மிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் என பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன. அதனால்தான் சில மணிநேரம் முன்பாக அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியது எடப்பாடி அரசு. அதுமட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக அரசின் பல துறைகளில் அமைச்சர்களும் அதிகாரிகளும் இணைந்து தங்களின் கடைசி நேர கஜானாவை நிரப்பி வருகிறார்கள் என்று பல புகார்கள் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு வருகின்றன.

Advertisment

ee

இதனையறிந்து கோட்டையிலுள்ள உயரதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ""’நடத்தை விதிகள் அமலானதற்குப் பிறகு பல டெண்டர்கள் பல துறைகளில் இறுதிச் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, அரசின் சுகாதாரத்துறையின் கட்டுப் பாட்டிலுள்ள பல்வேறு மருத்துவ நிறுவனங்களுக்கு ஹேமட்டோலாஜி அனலைசர் கருவிகளை வாங்குவதற் காக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான டெண்டருக்கான பேரம் படியாததால், பலமுறை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 2-ஆம் தேதியை மறு டெண்டருக்கான கடைசி நாளாக அறிவித்திருந்தது தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம். தேர்தல் தேதி லேட்டாக அறிவிக்கப்படும் என நினைத்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் முடிவு இது. முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவிப்பு வந்து விட்ட நிலையில், நடத்தை விதிகளை அலட்சியப் படுத்திவிட்டு டெண்டரை திறந்து, ஹேமட்டோலாஜி அனலைசர் கருவிகளை சப்ளை செய்யும் காண்ட் ராக்டரை அமைச்சர் தரப்புக்கு நெருக்கமான நிறுவனத்துக்கு இறுதி செய்திருக்கிறார்கள்.

Advertisment

அந்த நிறுவனமோ சம்மந்த பட்ட கருவியை ஜப்பானிலுள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்துதான் சுகாதாரத்துறைக்கு சப்ளை செய்யும். ஆனால், அந்த ஜப்பான் நிறுவனமே நேரடியாக டெண்டரில் கலந்து கொள்ள, அதைக்கண்டு அமைச்சர் தரப்புக்கும் அதிகாரிகளுக்கும் செம அதிர்ச்சி. சில ஸ்பெசிஃபிகேசனைச் சுட்டிக்காட்டி ஜப்பான் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து, அமைச்சர் தரப்புக்கு வேண்டிய நிறுவனத்திற்கு இறுதி செய்தனர் அதிகாரிகள்.

டெண்டர் எடுத்த நிறுவனம், டெண்டரிலிருந்து விலக்கப்பட்ட ஜப்பான் நிறுவனத்திடம் பர்சேஸ் செய்ய முயற்சிக்க, ஜப்பான் நிறுவனமோ கருவிகளை தர மறுத்தது. அமைச்சரின் முக்கிய உதவியாளர் ஒருவரும், டெண்டர் விவகாரத்தில் அமைச்சருக்கு எல்லாமுமாக இருக்கும் மீடியேட் டர் ஆனந்தன் என்பவரும் கோதாவில் இறங்கி பஞ்சாயத்தை முடித்திருக்கிறார்கள். இப்படி நடத்தை விதிகளை புறக்கணித்துவிட்டு நிலுவையில் இருக்கும் டெண்டர்களை எல்லாம் இறுதி செய்து வருகிறது சுகாதார துறையின் மருத்துவ பணிகள் கழகம்''‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

Advertisment

ee

அதேபோல, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.) ஜூனியர் அசிஸ்டெண்ட், ஸ்டெனோ-டைபிஸ்ட், டைபிஸ்ட், ஃபீல்ட்மேன், மெசெஞ்சர் என 131 காலி பணியிடங்களுக்காக கடந்த ஜனவரியில் நேர்காணல் நடந்தது. "மார்ச் 15-க்குள் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடியாயிடும்' என்று 8 முதல் 15 எல் வரை பேரம் நடந்து வந்தது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதுமே பம்பரமாக சுழன்ற அதிகாரிகள் இரவோடு இரவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு போன்செய்து "நாளைக்கே வெயிட்டாக சென்னைக்கு வந்துவிட வேண்டும்' என உத்தரவிட்டனர். 131 பேருக்கும் முன்தேதியிட்டு (25-ந்தேதி) அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை இரவோடு இரவாக தயாரித்து, மறுநாள் காலையில் பணி நியமன ஆர்டரை கையிலேயே கொடுத்து வேலையில் இணைத்துவிட்டனர்.

ஆவின் நிறுவனத்தில் மேனேஜர், டெபுடி மேனேஜர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு15 எல் முதல் 30 எல் வரை பதவியின் தன்மைக்கேற்ப ரேட் ஃபிக்ஸ் செய்யப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டது. தில்லுமுல்லுகள் தொடர்பாக வந்த புகார்களின் மீது துறைச் செயலா ளர் கோபால் ஐ.ஏ.எஸ். நடவடிக்கை மேற்கொண்டு பணி நியமன ஆர்டர் வழங்கப்படாதவாறு செய்திருந்தார். தேர் தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் பற்றி கவலைப்படாமல், ஓவர் நைட்டில் முன் தேதியிட்டு ஆர்டர் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது ஆவின் நிர்வா கம். இட மாறுதல்களும் இதேபோல நடந்துள்ளன.

ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபால் ஐ.ஏ.எஸ்.சுடன் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமான பலராமன் மற்றும் சேதுபதி ஆகியோர் இணைந்து நடத்திய சட்டத்திற்கு புறம்பான விவகாரங்களை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹுவிற்கு புகாராக அனுப்பியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதித் விஜய். உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைச் செயலாளருக்கு கடந்த 2-ஆம் தேதி உத்தர விட்டிருக்கிறார் சத்யபிரதாசாஹு.

இப்படி நடத்தை விதிகளுக்கு புறம்பாக, பத்திரப்பதிவு, நெடுஞ்சாலை, பொதுப்பணி, போக்குவரத்து, தொழில், உயர்கல்வி, கனிம வளம், வணிகவரி உள்ளிட்ட பல துறைகளிலும் இப்படி பணி நியமனங்கள், பதவி உயர்வுகள், இட மாறுதல்கள், டெண்டர்கள் ஒதுக்கீடு என அரங்கேறியிருக்கிறது. இதன் மூலம் ஆட்சியாளர்களின் சூட்கேஸ்கள் ஏகத்துக்கும் நிரம்பி வழிந்துள்ளன என்கிறது கோட்டை வட்டாரம்.

""நடத்தை விதி மீறல்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பிரித்துப் பார்த்து பாரபட்சம் காட்டுகிற தேர்தல் ஆணையம், நடத்தை விதிகளே தேவையில்லை என அறிவித்துவிட்டால் ஆணை யத்தின் கௌரவமாவது மிஞ்சும்'' என்கிறார் வழக்கறிஞர் ஆதித்விஜய்.