முதல்வர் எடப்பாடி பழனி சாமி, அவருடைய சொந்த மண்ணான எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன், அங்கிருந்தே பரப்புரையையும் ஏற்கனவே தொடங்கி விட்டார். அவரை எதிர்த்து சம்பத்குமார் என்பவரை களமிறக்கியுள்ளது தி.மு.க.
இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார். ""வேட்பாளராக அறிவிக்கப்ப
முதல்வர் எடப்பாடி பழனி சாமி, அவருடைய சொந்த மண்ணான எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன், அங்கிருந்தே பரப்புரையையும் ஏற்கனவே தொடங்கி விட்டார். அவரை எதிர்த்து சம்பத்குமார் என்பவரை களமிறக்கியுள்ளது தி.மு.க.
இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார். ""வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சம்பத்குமார், முன்பு எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் ஆதரவாளராக இருந்தார். அதன்பிறகு, டி.எம். செல்வகணபதியின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். அவருடைய பரிந்துரையின் பேரில்தான் வேட்பாளர் சம்பத்குமார் தேர்வாகியிருக்கிறார். பண உதவி செய்துவந்த "இரிடியம்' ராஜ்குமார் அ.தி.மு.க.வுக்கு போய்விட்டார்.
பெரிய அளவில் பொருளாதார வசதியோ, மக்களிடம் அறிமுகமோ இல்லாத ஒருவரை நிறுத்தியது சவால்தான் என்றாலும், கட்சித் தலைமை யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவரை வெற்றி பெறச்செய்ய வைப்பதே எங்களின் கடமை,'' என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.
""எடப்பாடி பழனிசாமி மீது தொழில் ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்ரமணி யம், மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகன் அழகுதுரை அல்லது கடந்த முறை போட்டியிட்ட முரு கேசனுக்கோ கூட சீட் கொடுத் திருக்கலாம்'' என்கிறார்கள் கட்சியின் அதிருப்தியாளர்கள்.
"பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பிஸினஸ் மேனிடம் 40 எல். பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி, மோசடி செய்த விவகாரத்தில் சம்பத்குமார் பெயர் அடி பட்டு, சங்ககிரி போலீசார் கடும் விசாரணை நடத்தியதாகவும், அதன்பிறகு 2 தவணைகளில் அந்தப் பணம் செட்டில் ஆனதால் மேல்நட வடிக்கை இல்லை' என்றும் ஒருதரப்பு சொல்கிறது. சம்பத்குமார் தரப்பு இதை மறுக்கிறது.
""கொடநாடு கொலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை மனோஜ்-சயான் ஆகியோர் மீடியாவிடம் குறிப்பிட்டிருப்பதை மறக்க முடியுமா? தேர்தல் களத்தில் பல பிரச்சினைகளும் வெளிவரலாம். தமிழக மக்கள் சம்பத்குமாரை இன்னொரு சுகவனம் ஆக்குவார்களா? என்பதை தேர்தல் முடிவு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.