Advertisment

எடப்பாடி கண்முன்னே அ.தி.மு.க. ஈகோ ஃபைட்! மந்திரியுடன் மல்லுக்கட்டும் எம்.எல்.ஏ.!

mla

சொந்த மாவட்டத்திலும் நெருக்கடிகளை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. “கட்சியின் சின்னத்துல ரெண்டு இலைகள் இருக்கலாம். ஆனால், கட்சில ரெண்டு கோஷ்டிகள் இருக்கக்கூடாது என்கிறார் கோஷ்டி அரசியலில் சிக்காத அதிமுக நிர்வாகி ஒருவர். தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காக, திருநெல்வேலி வரை எடப்பாடி பழனிசாமி சென்றபோது, விருதுநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர், மாவட்ட எல்லையானா ஆவல்சூரம்பட்டி விலக்கிலும், எம்.எல்.ஏ. ராஜவர்மன் தரப்பு, சாத்தூர் எட்டூர்வட்டத்திலும், தனித்தனியாக பிரிந்து நின்று வரவேற்றனர். நாளிதழ் மற்றும் போஸ்டர் விளம்பரத்திலிருந்து சகலத்திலும் "நீயா? நானா?' என்ற மல்லுக்கட்டு, இந்த மாவட்டத்தில் வெளிப்படையாகவே நடந்தது.

Advertisment

dd

"மெஜாரிட்டியான ஒன்றிய நிர்வாகிகள் என் பக்கம்...' என்று ராஜவர்மன் ‘ஸ்ட்ரெங்த்’ காட்ட, ராஜேந்திரபாலாஜி தரப்பிலோ "முழுமுழுக்க அது ஜாதி அரசியல் என்பது

சொந்த மாவட்டத்திலும் நெருக்கடிகளை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. “கட்சியின் சின்னத்துல ரெண்டு இலைகள் இருக்கலாம். ஆனால், கட்சில ரெண்டு கோஷ்டிகள் இருக்கக்கூடாது என்கிறார் கோஷ்டி அரசியலில் சிக்காத அதிமுக நிர்வாகி ஒருவர். தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காக, திருநெல்வேலி வரை எடப்பாடி பழனிசாமி சென்றபோது, விருதுநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர், மாவட்ட எல்லையானா ஆவல்சூரம்பட்டி விலக்கிலும், எம்.எல்.ஏ. ராஜவர்மன் தரப்பு, சாத்தூர் எட்டூர்வட்டத்திலும், தனித்தனியாக பிரிந்து நின்று வரவேற்றனர். நாளிதழ் மற்றும் போஸ்டர் விளம்பரத்திலிருந்து சகலத்திலும் "நீயா? நானா?' என்ற மல்லுக்கட்டு, இந்த மாவட்டத்தில் வெளிப்படையாகவே நடந்தது.

Advertisment

dd

"மெஜாரிட்டியான ஒன்றிய நிர்வாகிகள் என் பக்கம்...' என்று ராஜவர்மன் ‘ஸ்ட்ரெங்த்’ காட்ட, ராஜேந்திரபாலாஜி தரப்பிலோ "முழுமுழுக்க அது ஜாதி அரசியல் என்பது எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். வெறும் ஒன்றிய நிர்வாகிகளை வைத்து, இந்த மாவட்டத்தில் யாரும் எதுவும் பண்ணிவிட முடியாது. அந்த சமுதாய மக்களில் கட்சியை நேசிக்கும் பலரும் அமைச்சர் பக்கமே உள்ளனர். ஒன்றியம், நகரம், பேரூர் என அனைத்து மட்டத்தினரும் ராஜேந்திரபாலாஜி பக்கமே இருக்கின்றனர்'’என்று நம்பிக்கையை வெளிப் படுத்தினர்.

கடந்த 10 ஆண்டுகளாக, விருதுநகர் மாவட்ட அமைச்சராக கே.டி.ராஜேந்திரபாலாஜி இருந்து வருகிறார். மாவட்ட செயலாளர், மாவட்ட கழக பொறுப்பாளர் எனக் கட்சி பொறுப்பிலும் தொடர்கிறார். அப்படியிருந்தும், இந்த மாவட்டத்திலுள்ள ஒன்றிய நிர்வாகிகள், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கச்சை கட்டி நிற்பது ஏன்?

Advertisment

""நிர்வாகிகள் பலரும் ராஜேந்திரபாலாஜியால் வளம் பல பெற்றிருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும், அமைச்சர் திட்டும்போது வெளிப்படும் சுடுசொற்கள் இருக்கிறதே? தாங்கிக்கொள்ளவே முடியாது. தனக்கு நிகரா யாரும் இந்த மாவட்டத்துல வளர்ந்துடக் கூடாதுங்கிறதுல குறியா இருக்காரு. மிரட்டியே எல்லாரையும் ஒடுக்க நினைக்கிறாரு. பண விஷயமோ, நிர்வாக விஷயமோ, கட்சிக்காரர் தவறு செய்ததற்காக, இப்படியா வசைமழை பொழியுறது? தன்மானம் பெரிசாச்சே? வாய்க்கு வந்தபடி பேசுற பேச்சுதான், நிர்வாகிகளை அவருக்கு எதிரான நிலை எடுக்க வச்சிருச்சு'' என்கிறார்கள், ராஜேந்திரபாலாஜியின் கோபமுகத்தை எதிர்கொண்டவர்கள்.

mla

""அப்படி கிடையாது...''’என மறுத்த ஆளும்கட்சியின் சாத்தூர் நிர்வாகி ஒருவர் “ராஜேந்திரபாலாஜி ரொம்ப திட்டுறாருன்னு சொல்லுறதும், தன்மானத்துக்கு இழுக்குங்கிறதும் அவரோட மாவட்டசெயலாளர் பதவி போனதுக்குப்புறம்தான் இவங்களுக்குத் தெரியுதா? எப்படியாவது விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆகணும்னு ஆளாளுக்கு துடிக்கிறாங்க. ஒரு கணக்கோடும், எதிர்பார்ப்போடும்தான் அமைச்சரை விட்டுட்டு அந்தப் பக்கம் போயிருக்காங்க. ராஜவர்மன் பின்னால நிற்கிறவங்கள்ல எத்தனை பேரு கட்சிக்கு விசுவாசமா இருந்தவங்க? எக்ஸ் எம்.பி. ராதாகிருஷ்ணன் எத்தனை கட்சி மாறினவரு? உள்ளாட்சி தேர்தல்ல திமுக ஜெயிக்கிறதுக்கு சாதி ரீதியா உள்ளடி வேலை பார்த்தவரு. எக்ஸ் எம்.எல்.ஏ. சுப்பிரமணியம் எங்கெங்கே போயிட்டு வந்தவரு? அட, மாஜி அமைச்சர் இன்பத்தமிழன் தலை காட்டாத கட்சி எது? திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஆகிய மூன்றும் மணலில் பணமழை கொட்டக்கூடிய ஒன்றியங்கள். அங்கேயிருக்கிற ஒன்றிய செயலாளர்கள் ஏன் கோஷ்டி அரசியல் பண்ணனும்? இது மாவட்டம் முழுக்க தெரிஞ்ச விஷயம். ராஜவர்மன்கூட இருக்கிற முக்கால்வாசிப்பேர் டி.டி.வி. பக்கம் போயிட்டு, திரும்பவும் அ.தி.முக.வுக்கு வந்தவங்க. கொரோனா நேரமாச்சே? சி.எம். வரவேற்புல பத்து பதினஞ்சு பேரு இருந்தா போதும்னு மேல இருந்தே சொல்லிட்டாங்க. ராஜவர்மனோ, சி.எம்.முக்கு முன்னால தன்னோட பலத்தைக் காட்டணும்னு, மாவட்ட கழகம் சொன்ன ஸ்பாட்ட விட்டுட்டு, வேறொரு இடத்துல ஆட்களை திரட்டிட்டாரு. யாரு பலசாலின்னு போட்டி நடத்துற நேரமா இது?

பலே அரசியல்வாதிதான் ராஜகண்ணப்பன். அவரை சுத்தமா ஓரம் கட்டலியா? தளவாய் சுந்தரம் சாதாரண ஆளா? அவரை ஒரேயடியா அமுக்கிடலயா? எங்க கட்சில இப்ப நடக்கிறது எல்லாமே ஜாதி அரசியல். மைனாரிட்டி ஜாதில இருந்துக்கிட்டு ராஜேந்திரபாலாஜி எப்படி துள்ளலாம்? விடுவோமா? அந்தக் கணக்குலதான் குடைச்சலுக்கு மேல குடைச்சல் கொடுக்கிறாங்க. எது நடந்தாலும் சரிங்கிற மனநிலைக்கு வந்துட்டாரு கே.டி.ராஜேந்திரபாலாஜி.

ஜெயலலிதா மாதிரி ஆளுமை இருந்திருந்தால்... இந்த மாதிரி அமைச்சரும் எம்.எல்.ஏவும் ஓபனா ஃபைட் பண்ண முடியுமா? ஏற்கனவே, விருதுநகர் மாவட்டத்துல, கே.கே.எஸ்.எஸ்.ஆரோட அருப்புக்கோட்டை தொகுதி, தங்கம் தென்னரசோட திருச்சுழி தொகுதி, தங்கப்பாண்டியனோட ராஜபாளையம் தொகுதின்னு, மூணு தொகுதில திமுக ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. மிச்ச நாலு தொகுதில விருதுநகர்ல சிட்டிங் எம்.எல்.ஏ.வா இருக்கிறது தி.மு.க.தான். ராஜேந்திரபாலாஜி சரியில்லயா? ராஜவர்மன் சரியில்லயா? இவங்கள இப்பவே சரிபண்ணலைன்னா... சட்டமன்ற தேர்தல்ல அ.தி.மு.க. பல்ப் வாங்கிரும். மொத்தத்துல அதிமுகவோட கோஷ்டி அரசியலால, விருதுநகர் மாவட்ட தி.மு.க.வுக்கு அமோக லாபம்'' என்றார் குமுறலுடன்.

‘ஈகோ’ அரசியல், விருதுநகர் மாவட்ட அதிமுகவை விழிபிதுங்க வைத்திருக்கிறது.

-ராம்கி

nkn120820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe