கொடநாடு வழக்கில் இந்த மாதம் 31ஆம் தேதி கோர்ட் படி ஏறுகிறார் எடப்பாடி. அவரை முதல்முறையாக இந்த வழக்கில் கோர்ட் படி ஏற வைத்தவர் மேத்யூ சாமுவேல். 2019ஆம் ஆண்டு முதல் முறையாக “"கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடிதான் முதல் குற்றவாளி, கொடநாட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை கொள்ளையடிக்கத்தான் இந்த கொள்ளையே நடந்தது'’என மீடியாக்களில் அம்பலப் படுத்தியவர் மேத்யூ சாமுவேல். குற்ற வாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் வாக்குமூலங்களாக வெளிப்பட்ட மேத்யூ சாமுவேலின் குற்றச் சாட்டை நக்கீரன் அன்றே விரிவாகப் பதிவு செய்திருந்தது. எடப்பாடியை அதிரவைத்த அந்தக் குற்றச்சாட்டுகள் நக்கீரனில் வெளிவந்ததும் நக்கீரனில் குறிப்பிடப்பட்டி ருந்த மேத்யூ சாமுவேலின் டீமுக்கு எதிராக அவதூறு வழக்குப் போட்டார் எடப்பாடி.

eps

குற்றவாளிகளான மனோஜை யும், சயானையும் அவர்கள் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து பேட்டி அளித்த டெல்லி பிரஸ்கிளப்பில் இருந்தே கைது செய்து சிறையில் அடைத்தார் எடப்பாடி. 2019ஆம் ஆண்டு மேத்யூ சாமுவேல் மீது போட்ட அவதூறு வழக்கில் இதுவரை எடப்பாடி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவர் "கொடநாடு வழக்கில் எனக்குத் தொடர்பில்லை' என தொடர்ந்த வழக்கில், புகார் தாரரின் சாட்சியமாக அவரது சாட்சியத்தை பதிவு செய்யவே யில்லை. கொடநாடு வழக்கில் கோர்ட்டில் ஏறி சாட்சியம் அளித்தால் அது அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் வீட்டைக் கொள்ளையடித்ததில் எடப் பாடிக்கு பங்கு உண்டு என மேத்யூ சாமுவேல் சொன்னதை உண்மையாக்கிவிடும் என எடப்பாடி பயந்தார்.

ஒரு அவதூறு வழக்கில் புகார் சொன்னவர் முதலில் சாட்சியம் அளிக்கவேண்டும். அதன்பிறகு புகார்தாரர் சொல் லும் சாட்சியங் களை கோர்ட் விசாரிக்க வேண் டும். அதற்குப் பிறகு அந்த செய்தி உண்மையானதா இல்லையா என தீர்ப்பளிக்க வேண்டும். இப்படித்தான் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

Advertisment

இந்த வழக்கில் "மேத்யூ சாமுவேல் சொன்ன குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கிறது என கோர்ட் சொல்லிவிட்டால், அது எடப்பாடிக்கு கொடநாடு வழக்கில் தொடர்பு உண்டு என்பதற்கான அடிப்படை முகாந்திரமாகிவிடும்' என இந்த வழக்கை கண்டுகொள்ளாமலே இருந்தார் எடப்பாடி.

இந்நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால், "கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் இளங்கோவன், தங்கமணி, வேலுமணி, நீலகிரி மாவட்டச் செயலாளர் கப்பூச்சி வினோத், அனுபவ் ரவி உட்பட அறுபது பேருக்கு நேரடியாகத் தொடர்பு உண்டு. இறந்துபோன கனகராஜ் அவர் கொள்ளையடித்த ஆவணங்களை எடப்பாடி ஆட்களிடம் ஒப்படைத்தார்' என பேட்டியளித்தார். அதை எதிர்த்தும் அவதூறு வழக்குத் தொடர்ந்தார் எடப்பாடி. இந்த வழக்கிலும் எடப்பாடி சாட்சியம் அளிக்கத் தயாராக இல்லை. “"நான் நேரில் வந்து சாட்சியம் அளித்தால் எனக்குப் பாதுகாப்பில்லை'” என எடப்பாடி ஒரு மனுவை தனபால் வழக்கில் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் எடப்பாடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, "ஒரு வழக்கறிஞர் முன்னிலையில் அவரது வீட்டிலேயே சாட்சியம் அளிக்கலாம்' என உத்தரவிட்டார்.

ee

Advertisment

இதனால் உற்சாகமடைந்த எடப்பாடி, "அந்த வழக்கு போலவே மேத்யூ சாமுவேல் வழக்கிலும் உத்தரவிட வேண்டும்' என மனு தாக்கல் செய்தார். தனபால் வழக்கில் கொடுத்த அதே தீர்ப்பையே மேத்யூ சாமுவேல் வழக்கிலும் கொடுத்தார் நீதிபதி சுரேஷ்குமார். அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேத்யூ சாமுவேல் வழக்கறிஞரான தி.மு.க. எம்.பி. என்.ஆர். இளங்கோ வழக்கு போட்டார். நீதியரசர் மகாதேவன் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்த அந்த மேல்முறையீட்டின்கீழ், "எடப்பாடி வருகிற 31ஆம் தேதி மாஸ்டர் கோர்ட் டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்'’எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுதான் எடப்பாடி கொடநாடு வழக்கில் முதல்முறையாக கோர்ட்டில் ஆஜராகும் கதை.

இந்நிலையில், கொடநாடு வழக்கு விசாரணை எப்படி நடக்கிறது என குற்ற வாளிகளுக்காக ஆஜ ராகும் வழக்கறிஞர் விஜயனிடம் கேட் டோம். அவரோ, “"பழைய குற்ற வாளிகள் பற்றிதான் சி.பி.சி.ஐ.டி. ஆராய்ந்துவருகிறது. எடப்பாடி உட்பட புதிய குற்றவாளிகளைப் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கவில்லை. கொடநாடு கொலை கொள்ளையின் போது அங்கிருந்த காவலாளி ஓம் பகதூர் ஒரு மரத்தில் கட்டி வைக்கப்பட்டு கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். அந்த மரத்தையே அகற்றிவிட்டார்கள்''’என்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டிய தனபாலோ, "எடப்பாடி உட்பட 65 நபர்களுக்கு இந்தக் குற்றத்தில் தொடர்பு இருக்கிறது என்று சொன்னேன். அதில் 40 பேரைத்தான் விசாரித் திருக்கிறது சி.பி.சி.ஐ.டி. முக்கிய குற்றவாளியான எடப்பாடி பழனிச்சாமி உட்பட முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்ற யாரையும் இதுவரை விசாரிக்கவில்லை''’என்றார்.

"ஏன் முக்கியக் குற்றவாளிகளை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயங்குகிறார்கள்? அவர்களை விசாரிக்க கவர்னரிடம் அனுமதி பெற வேண்டுமா?'' என போலீஸ் அதிகாரிகளைக் கேட்டோம்.

"ஒரு கிரிமினல் வழக்கில் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அதற்கு எந்த முன்அனுமதியும் வேண்டாம்'' என்கிறார் கள்’காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீ சாரோ, "நாங்கள் எட்டாயிரம் பக்கம் வரக்கூடிய அளவிற்கு இந்த குற்றத்தில் தொடர்புடை யவர்களின் செல்போன் பதிவுகளைக் கைப்பற்றி ஆராய்ந்து வருகிறோம். தொடர்ந்து எடப்பாடி உட்பட அனைவரையும் விசாரிப்போம்''” என்கிறார்கள்.

"அத்தைக்கு எப்போது மீசை முளைக்கும்?' என கேட்கிறார்கள் கொடநாடு வழக்கை தொடர்ந்து உற்று நோக்கும் சமூகஆர்வலர்கள்.