எடப்பாடி அரசின் ரூ.2500 ஓட்டாகுமா நோட்டு? -மக்கள் மனநிலை!

pongal money

மிழர்களின் திருநாளான "தைப் பொங்கல்' சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பரவல், வேலைவாய்ப்பு இல்லாத சூழல், புயல் மற்றும் மழையால் பாதிப்பு என தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே, கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 தரப்பட்ட நிலையில், தற்போது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன்கடைகளில் ரூ.2500 பெறும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், துணிப்பையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி மற்றும் 5 கிராம் ஏலக்காய் போன்றவை வழங்கப்படுகிறது.

pongal money

-தமிழக அரசின் இந்த தாராளம், "மக்கள் மீதான அக்கறை' என ஆளும்கட்சியினரால் பாராட்டப்பட்டாலும், எதிர்க்கட்சியினரோ, ‘"கொரோனா பரவலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், ரூ.7000 நிவாரணம் கொடுக்கச் சொன்னபோது, கஜானாவில் பணமில்லை என்று சொன்னார்கள். தற்போது ரூ.2500 கொடுப்பதை, தேர்தலுக்கான லஞ்சம் என்றே குற்றம் சாட்டு கிறோம்'’ என்கிறார்கள்.

தமிழக அரசு அள்ளித்தரும் இலவசங்களைக் கவனித்து வரும் பொருளாதார வல்லுநர்களோ, "தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 59 ஆயிரத்து 346 கோடி ரூபாயாக உள்ளது. ஏற்கனவே, ரூ.4.56 லட்சம் கோடி கடன் இருக்கிறது. தற்போது பொங்கல் பரிசு என்ற பெயரில் 5 ஆயிரத்து 150 கோடி செலவு செய்யப்படுகிறது. எப்படியும், ஆட்சி முடிவதற்குள் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக எடப்பாடியின் அரசு உச்சம் தொட்டுவிடும்''’ எனச் சுட்டிக்காட்டுகின்ற

மிழர்களின் திருநாளான "தைப் பொங்கல்' சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பரவல், வேலைவாய்ப்பு இல்லாத சூழல், புயல் மற்றும் மழையால் பாதிப்பு என தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே, கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 தரப்பட்ட நிலையில், தற்போது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன்கடைகளில் ரூ.2500 பெறும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், துணிப்பையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி மற்றும் 5 கிராம் ஏலக்காய் போன்றவை வழங்கப்படுகிறது.

pongal money

-தமிழக அரசின் இந்த தாராளம், "மக்கள் மீதான அக்கறை' என ஆளும்கட்சியினரால் பாராட்டப்பட்டாலும், எதிர்க்கட்சியினரோ, ‘"கொரோனா பரவலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், ரூ.7000 நிவாரணம் கொடுக்கச் சொன்னபோது, கஜானாவில் பணமில்லை என்று சொன்னார்கள். தற்போது ரூ.2500 கொடுப்பதை, தேர்தலுக்கான லஞ்சம் என்றே குற்றம் சாட்டு கிறோம்'’ என்கிறார்கள்.

தமிழக அரசு அள்ளித்தரும் இலவசங்களைக் கவனித்து வரும் பொருளாதார வல்லுநர்களோ, "தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 59 ஆயிரத்து 346 கோடி ரூபாயாக உள்ளது. ஏற்கனவே, ரூ.4.56 லட்சம் கோடி கடன் இருக்கிறது. தற்போது பொங்கல் பரிசு என்ற பெயரில் 5 ஆயிரத்து 150 கோடி செலவு செய்யப்படுகிறது. எப்படியும், ஆட்சி முடிவதற்குள் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக எடப்பாடியின் அரசு உச்சம் தொட்டுவிடும்''’ எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொங்கல் பரிசாகப் பணமும் பொருட்களும் மக்களைத்தானே சென்றடைகின்றன. தைத் திருநாளைக் கொண்டாடும் மக்களின் கருத்தறிய களமிறங்கினோம்.

மதுரையில் டீ கடை நடத்தும் செல்வம், “""இந்தப் பணத்த வச்சு எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்? எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்குவோம். ஆனா.. மயங்க மாட்டோம்''’என்று கூற, முருகேஸ்வரியோ... ""கொடுக்கிறதுதான் கொடுக்கிறாங்க. பத்தாயிரமா கொடுத்திருக்கலாம்''’என்றார் எதிர்பார்ப்புடன்.

pongal money

திண்டுக்கல் பானுமதி, “""ஆயிரம் தருவாங்கன்னு நெனச்சோம். கூடுதலா கிடைச்சிருக்கு. கொடுக்கிறதுல அம்மாவையே மிஞ்சிட்டாரு எடப்பாடி. அப்படியே, இந்தக் கல்விக் கடனையும் ரத்துபண்ணிட்டாங்கன்னா புண்ணியமா போகும்''’என்றார். வத்தலக்குண்டு புதுக்கோட்டைவாசியான சுதா, “""அட... இருபத்தஞ்சாயிரம் கொடுத்தாலும் அடுத்த முதல்வரா எடப்பாடி வரமுடியாது. மனசுக்குள்ள ஒரு கணக்கோடு பணம் தர்றாங்கன்னு தெரியாமலா இருக்கோம்? யாரு அப்பன் வீட்டுப் பணம்? ரேஷன் கடைல பணத்த வாங்கிட்டு ரெட்ட இலைக்கு ஓட்டு போடுவோம்னு நெனச்சா தொலைஞ்சீங்க. என்னை மாதிரி கிராமத்து வாக்காளர்கள் எடப்பாடியோட நெனப்ப சுக்குநூறா இந்த தேர்தல்ல உடைப்பாங்க''’என்று கொதித்துப்போய் பேசினார்.

சீலப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ""ரேஷன் அட்டைங்க குடும்பத் தலைவர் பேர்ல இருக்கு. அதுனால ரொம்ப குடும்பங்களுக்கு இந்தப் பணம் போய்ச்சேரவே இல்ல. பணத்த வாங்கின ஆம்பளைங்க, பொண்டாட்டி கையில கொடுத்தாத்தானே? முக்காவாசிப்பேரு நேரா டாஸ்மாக் கடைக்குத்தான் போறாங்க. எனக்கு தெரிஞ்சத சொல்லுறேன். மொத்தத்துல இந்தப் பணம் கொடுத்ததே வேஸ்ட்டு''’என்றார் ஒரே போடாக.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் ஊரான பெரியகுளத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ""பின்ன என்னங்க? "சுடுகாட்டுல வச்சு அந்தாளு அப்படி பேசலாமா?'’என்று ஆத்திரத்தை இறக்கினார். “மனோகரன் எனக்கு மாமா முறை. உடம்பு சரியில்லாம ஆறாம் தேதி செத்துட்டாரு. அடக்கம் பண்ணுறதுக்கு சொந்தக்காரங்க... கட்சிக்காரங்கன்னு எல்லாரும்தான் போனோம். அப்ப ஆளும்கட்சி பழனி என்ன சொன்னாரு தெரியுமா? ‘ம்ஹும்... காந்தியம்மா (இறந்த மனோகரனின் மனைவி) பொங்கல் பரிசுப் பணம் வாங்கிருச்சு. ஆனா பாருங்க.. புருஷன் திடீர்னு செத்துப் போயிட்டாரு. ஒரு ஓட்டு போச்சுன்னு எல்லாருக்கும் கேட்கிற மாதிரி பேசிட்டாரு. சொந்தக்காரங்க எல்லாருக்கும் வந்துச்சே கோபம். ‘என்னமோ இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வீட்டுப் பணத்த கொடுத்த மாதிரில்ல பேசுற. செத்தவரு உனக்கும் சொந்தம்தான். உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லியான்னு சத்தம் போட்டோம்'' என்றார் அதே சீறலுடன்.

dd

காரைக்குடியில் டெய்லர் வேலை பார்க்கும் சாரதாவின் அப்பா அரசு ஊழியர் ஆவார். பணிமூப்பு அடைந்தும், நிதி நிலைமையைக் காரணம் காட்டி அவருக்கு ஓய்வு கொடுக்காத அரசு, பணி வயது வரம்பினை நீட்டித்துள்ளது. “""பொங்கல் பரிசுன்னு இத்தனை கோடிய கவர்மெண்ட் தண்டமா தூக்கிக் கொடுக்குது. ஆனா... ரிட்டயர்ட் ஆனவங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்கிறதுக்கு துப்பில்ல. போகாத ஊருக்கு வழி தேடுற மாதிரிதான், கவர்மெண்டோட செயல்பாடு இருக்கு''’என்று தன்னுடைய குடும்பக் கஷ்டத்தை மனதில் வைத்துப் பேசினார். கண்டரமாணிக்கம் கனக கருப்பையா, ""பணத்த கொடுத்தா ஓட்டு விழுந்திரும்கிற நப்பாசை தான். நம்ம நாட்டோட நெலம ரொம்ப கேவலமா இருக்கு. அனேக மக்களை ஓட்டுக்கு பணம் வாங்குற அடிமை யாக்கிட்டாங்க''’என்று நொந்துகொண்டார்.

விருதுநகரில் ஓய்வுபெற்ற நூலகர் முருகேசன், ""எடப்பாடி, தன்னோட அரசியல் சவுகரியத்துக்காக பொங்கல் பரிசு கொடுத்திருக்காரு''’என்றார். அல்லம்பட்டி டீ கடை மாரியப்பனோ ""கொரோனா காலத்துல கொடுத்திருந்தா மனிதநேயம்னு பாராட்டிருக்கலாம். இப்ப கொடுக்கிறது தப்பான செயல். இதுக்குப் பேரு ஓட்டரசியல்''’என்று உறுதியாகச் சொன்னார். பாவாலி மீனா “""ரொம்ப... ரொம்ப உதவி பண்ணி ருக்காரு. இந்தவாட்டி எல்லார் வீட்லயும் எடப்பாடி பொங்கல்தான்'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

pongal money

கூலித்தொழிலாளியான தியாகராஜன் ""ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும் ரெண்டாயிரத்து ஐநூறு நல்லாவே வேலை செய்யும். இது அட்வான்ஸ்தான். வெறும் டிரெய்லர்தான். ஓட்டு போடுற நாள் வர்றப்ப மெயின் பிக்சரை ஓடவிடுவாரு எடப்பாடி. அவருக்கு முகராசி இருக்கு''’என்றார் விசுவாசத்துடன்.

சங்கரன்கோவில் நெசவாளரான மாணிக்கம், “""தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவு வரணும்னு நினைக்கிறோம். ஆட்சி மாற்றம் நடக்கணும்கிற எங்க எண்ணத்தை மாத்துறதுக்குத்தான் இந்தப் பொங்கல் பரிசைத் தர்றாங்க போல''’என்றார் குரலில் சுரத்தில்லாமல். கோமதியோ, எதிர்காலம் குறித்த கவலையில் பேசினார். “""ஆட்சில இருக்கவங்க கோடி கோடியா சுருட்டுறாங்க. பொங்கல் பரிசுங்கிற பேர்ல நாங்க கட்டுற வரிப்பணத்துல இருந்து எங்களுக்கு தண்ணி காட்டுறாங்க. இங்கிட்டு கொடுத்துட்டு அங்கிட்டு வெலய ஏத்தி ஒன்னுக்கு ரெண்டா வசூல் பண்ணிடுவாங்க''’என்றார்.

பாண்டீஸ்வரியும் ""கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு ஒடைச்ச மாதிரில்ல இருக்கு''’என்று புலம்பினார். "நாங்க என்ன வெவரம் பத்தாதவுகளா?'’என்று கேட்ட பாஞ்சாலி "இன்னும் நாலு மாசத்துல தேர்தல் வரலைன்னா மக்களுக்கு இந்த பொங்கல் கவனிப்பு சத்தியமா இருக்காது''’என்று அடித்துப் பேசினார்.

pongal money

தக்கலையைச் சேர்ந்த வேலாயுதன் “""என்னை மாதிரி அன்றாடங்காச்சிக்கு இம்புட்டு பணம் கிடைக்கிறதே பெரிசு'' என்றார். கோழிபோர்விளை அனிதா, ""நானும் அவரும் தினக்கூலிங்க. இந்தப் பணத்தால இந்த வருஷம் சந்தோஷப் பொங்கல்தான். மவராசன் எடப்பாடி நல்லாயிருக்கணும். கலைஞர், டி.வி.யும் கேஸ் அடுப்பும் கொடுத்தாரு. இப்ப வரைக்கும் எங்க வாழ்க்கை அதுலதான் ஓடுது. அப்ப கலைஞரை வாழ்த்தினோம். இப்ப எடப்பாடிய வாழ்த்துறோம். அவ்வளவுதான். டி.வி. கொடுத்ததுக்காக அப்ப தி.மு.க.வுக்கு ஜனங்க ஓட்டு போட்டாங்களா?''’என்று புதிர் போட்டார்.

"பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகள் முன்பாக விளம்பர பேனர்கள் இருந்தால் அகற்றவேண்டும்' என்று உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் மீதுள்ள பொங்கல் பாசத்தால், அந்த உத்தரவு, பல இடங்களிலும் மீறப்பட்டிருந்தது. ரேசன் கடைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். புன்னகை முகங்கள் பளிச்சிட்டன.

பொங்கல் பரிசு தேர்தல் அரசியலை நன்கறிந்த மக்களும் உள்ளுக்குள் சிரிக்காமல் இல்லை.

-ராம்கி, சக்தி, அண்ணல், மணிகண்டன், நாகேந்திரன், இராம்குமார்

nkn160121
இதையும் படியுங்கள்
Subscribe