தமிழகத்தில் ஏழாவது முறையும் நாம் ஆட்சி அமைப் போம் என்கிற நம்பிக்கையை உடன்பிறப்புகளுக்குக் கொடுத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் 22-ந் தேதி நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் நிர்வாகிகள் என சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.
அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா, டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தில் பா.ஜ.க. -அ.தி.மு.க.வின் கபட நாடகம், பல்கலைக்கழகத்திற்குரிய நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்தல் ஆகியவைகளை கண்டித்தும், ஒரே நாடு ஒரே தேர்தலை கைவிட ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உள்பட 12 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச் சர்கள், எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் செயற்குழுவில் பேசினர்.
செயற்குழுவில் பேசிய திருச்சி சிவா எம்.பி., "மக்கள் நலன்களுக்கு எதிராக எந்த ஒரு சட்ட மசோதாவை பார்லிமெண்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்தாலும் அதனை முதலில் எதிர்ப்பது தி.மு.க.தான். ஆனால், ஆதரிப்பது அ.தி.மு.க. இந்த போர்க்குணத்தால் இந்திய அர சியலில் பெரும் தாக்கத்தை தி.மு.க. ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கூட்டணி அமைக்கும் வியூகத்தை தலைவரை (ஸ்டாலின்) பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என டெல்லி தலைவர்கள் கூறுகின்றனர்''’என்றபோது அரங்கம் கைத்தட்டால் நிரம்பியது.
கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசும்போது, "மாநில உரிமை களை பறிப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கிறது. மாநில உரிமைகளை பாதுகாக்க நாம் போராடுவது மட்டுமல்ல, அந்த உரிமை களுக்காக இந்தியாவுக்கே வழிகாட்டும் இயக்க மாக தி.மு.க.வின் செயல்பாடுகள் இருக்கின்றன. பெண்களின் வாக்குகளை முழுமையாகக் கவரும்படி மகளிர் அணியினர் தங்களின் பணி களில் வேகம் காட்டவேண்டும். பெண் வாக் காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வருவதில் உறுதி காட்ட வேண்டும்''’என்றார்.
துணைமுதல்வர் உதயநிதி பேசும்போது, "இந்தியாவிலேயே மக்களை ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த தலைவராக இருப்பது நம் தலைவர் (ஸ்டாலின்) மட்டுமே! தி.மு.க. கூட்டணி ஒவ்வொரு நாளும் வலிமை பெற்று வருகிறது. மகளிரின் ஆதரவு நம் ஆட்சிக்கும், கட்சிக்கும் அமோகமாக இருக்கிறது. இதேபோல ஒவ் வொரு அணியும் தேர்தல் வெற்றிக்காக கடுமை யாக உழைக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய வெற்றி நமக்கானது மட்டுமல்ல; இந்தியாவுக்கே வெற்றி. 200 என்பது மட்டுமல்ல நம் இலக்கு... அதையும் தாண்டியது நமது இலக்கு''’என்றார் மிக அழுத்தமாக.
"வெற்றிக்காக உழைக்கத் தயங்கமாட் டோம்' என்கிற உறுதியுடன் மா.செ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் பேசினாலும், பிரச்சினைகளை சுட்டிக்காட்ட வும் தயங்கவில்லை.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட உடன்பிறப்புகளிடம் நாம் பேசியபோது, "200-க்கும் மேற்பட்ட இடங்களை ஜெயிக்க வேண்டும் என இலக்கு வைக்கிறார்கள்... சரி தான். தலைமையின் உத்தரவையேற்று உழைக்க காத்திருக்கிறோம். ஆனால், தொண்டர்கள் எந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதை தலைமை உணரவேண்டும். அதற்கேற்ப பல குரல்கள் செயற்குழுவில் எழுந்தன. குறிப்பாக, உழைக்கவே முடியாத தள்ளாத வயதிலும் கட்சிப் பொறுப்புகளில் உட்கார்ந்துகொண்டு காலம் தள்ளிக்கொண்டிருப்பவர்களுக்கு மாற்றாக, இளைஞர்களுக்கு பதவிகளை வழங்கவேண்டும். பொருளாதார வலிமையில்லாமல் தொண்டர்கள் பின்தங்கியே இருக்கின்றனர் உள்ளிட்ட நிதர்சனக் குரல்கள் செயற்குழுவில் எழுந்தன. இதற்கு அவ்வப்போது குறுக்கிட்டு பதிலும் சொன்னார் தலைவர் ஸ்டாலின்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இறுதியில் பேசிய மு.க.ஸ்டாலின், "பலரும் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பேசியிருக்கிறீர்கள். இதுதான் நம்முடைய அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும். தேர் தலை எதிர்கொள்ள இன்னும் ஒன்னரை வரு டங்கள்தான் இருக்கிறது. ஏழாவது முறையும் நாம்தான் ஆட்சி அமைப்போம். அதுதான் நம்முடைய இலக்கு. என்னுடைய இந்த நம்பிக் கையின் ஆணிவேர்கள் நீங்கள்தான். உங்களின் உழைப்பை 50 ஆண்டுகளாக உடனிருந்து பார்த்து வருபவன். அதனால், 2026-லும் நாம்தான் ஆட்சியமைப்போம். நம்முடைய கொள்கைக் கூட்டணிக்கு எதிராக அவர்கள் (அ.தி.மு.க.) போடும் கணக்குகளெல்லாம் தப்புக்கணக்காகப் போகும். வெற்றிக்கணக்கு நம்முடையதுதான். அ.தி.மு.க தொண்டர்களுக்கு பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தி.மு.க. என்றால் சட்டமன்றத்தில் கத்திப் பேசுகிறார். அவர் என்னதான் கத்தினாலும், கதறினாலும் அவருடைய குற்றங்களும் துரோகங்களும் மறையாது. தி.மு.க.வின் வரலாறு, தியாகம்! பழனிச்சாமியின் வாழ்க்கை துரோகம்.
தி.மு.க.வை வீழ்த்த எதிரிகள் தனித்தனி யாக வந்தாலும், மொத்தமாக வந்தாலும் வெற்றி நமக்குத்தான். அது சரித்திர வெற்றியாக இருக் கும். நாம் ஏன் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் எனச் சொல்லும்போது... யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதையும் மக்களிடம் உணர்த்த வேண்டும். அதற்கான களப் பணிகளை, கட்சிப் பணிகளை செயற்குழு உறுப்பினர்களான நீங்கள் இன்றைக்கே தொடங்க வேண்டும். உண் மையான எதிரிகளை வீழ்த்த ஆற்றலைச் செல விடுவதுடன் தேர்தல் வியூகம் அவசியம்''’ என்றார் ஸ்டாலின்.