேவியெட் மனு தாக்கல் செய்திருக்கிறார் பன்னீர்செல்வம். தனது மனுவுக்காக வாதாட அரசியல் வழக்கு களை கையாண்ட சீனியர்களை நியமிக்க டெல்லி சோர்சை அணுகி யுள்ளார். இதனால், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது உச்சநீதிமன்றத்தில் விவாதங் கள் அனல்பறக்கும் என்கி றார்கள் அ.தி.மு.க. வழக் கறிஞர்கள். இதற் கிடையே நீதிமன்றத் தில் தங்களுக்கு சாதகமான தைப் பெற இரு தரப்புமே பா.ஜ.க. மேலிடத்தில் கெஞ்சிக்கொண்டிருக்கின்றன.
எடப்பாடி மீது மோடி காட்டம்!
ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இரு வரையும் ஒரே தட்டில் வைத் திருந்த பா.ஜ.க. தலைமை, சமீபத்தில் எடப்பாடிக்கு எதிராக கோபம் காட்டியுள்ளது என் கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர்கள், "தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில், எடப் பாடியின் நண்பர். அண்மையில் ராகுல்காந்தியை சந்தித்த சுனில், அவரது போனிலிருந்து எடப் பாடியை தொடர்புகொண்டு ராகுலிடம் கொடுத்திருக்கிறார். ராகுலும்-எடப்பாடியும் 15 நிமி டங்கள் பேசியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் தங்களின் வேட்பாளரை ஆதரிக்க எடப்பாடியிடம் கேட்டுக் கொண்ட ராகுல், "பா.ஜ.க.வுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது' என கேட்க, எதிர்மறையாக சொல்லியிருக்கிறார் எடப்பாடி. மேலும், "பா.ஜ.க.வுடன் தி.மு.க. நெருங்குகிறது; நீங்கள் எச்ச ரிக்கையாக இருங்கள்' என எடப்பாடி சொல்ல, ராகுல்காந்தி அதற்கு சிரித்திருக்கிறார்.
இதனை மோப்பம் பிடித்த மத்திய உளவுத்துறை, மோடிக்கு தகவல் அனுப்பும்போது, எதிர் காலத்தில் காங்கிரஸ் பக்கம் அ.தி.மு.க. போவதற்கு வாய்ப் பிருக்கிறது. எடப்பாடி நம்பகத் தன்மையற்ற தலைவர் என்றெல் லாம் போட்டுக் கொடுத்துள்ளது. இதனையறிந்து எடப்பாடி மீது கோபம்கொண்ட பா.ஜ.க. தலைமை, ஓ.பி.எஸ்.ஸை தொடர்புகொண்டு சில பல விசயங்களைச் சொல்ல, பா.ஜ.க. ஏற்பாட்டிலேயே அந்த நள்ளிரவில் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார் ஓ.பி.எஸ். அவருக்கு சாதகமான தீர்ப்பும் கிடைத்தது. இதையெல்லாம் புரிந்து சுதாரிப்பதற்குள் பொதுக்குழுவில் என்னென்னமோ நடந்துவிட்டது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
பதவிக்கு அடிதடி!
பொதுக்குழுவை மீண்டும் எப்படியாவது நடத்தி பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என ராப்பகலாக எடப்பாடி யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சியில் பதவி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்கள் சீனியர்கள். அண்மையில் எடப்பாடி வீட்டில் நடந்த ஆலோசனையில், கட்சியின் பொருளாளர் பதவியை கைப்பற்ற பொன்னையன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய 4 பேரும் மல்லுக்கட்டுகிறார்கள். அதேபோல, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும்போது இணைப்பொதுச் செயலாளர் பதவியையும் உருவாக்க வேண்டும். அந்த பதவி தனக்கு வேண்டும் என ஜெயக்குமார் ஒரு குண்டை வீச, அதற்கு மற்றவர்களும் ஒத்துழைக்க அதிர்ந்துபோயிருக்கிறார் எடப்பாடி.
உடனே சுதாரித்த அவர், "அ.தி.மு.க.வில் இனி இணை என்ற பேச்சே கூடாது. துணைப் பொதுச்செயலாளர் வேண்டுமானால் 4 பேரை நியமிக்கலாம். யார்-யார் என்பதை பொதுக்குழுவுக்கு பிறகு முடிவு செய்யலாம்' என சொல்லியிருக்கிறார். இருப்பினும் பொருளாளர், இணைப் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் பதவிகளுக்காக சீனியர்கள் தரும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், இவர்கள் யாருமே நம்மை சில நாட்களுக்கு சந்திக்கக்கூடாது என திட்டமிட்டே, மனைவிக்கும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று என சொல்லி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் எடப்பாடி.
பா.ஜ.க. கிடுக்கிப்பிடி!
மோடியும் அமித்ஷாவும் தன்மீது கோபமாக இருப்பதை யறிந்து ஆடிட்டர் குருமூர்த்தியை தொடர்புகொண்டிருக்கிறார் எடப் பாடி. ஆனால், ராகுலிடம் அவர் பேசியதை அறிந்ததால் எடப்பாடி யின் போன்காலை அட்டெண்ட் பண்ணவில்லை அவர். இதனைத்தொடர்ந்து தனது டெல்லி லாபி மூலம், பா.ஜ.க. தலை மையை சமாதானம் செய்ய முயற்சித்தார் எடப்பாடி. இரண்டுநாள் இடைவெளிக்குப் பிறகு எடப்பாடியை தொடர்பு கொண்ட அவரது டெல்லி லாபி, ’"உங்கள் அரசியலில் நேர்மையில் லைன்னு டெல்லி நினைக்கிறது. ராகுல்காந்தியிடம் நீங்கள் பேசியதும், அவருக்கு நீங்க கொடுத்த உத்தரவாத மும் அறிந்து கோபமாக இருக்கி றார்கள். இதனை எப்படி சரிசெய்வது என எங்களுக்கு புரியவில்லை.
அதேசமயம், பா.ஜ.க. தலைமைக்கு நீங்கள் லாயலிஸ்ட்டாக இருப்பது உண்மைன்னா… நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தொடரும், கூட்டணிக்கு தலைமை பா.ஜ.க.தான். அந்த தேர்தலில் அமோக மாக மீண்டும் பா.ஜ.க. ஜெயிக்கும்; மோடிதான் பிரதமர் ஆவார் என்று ஒரு அறிக்கை கொடுங் கள் என அமித்ஷா தரப்பிலிருந்து எதிர்பார்க் கிறார்கள். அப்படி ஒரு அறிக்கையை நீங்கள் கொடுத்தால் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரும். செய்கிறீர்களா?' என்று சொல்ல, மிரண்டு போன எடப்பாடி, அப்படி ஒரு அறிக்கையை எப் படி தரமுடியும்? என்று தவித்தபடி இருக்கிறார். அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்' என்கிறார்கள் ரகசியமறிந்தவர்கள்.
ஓ.பி.எஸ். வியூகம்!
இந்த சூழலில், மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் இல்லத்துக்கு 28-ந் தேதி ரகசியமாக சென்றிருக்கிறார் ஓ.பி.எஸ். இதற்காக தனது வழக்கமான காரை பயன்படுத்தாமல் வேறு காரை பயன்படுத்தியிருக்கிறார். அந்த பத்திரிகையாளரின் வீட்டில் ஆடிட்டர் குருமூர்த்தி இருந்துள்ளார். இருவரும் ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக ஆலோசித்திருக்கிறார்கள். இதனையடுத்து, "எடப்பாடிக்கு நெருக்கமான முக்கிய மா.செ.க்கள் 20 பேரை கட்சியிலிருந்து நீக்கவும், அந்த இடத்தில் புதிய மா.செ.க்களை நியமிக்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடியால் நியமிக்கப்பட்ட மா.செ.க்களுக்கு எதிராக அரசியல் செய்து வரும் நபர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கவும், அப்படி நடந்தால் என்ன மாதிரியான ரியாக்ஷன் வரும் என்றெல்லாம் ஓ.பி.எஸ். தரப்பில் ஆலோசிக்கப் படுகிறது. ஒருங்கிணைப் பாளர் என்ற முறையில் நீக்கவும், சேர்க்கவும் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்கிறாராம் ஓ.பி.எஸ். புதிய நியமனங்கள் மூலம் சுமார் 2 லட்சம் பிரமாணப் பத்திரங் கள் தயாரித்து அதனை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைப்பதே ஓ.பி.எஸ்.ஸின் வியூகமாக இருக்கிறது' என்கிறார்கள். ஆனால், இது வொர்க்-அவுட் ஆகுமா? என சந்தேகம் கிளப்புகிறார்கள் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள்.
பா.ஜ.க.-சசிகலா மறைமுக டீல்?
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரையும் வெவ்வேறு ரூட்டுகளில் கையாளும் பா.ஜ.க. தலைமை, சசிகலாவையும் விட்டுவைக்கவில்லை. சமீபகாலமாக டெல்லியின் கண் அசைவு அவருக்கு கிடைத்திருக்கிறது என்கிறது உளவு வட்டாரங்கள். இதற்கு காரணம், சசிகலா தந்த ஒரு உத்தர வாதம்தான். சசிகலாவுக்காக பா.ஜ.க. தலைமை யிடம் பேச டெல்லியில் சில வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த களேபரங்களை வைத்து தனது டெல்லி லாபி மூலம் பா.ஜ.க. தரப்பில் பேசியிருக்கிறார் சசிகலா. அதாவது, "அ.தி.மு.க.வை என் தலைமைக்குள் கொண்டுவாருங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் சீட் ஷேரிங்கிலிருந்து எல்லாவற்றிலும் பா.ஜ.க.வுக்கு நான் ஒத்துழைக்கிறேன். முடக்கி வைக்கப்பட்டிருக்கும் என் சொத்துக்களை ரிலீஸ் செய்ய உதவுங்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் செலவுகளையும், நீங்கள் விரும்புகிற வேறு ஒரு மாநிலத்தின் பா.ஜ.க.வுக்கான தேர்தல் செலவுகளை யும் நான் பார்த்துக்கொள்கிறேன்' எனச் சொல்லி யுள்ளார். பா.ஜ.க. தலைமை, ஜனாதிபதி தேர்த லுக்கு பிறகு பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது.
அ.தி.மு.க.வை இந்தளவுக்கு பாடாய்ப் படுத்தும் பா.ஜ.க. தலைமை, ஒரு கட்டத்தில் இரட்டை இலையை முடக்கி மூன்று தரப்பையும் ஒன்றிணைத்து, அதன்பிறகு தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கிறது. எம்.ஜி.ஆரால் உரு வாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் நிலையறிந்து கண்ணீர் வடிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!