கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் அசால்ட்டாக வாரிச் சுருட்டியிருக்கின்றன தி.மு.க.வும் அதன் கூட்ட ணிக் கட்சிகளும். அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்த கொங்கு மண்டலத்தை வளைத்தது மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியிலேயே மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வால் சேலம் வடக்கு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. பத்தாண்டுகால ஆட்சியை இழந்தபோதிலும், சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்ற அக்கட்சியின் நம்பிக்கையை மட்டும் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் 'எடப்பாடி அன் கோ' தக்கவைத்துக் கொண்டது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கோட்டையை செங்கல் செங்கலாகப் பிரிந்து மேய்ந்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.

eps

Advertisment

சேலம் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி மொத்தமாக 50 வார்டுகளில் வென்று, மேயர் இருக்கையைக் கைப்பற்றியிருக் கிறது. அ.தி.மு.க.வால் வெறும் 7 வார்டுகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. சுயேட்சைகள் 3 இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். இதுமட்டு மின்றி மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் 5 நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது. தாரமங்கலத்தில் மட்டும் இழுபறி நிலை.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 31 பேரூராட்சி களில் 25-ல் தி.மு.க. கூட்டணி வெற்றிவாகை சூடியுள்ளது. வனவாசி பேரூராட்சி மட்டுமே அ.தி.மு.க. வசமாகியிருக்கிறது.

அ.தி.மு.க.வின் அதலபாதாளச் சரிவுக்கான காரணங்கள் குறித்து இலை கட்சியின் ர.ர.க்களிடம் பேசினோம்.

ee

"ஜெயலலிதா இருந்தவரை உழைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை இருந்தது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க., முற்றிலும் பணத்தை மையமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இரட்டைத் தலைமை என்றாலும் கூட, கட்சிக்குள் உண்மையில் எடப்பாடியின் ஆதிக்கம்தான் உள்ளது. பணம் கொடுப்பவர்களுக் குத்தான் தேர்தல் சீட் என்ற நிலை உருவாகிவிட்டது. அதனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தலின்போது, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா முழுமையாகச் செய்யவில்லை. இந்தமுறை கட்சித் தலைமையிடமிருந்து பெரிய அளவில் பணம் சப்ளை செய்யப்படவில்லை.

ஒருகாலத்தில், பட்டியல் சமூகத்தினர் வாக்குகள் அ.தி.மு.க.வின் பலமாக இருந்தது. அவர்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலிலிருந்து தி.மு.க., வி.சி.க. நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். அதைப்பற்றி எல்லாம் எடப்பாடி தரப்பு பெரிதாக அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை,'' என்கிறார்கள்.

சேலம் மாநகர ஜெ., பேரவை இணைச் செயலாளர் சேகர், 4-வது வார்டில் தன் மனைவி மகேஸ்வரிக்கு சீட் கேட்டிருந்தார். கட்சித் தலைமை யோ, அண்மையில் பா.ம.க.விலிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த சாம்ராஜின் மனைவி சொர்ணாம்பாளுக்கு சீட் கொடுத்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் சேகர், தன் மனைவியை சுயேட்சையாக களமிறக்கி வெற்றிபெற்றார். அந்த வார்டில் அ.தி.மு.க. மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

சில வார்டுகளில் ஆளுங்கட்சியினரிடம் பெட்டி வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க. வேட் பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கே வராத சம்பவமும் நடந்துள்ளதாகவும் புலம்பினர் ர.ர.க்கள்.

அதேபோல், 3-வது வார்டில் தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க. வின் பாலுவை வீழ்த்த, அந்த வார்டில் தி.மு.க., வாக்காளர்களுக்கு 40 லட்சம் ரூபாயை வாரியிறைத்தது. பாலுவால் தி.மு.க.வின் வியூகங்களை எதிர்கொள்ள முடியவில்லை. அ.தி.மு.க.வில் தனி செல்வாக்குடனிருந்த பாண்டியன், முன்னாள் மண்டலக்குழுத் தலைவர் சண்முகம், மோகன், தியாகராஜன், அசோக்குமார், மனோன்மணி அய்யந்துரை என அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களை வீழ்த்த தனித் தனியாக தி.மு.க. ஸ்கெட்ச் போட்டு காலிசெய்தது. உண்மையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு, மா.செ. ராஜேந்தின் எம்.எல்.ஏ. ஆகியோரின் வியூகங்களை அ.தி.மு.க.வால் எதிர்கொள்ளவே முடிய வில்லை என்கிறார்கள்.

ee

எடப்பாடியின் நம்பிக்கை வட்டத்திலுள்ள அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, ''சேலம் மாநகராட்சியில் தனித்துக் களமிறங்கிய அ.தி.மு.க.வைவிட தி.மு.க. கூட்டணிக்கு 1 லட்சம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. 2011-ல் தி.மு.க. தனித்துக் களமிறங்கியபோது இதேபோன்ற தோல்வியை அக்கட்சியும் சந்தித்தது. கூட்டணி பலமில்லாமல் தனித்து நின்றது எங்கள் கட்சிக்கு பெரிய மைனஸ். எல்லாவற்றையும் மீறி ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் நலத்திட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் தி.மு.க.வை ஆதரித்திருக்கலாம்,'' என்றார்.

அ.தி.மு.க.வின் தோல்வி குறித்து அக்கட்சி யின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், "ஆளுங்கட்சியினர் ஏதோ சதி செய் திருக்கிறார்கள் அவுங்க, ஓட்டுக்கு ரெண்டாயிரம்... மூவாயிரம்னு கொடுத்தாங்க. தி.மு.க.காரங்களே தேர்தல் அதிகாரிகள் மாதிரி பேட்ஜ் குத்திக்கிட்டு வாக்குச்சாவடியிலும், கவுண்டிங் சென்டர்லயும் வேலை செஞ்சிருக்காங்கனு சொல்றாங்க சார்...'' என புது டிசைனில் உருட்டினார்.

குழப்பமான இரட்டைத் தலைமை, எல்லாவற்றையும் பணத்தால் சாதித்து விடலாம் என தப்புக்கணக்கு நிலை தொடரும் பட்சத்தில், அடுத்தடுத்த தேர்தல்களில் அ.தி.மு.க. காணாமல் போனாலும் ஆச்சரியமில்லை என்று வேதனையை மறைக்க முடியாமல் குமுறுகிறார்கள் ர.ர.க்கள்.