Advertisment

கட்சியைக் கரைக்கிறார் எடப்பாடி! ஸ்டாலினை சந்திப்பேன்! -அதிரடி காட்டும் புகழேந்தி!

dd

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு ஷ்யூரிட்டி வழங்கியவரும், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.ஸால் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப் பட்டவருமான பெங்களூரு புகழேந்தி, அ.தி.மு.க.வின் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

அ.தி.மு.க.விலும் அ.ம.மு.க.விலும் தலைமை மீது அதிருப்தி கொண்டவர்கள் தி.மு.க. பக்கம் செல்கிறார்கள். ஜெயலலிதா விசுவாசியாக இருந்த நீங்கள் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

Advertisment

dd

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின்னர் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்தது. எப்படி இருந்தாலும் திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருக்கும் என்ற நிலை இருந்தது. இப்போது அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டார்கள். அ.தி.மு.க. கரைந்து வருகிறது. ஒரு கட்சியின் வரலாறு முடியப்போகிறது என்பதை இப்போது நடக்கும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டு கிறது. இந்தக் கட்சியை முடித்துவிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி போவார். அந்த நிலை ஏற்படும்போது தி

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு ஷ்யூரிட்டி வழங்கியவரும், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.ஸால் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப் பட்டவருமான பெங்களூரு புகழேந்தி, அ.தி.மு.க.வின் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

அ.தி.மு.க.விலும் அ.ம.மு.க.விலும் தலைமை மீது அதிருப்தி கொண்டவர்கள் தி.மு.க. பக்கம் செல்கிறார்கள். ஜெயலலிதா விசுவாசியாக இருந்த நீங்கள் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

Advertisment

dd

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின்னர் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்தது. எப்படி இருந்தாலும் திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருக்கும் என்ற நிலை இருந்தது. இப்போது அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டார்கள். அ.தி.மு.க. கரைந்து வருகிறது. ஒரு கட்சியின் வரலாறு முடியப்போகிறது என்பதை இப்போது நடக்கும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டு கிறது. இந்தக் கட்சியை முடித்துவிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி போவார். அந்த நிலை ஏற்படும்போது தி.மு.க. தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருக்கும் வரை திராவிட இயக்கம் காப்பாற்றப்படும். ஆனால் ஒருநாள் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழக்கும்போது தேசியக் கட்சிகள் உள்ளே வரும். தேசிய கட்சிகள் உள்ளே வந்தால் ஆபத்துதான். அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்கின்ற சக்தி இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். ஆகியோரிடம் இல்லை.

தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. கட்சியைக் காப்பாற்ற நிச்சயமாக வருவேன் என்கிறாரே?.

ஃபீல்டுக்கு வராமலேயே சசிகலா பேசுகிறார். அப்படிப் பேசும்போது தொண்டர்கள் அன்பாகத்தான் பேசுவார்கள். ஃபீல்டுக்கு வரவேண்டும். அப்படி வந்துவிட்டால், ஓ.பி.எஸ். எதுவும் கேட்க மாட்டேங்கிறார். இ.பி.எஸ். சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று வெறுத்துப் போனவர்கள் சசிகலா பக்கம் வர வாய்ப்புள்ளது.

கொங்கு பகுதியை டார்கெட் பண்ணி பா.ஜ.க. அங்கு வேலை செய்வதாகச் சொல் கிறார்கள். அ.தி.மு.க. வெற்றிபெற்ற இடங்களில் பா.ஜ.க. கவனம் செலுத்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க.வால்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தாராபுரம் தொகுதியில் நாட்டின் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தும் எல்.முருகன் தோல்வி யடைந்தார். அப்படிப்பட்ட இந்த பா.ஜ.க.வை இருவரும் தூக்கி சுமக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோது அந்தப் பகுதியில் அ.தி.மு.க. வளர்க்கப்பட்டது. அரங்கநாயகம், குழந்தைவேலு போன்றவர்களால் வளர்க்கப்பட் டது. எடப்பாடியோ, வேலுமணியோ கட்சியை வளர்க்கவில்லை. இவர்கள் சொல்வது பொய். கொங்கு பகுதி மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வில்லை. அ.தி.மு.க. என்ற கட்சிக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும்தான் வாக்களித்தார்கள். நான் சேலன்ஞ் பண்ணி சொல்கிறேன். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. இந்தப் பகுதியில் படுதோல்வியை சந்திக்கும். எடப்பாடிக்கு சவாலாகவே சொல்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வை கூட்டணியில் இருந்து கழட்டிவிடும் பா.ஜ.க.

ஊடக விவாதங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்க வேண்டாம் என ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரும் கூட்டறிக்கை வெளி யிட்டுள்ளார்களே?

பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படுகிறீர்கள், பா.ம.க.வைப் பார்த்து நடுங்குகிறீர்கள், இப்போது தி.மு.க.வைப் பார்த்து, அவர்கள் எழுப்பும் கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடுகிறீர்கள்... என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அதற்கு அ.தி. மு.க.வின் பதில் என்ன?. சரியோ, தவறோ உங்களை சுற்றிக்கொண்டே இருக்கிறது ஊடகம். அதற்குப் பதில் சொல்லுங்கள். மதியம் ஒரு அறிக்கை, இரவு ஒரு அறிக்கை. மாறி மாறி அறிக்கை. ஊடகத்தில் போய் உட்காரும் செய்தித் தொடர் பாளர்களால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை... தடுமாறுகிறார்கள். அதனால் இனிமேல் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி ஆகியோர் டி.வி. பேட்டியில் பங்கேற்க வேண்டும்.

"அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது, அதனை வெளிக்கொண்டு வருவேன்' என சொல்லியிருந்தீர்கள். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்களா?

உணவுத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்திருக்கிறேன். மார்க்கெட் டில் ஒரு கிலோ சர்க்கரை 37 ரூபாய், அதனை 47 ரூபாய்க்கு வாங்கியிருக் கிறார்கள். இது ஒரு உதாரணம்தான். இதேபோல் பல ஊழல் நடந்திருக்கிறது. இந்த துறையில்தான் ஊழல் அதிகம் நடந்திருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு போவேன். நான் விடமாட்டேன். பல்வேறு துறைகளிலும் ஊழல் நடந்திருக்கிறது. என்னால் சொல்ல முடியும். ஒரு சில அமைச்சர்கள் ஒரு லட்சம் கோடி வரை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஏற்கனவே ஊழல் தொடர்பாக ஆவணங்களை திரட்டியுள்ளார்கள் என செய்திகள் வருகிறது. என்னுடைய புகாரையும் சேர்த்துக்கொண்டால் அவர்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருக்கும். இப்போது ஆட்சி மாற்றம் வந்ததால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையென்றால் தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

இந்த ஊழல் புகார்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஸ்டாலினை சந்திப்பீர்களா?

ஸ்டாலினை சந்திக்க வேண்டும், சந்தித்தால் இதுகுறித்து அதிகமாக விளக்கம் கொடுப்பேன். சிலவற்றை வெளியே சொல்ல முடியவில்லை. அவற் றையெல்லாம் அவரிடம் நேராக சொல்லும்போது புரியும். அதன் பிறகு இந்த புகார்கள் மீதான நடவடிக்கை வேகமாகும் என்றார் நம்பிக்கையுடன்.

படம் : விக்னேஷ்

nkn210721
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe