தனித்து விடப்படும் எடப்பாடி! சசிகலா -வைத்தி சந்திப்பு பின்னணி!

ss

னக்கு எதிராகக் களமிறங்கும் மாஜிக்களால், எடப்பாடி கலக்கத்திலிருப்பதால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மாவட்ட வாரியாக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

v

அதே சமயம் அ.தி.மு.க.வின் டெல்டா மாவட்டங்களில் கோலோச்சிய வைத்தி லிங்கம், எடப்பாடியிட மிருந்து பிரிந்த பிறகு அரசியலிலிருந்து கொஞ்சம் விலக ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்.ஸுடன் வலம் வந்த அவர், ஓ.பி.எஸ். பா.ஜ.க.வில் ஐக்கிய மாகத் தயாரானதால், அவரிடமிருந்தும் பின்வாங்கி அரசியல் செய்யாமல் தொழில்களை மட்டும் கவனித்துவந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வைத்திலிங்கத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே அவர் கை வலியால் அவதிப்பட்டுவந்த நிலையில், ஆரம்பத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று தற்போது ஓய்வெடுத்துவரும் நிலையில், மார்ச் 10ஆம் தேதி

னக்கு எதிராகக் களமிறங்கும் மாஜிக்களால், எடப்பாடி கலக்கத்திலிருப்பதால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மாவட்ட வாரியாக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

v

அதே சமயம் அ.தி.மு.க.வின் டெல்டா மாவட்டங்களில் கோலோச்சிய வைத்தி லிங்கம், எடப்பாடியிட மிருந்து பிரிந்த பிறகு அரசியலிலிருந்து கொஞ்சம் விலக ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்.ஸுடன் வலம் வந்த அவர், ஓ.பி.எஸ். பா.ஜ.க.வில் ஐக்கிய மாகத் தயாரானதால், அவரிடமிருந்தும் பின்வாங்கி அரசியல் செய்யாமல் தொழில்களை மட்டும் கவனித்துவந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வைத்திலிங்கத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே அவர் கை வலியால் அவதிப்பட்டுவந்த நிலையில், ஆரம்பத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று தற்போது ஓய்வெடுத்துவரும் நிலையில், மார்ச் 10ஆம் தேதி ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன், அ.ம.மு.க. பொதுச்செய லாளர் டி.டி.வி.தினகரன் ஆகிய மூன்று பேரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். முதலில் சசிகலாவும், திவாகரனும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு புறப்படும் வரை காத்திருந்த டி.டி.வி.தினகரன், அவர்கள் புறப்பட்ட பிறகு வைத்திலிங்கத்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். தற்போது வைத்திலிங்கம் ஓய்வில் இருப்ப தால், அவருடைய ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜனின் மனைவி இறப்பு நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்த சந்திப்பால் எடப்பாடி தரப்பில் கொஞ்சம் ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், சசிகலா இந்த சந்திப் பின்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்ல ஆட்சியை தருவோம். அது மக்களுக்கானதாக இருக்கும். அ.தி.மு.க. இணைய வாய்ப்பில்லை என எடப்பாடி கூறிவருகிறார். அனைவரும் ஒன்றிணைய முடி யாது என்பதை தனியொரு நபர் முடிவுசெய்ய முடியாது. அ.தி.மு.க. வின் அடிமட்டத் தொண்டர் கள் முடிவுசெய்ய வேண் டும். அதுவும் கட்சியின் விதிப்படி நடக்கும்'' என்றார். கட்சிக்கு வெளியே தான் இப்படி என்றால், கட்சிக்குள் இதைவிட மோசமான சூழல் நிலவிவருகிறது.

அதிலும், முக்கியான முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான செங் கோட்டையனுக்கும், எடப்பாடிக்கு மிடையே ஏற்பட்ட உரசலால் இரு வருக்குமிடையே பேச்சுவார்த்தையே நின்றுபோனது. அதேபோல் ராஜேந்திர பாலாஜியும், மாஃபா பாண்டியராஜனும் மோதிக்கொண்டதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

s

இந்நிலையில், கட்சியின் மாவட்டப் பொறுப் பாளர்கள் 82 பேருடன் காணொலிக் காட்சி வழியாக எடப்பாடி ஆலோசனை நடத்தினார். இதில் செங்கோட்டையனும் கலந்துகொண்ட நிலையில் அவரோடு எடப்பாடி பேசிக்கொள்ளவில்லை.

கூட்டம் முடியும் தறுவாயில் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர் களுக்கும் நன்றி சொல்லும்போது மட்டும் செங்கோட் டையனின் பெயரை சொன்னார். இதனால் அப்செட்டான செங்கோட் டையன், வேலுமணியிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். அவரை தன்னுடைய வீட்டுத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்ததோடு, எல்லாம் சரியாகிவிடும் வாருங்கள் என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார் வேலு மணி. ஆனால் அங்கோ, எடப்பாடி வருவதற்கு முன்பே செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வெளியேறினார்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக பா.ஜ. தலைவர், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டதும், அவர்கள் பா.ஜ.க. தலைவருடன் சிரித்துப் பேசியதும் அ.தி.மு.க.வினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க, முன்னதாக கோவையில் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அமித்ஷாவை எஸ்.பி.வேலுமணி சந்தித்த விவகாரமும் மற்றொரு பக்கம் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் செங்கோட்டையன், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து எடப்பாடி ஆர்வம் காட்டியதோடு, உளவுத்துறை மூலமாகவும் அறிந்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், செங் கோட்டையன் தன்னுடைய ஆதரவாளர் களுடன் ஈ.சி.ஆரிலுள்ள பங்களாவில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப் போது, முதல்வர் தன்னை தி.மு.க.விற்கு அழைத்ததாகவும், தற்போதைக்கு அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என்று தான் தெரிவித்துவிட்டு வந்த தாகவும் கூறியிருக்கிறார். அதன்பிறகு எடப்பாடி நடத்திய கூட்டத்தில், "தி.மு.க. அமைச்சர்களுடனோ, முக்கிய பிரமுகர்களுடனோ தொடர்பிலிருந் தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து எடப் பாடிக்கு எதிரான அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் நடப்பதால் தன்னுடைய பதவியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் தற்போது நிர்வாகிகளிடம் எடப்பாடி தொடர்ந்து பேசிவருகிறார். இந்நிலையில்தான் சசிகலா, டி.டி.வி., வைத்திலிங்கம் ஆகியோரின் சந்திப்பு, எடப்பாடியைத் தவிர மற்ற சில முன்னாள் அமைச் சர்கள், சசிகலாவுடனும், பா.ஜ.க.வுட னும் கைகோர்க்கத் தயாராகி வருவதைக் காட்டுவதாக உள்ளது.

nkn150325
இதையும் படியுங்கள்
Subscribe