சட்டமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலங்களே இருப்பதால் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்களில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்தின் கள நிலவரங்களையும் தங்களின் வியூக டீம்களிடமிருந்து அறிவாலயமும், எம்.ஜி.ஆர். மாளிகையும் பெற்று வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் திண்டுக்கல் மாவட்ட கள அரசியல் குறித்த சீக்ரெட் தகவல்கள் நக்கீரனுக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் துணை முதல்வரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் விசிட் அடித்தபோது, அவரது காலில் விழுந்து வணங்கினார் தி.மு.க.வின் வேடசந்தூர் சிட்டிங் எம்.எல்.ஏ. காந்திராஜன். சீனியரான இவரது செய்கை, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியைத் தந்தது. எதற்காக காலில் விழுந்தார்? என்கிற விவாதங்கள் இப்போதுவரை எதிரொலித்தபடிதான் இருக்கின்றன. இதன் பின்னணிகள் இதுவரை வெளியில் வரவில்லை.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகள் இருந்தாலும் ஒக்கலிகா, கவுடாஸ் சமூகத்தினர் பெரும் பான்மையாக இருக்கும் ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் ஆகிய 2 தொகுதிகள்தான் ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின் றன. இருக்கின்றன. அந்த வகை யில், ஒக்கலிகா சமூகம்தான் இந்த 2 தொகுதிகளின் டிசை டிங் ஃபேக்டர்.
இச்சமூகத்தின் ஆதரவை முழுமையாகப் பெற்ற கட்சியே இந்த 2 தொகுதி களிலும் வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக, வேட சந்தூர் தொகுதியில் ஒக்கலிகா சமுக வேட்பாளரே தொடர்ச்சியாக ஜெயித்துவரு கிறார். வேடசந்தூரில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்கிற ஒருவித சென்ட்டிமெண்ட்டும் மாவட் டத்தில் இருக்கிறது.
இந்த தொகுதியில், தி.மு.க. வின் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.வான காந்திராஜன் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு தாவிய இவர், எம்.எல்.ஏ. ஆன கடந்த 5 ஆண்டுகளில், இவரது வெற்றிக்காக உழைத்த தி.மு.க. வினரை ஓரங்கட்டி வந்தி ருக்கிறார். கட்சியிலும் தொகுதியிலும் இவருக்கு அதிருப்தி அதிகரித்துள் ளது. இதனால், வருகிற தேர்தலில் மீண்டும் காந்திராஜனுக்கு சீட் கிடைக்காது என்ற நிலை இருக்கிறது. கொடுத்தாலும் தோற் றுப்போவார் என்று தலைமைக்கு ரிப் போர்ட் அனுப்பி யுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/eps-ip1-2025-10-27-16-50-47.jpg)
காரணம், வேட சந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார் பில் மீண்டும் களமிறங்குகிறார் வி.பி.பி. பரமசிவம். 2016 தேர்தலில் இத்தொகுதி யில் ஜெயித்தவர். அ.தி.மு.க.வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளராகவும், எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கையை பெற்றவ ராகவும் இருந்துவரும் பரமசிவம், ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 2021 தேர்தலில் தி.மு.க.வில் காந்திராஜனும், அ.தி.மு.க.வில் பரமசிவனும் போட்டியிட்டபோது, ஒக்கலிகா சமூகத்தினரிடம், "இதுதான் எனது கடைசி தேர்தல். பரமசிவம் இளைஞர். அவருக்கு இன்னும் வயசு இருக்கிறது. இந்த ஒரு முறை மட்டும் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்' என கெஞ்சினார் காந்திராஜன். அதனால், காந்திராஜனை ஜெயிக்க வைத்தது ஒக்கலிகா சமூகம். இப்படிப்பட்ட சூழலில், 2026-ல் மீண்டும் தனக்குப் போட்டியிட வாய்ப்பில்லை என்பதையறிந்துள்ள காந்திராஜன், தனது தாய்க்கழகமான அ.தி.மு.க.விற்கு மீண்டும் சென்றுவிடலாமா? என ஆலோசிக்கிறார். இதற்கு காரணம் தேனி, திண்டுக்கல், மதுரை ஒக்கலிகா சமூக அமைப்பின் செயலாளராக இருக்கும் ப்ரியம் நடராஜன், காந்திராஜனின் சகோதரர். 2026 தேர்தலில் நேரடி அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ள ப்ரியம் நடராஜன், அ.தி.மு.க.வில் பேசிவருகிறார். சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எடப்பாடியும் இதற்கு ஓ.கே. சொல்ல, தி.மு.க.வின் மூத்த தலைவரும் சிட்டிங் அமைச்சருமான ஐ.பெரியசாமியின் ஆத்தூர் தொகுதியில் ப்ரியம் நடராஜனை களமிறக்கத் திட்டமிடப்படுகிறது. ஆத்தூர் தொகுதியில் 60 சதவீதம் இருக்கும் ஒக்கலிகா சமூகத்தின ரின் ஆதரவு, பல ஆண்டுகளாக ஐ.பெரியசாமிக்கு இருந்து வருவ தால், இதனை உடைக்க ப்ரியம் நடராஜனை வைத்து திட்டமிடு கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில்தான், தனது சகோதரரான காந்திராஜனும் அ.தி.மு.க.விற்கு வரவேண்டும் என அவரை ப்ரியம் நடராஜன் வலியுறுத்திவருகிறார். காந்தியும் இதற்கு ஓ.கே. சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரங்கள் தி.மு.க. மேலிடத்திற்கு தெரியவர, காந்திராஜனை எச்சரித்திருக்கிறது தி.மு.க. தலைமை. இதனைத் தொடர்ந்துதான், திண்டுக்கல்லுக்கு வந்த துணை முதல்வர் உதயநிதியின் காலில் விழுந்து வணங்கினார் காந்திராஜன்'' என்று பின்னணிகளை விவரிக்கிறார்கள் திண்டுக்கல் மாவட்ட சீனியர் உடன்பிறப்புகள்.
இந்த நிலையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியாவது இளைஞரணிக்காக ஒதுக்க வேண்டும் என திட்ட மிட்டிருக்கிறார் உதயநிதி. அந்த வகையில், வேடச்சந்தூர் தொகுதி மட்டும்தான் இளைஞரணிக்கு கிடைக்கும் சூழல் இருக்கிறது. இந்த தொகுதியில் ஒக்கலிகா சமூகத் தினர்தான் மெஜாரிட்டி என்பதால் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணியின் துணை அமைப் பாளர் ரவிசங்கர், ஒக்கலிகா சமூ கத்தைச் சேர்ந்தவர் மற்றும் தொகு திக்காரர். அதேசமயம், இத்தொகுதி யின் தெற்கு ஒன்றிய செயலாளரும் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவருமான வீர சாமிநாதனும் வேடசந்தூரை குறி வைத்திருக்கிறார். இதனால், வேட சந்தூர் தொகுதி இளைஞரணிக்கா? ஒன்றியத்துக்கா? என்ற பட்டிமன் றம் நடக்கிறது' என்கின்றனர் லோக்கல் உடன்பிறப்புகள்.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/eps-ip-2025-10-27-16-50-36.jpg)