எம்.ஜி.ஆர். சொன்ன தற்காக கட்சிக்கொடியை கைகளில் பச்சை குத்திக் கொண்ட அ.தி.மு.க. தொண்டர் களில் ஒருவராகவும், அ.தி.மு.க. வின் வளர்ச்சிக்கு உழைத்தவர் களில் ஒருவருமானவர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன். ஓ.பி.எஸ். அணியிலிருந்தவர், அதிலிருந்தும் ஒதுங்கி யிருந்து, தற்போது த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொண் டுள்ளார். இதுகுறித்து கு.ப.கிருஷ் ணன் நம்மிடம் மனம்திறந்து பேசினார்.
"அண்ணாவின் கொள்கையோடு, எம்.ஜி.ஆர்., ஜெ. ஆகியோருடன் பயணித் தவன். இப்போதுள்ள எடப்பாட
எம்.ஜி.ஆர். சொன்ன தற்காக கட்சிக்கொடியை கைகளில் பச்சை குத்திக் கொண்ட அ.தி.மு.க. தொண்டர் களில் ஒருவராகவும், அ.தி.மு.க. வின் வளர்ச்சிக்கு உழைத்தவர் களில் ஒருவருமானவர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன். ஓ.பி.எஸ். அணியிலிருந்தவர், அதிலிருந்தும் ஒதுங்கி யிருந்து, தற்போது த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொண் டுள்ளார். இதுகுறித்து கு.ப.கிருஷ் ணன் நம்மிடம் மனம்திறந்து பேசினார்.
"அண்ணாவின் கொள்கையோடு, எம்.ஜி.ஆர்., ஜெ. ஆகியோருடன் பயணித் தவன். இப்போதுள்ள எடப்பாடி, அ.தி. மு.க.வை பா.ஜ.க.விடம் அடமானம் வைத்துவிட் டார். கடந்த வாரம் நடந்த தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டம் பெரும் வேதனையை அளித்தது. அந்த மேடையில் எம்.ஜி.ஆர்., -ஜெ. படங்கள் இல்லை. படங்களை வைக்கக்கூட கூசுகின்ற, அச்சப் படுகின்ற எடப்பாடி எப்படி மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெ. ஆட்சியை கொடுக்க முடியும்? அந்த மேடையைப் பார்த்ததிலிருந்து எனக்கு வேதனை தாங்க முடியவில்லை. அதனால் உடனே த.வெ.க.வுக்கு வந்துவிட்டேன்.
பா.ஜ.க.தான் உங்கள் எதிரி என்கிறீர்கள். ஆனால் ஒன்றிய அரசைப் பற்றியோ, மோடியைப் பற்றியோ விஜய் பேசுவதில்லையே?
அவர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கு தீராத இடைஞ்சல் உள்ளது. ஒன்று சி.பி.ஐ., இன்னொன்று தணிக்கைத்துறை. கரூரில் சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவர்களும் கரூரில் இருக்கிறார்கள். சி.பி.ஐ. அலுவலகமும் கரூரில் உள்ளது. அப்புறம் எதற்காக டெல்லிக்கு அழைத்து விசாரிக்க வேண்டும்? அதேபோல, சினிமாவில் தேவையில்லாத காட்சியை துண்டிக்கச் சொல்லலாம். ஆனால் அதை செய்யவில்லை. முதலில் 5 பேர் குழு படம் பார்க்கிறது. அப்புறம் பா.ஜ.க.விலிருந்து வந்த ஒரு நடிகை படம் பார்க்கிறார். எந்த பதிலும் சொல்லவில்லை. இரு சம்பவங்கள் பற்றியும் விஜயால் பேச முடியாது. ஏனென்றால், நீதிமன்றத்தில் உள்ளது.
ஒன்றிய அரசின் செயல்பாடுகளிலுள்ள குறைகளையாவது சுட்டிக்காட்டி பேசலாமே?
இன்னும் தேர்தலுக்கு 3 மாதம் இருக்கு. பேசியாகணும், பேசுவார்.
விஜய் தான் பேசவில்லை. நீங்களாவது த.வெ.க. மேடைகளில் நின்று பா.ஜ.க.விற்கு எதிராக பேசுவீர்களா?
நான் பா.ஜ.க.வால் நேரடியாக பாதிக்கப்பட்டவன். அதைப் பேச கட்சி அனுமதி அளிக்கும். எனக்கு யாரும் முட்டுக்கட்டை போட முடியாது. என் பேச்சு சுதந்திரமாகத் தொடரும்.
உங்களுக்கு முன்பு இணைந்த செங்கோட்டை யனுக்கே அங்கு உரிய அங்கீகாரமில்லைன்னு தர்மசங்கடமாக இருப்பதாகக் கூறுகிறார்களே?
நான் த.வெ.க.விற்கு வந்து சில நாள்தான் ஆகிறது. அதனால அதுபற்றி பேச முடியாது. ஆனால் நான் என் நிலையிலிருந்து மாறமாட்டேன்.
தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி யிட முடிவு செய்துள்ளீர்கள்?
நான் எந்த தொகுதி கேட்டாலும் கொடுப்பார் கள். அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.
சந்திப்பு: -இரா.பகத்சிங்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us