ED மீதும் பயம் இல்ல, மோடி மீதும்  பயம் இல்ல' என தெளிவான, அச்சமில்லா கருத்தை தெரிவித்து, "வீட்டில் இருப்பவர்களிடம் தினமும் அரசியல் பேசுங்க.. விவாதிங்க.. குடும்பம் மிகமிக முக்கியம்' என அக்கறை காட்டி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற கோவை  இளைஞரணிச் நிர்வாகிகள் மாநாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிக்ஸர் அடித்துள்ளார் கட்சியின் இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.

Advertisment

டிசம்பர் 17ஆம் தேதி திருவண்ணாமலையில் கட்சியின் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகி கள் முதல் மாநாடு, இரண்டாவதாக, ஜனவரி 24 அன்று தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு, அடுத்து மூன்றாவதாக, கோவை கணியூர் பகுதியில் மேற்கு மண்டல மாநாடு. கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தி லுள்ள 14 கழக மாவட்டம், 39 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட  தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கோவை கருமத்தம் பட்டி அருகிலுள்ள கணியூர் டோல்கேட் பகுதியில் நடைபெறவுள்ளதாக கழக இளைஞரணியால் அறிவிக்கப்பட்டது. முந்தைய இரண்டு மாநாட்டு சாதனைகளையும் முறியடிக்க வேண்டுமென அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முனைப்புக் காட்ட கலந்துகொள்ளவுள்ள அனைவருக்கும் இருக்கை, உணவு, தண்ணீர் மற்றும் சிற்றுண்டி களை தயாராக வைத்திருந்தனர் மாநாட்டு பிரதிநிதிகள். 

Advertisment

மாநாட்டிற்கு முன்னதாக முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக பொள்ளாச்சிக்கு பயணித்த துணைமுதல்வ ரான உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி நகர மக்களின் போக்குவரத்து வசதிக்காக ரூ.9.83 கோடி மதிப்பில் பொள்ளாச்சி நகராட்சியில் கட்டப்பட் டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைத் தார். தொடர்ச்சியாக கோட்டூர், வேட்டைக்காரன் புதூர், ஒடையகுளம் பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் 1.42 லட்சம் மக்கள் பயனடையும்வண்ணம் ரூ.26 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டியவர், பொள்ளாச்சியிலுள்ள கோவை -பல்லடம் சாலையை இணைக்கும் திட்டமான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய சாலையை திறந்து வைத்தார். அதுபோக, கட்சி நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் கழகத்திற்காக நீண்டகாலம் உழைத்துவரும் 1200 கழக மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கி மகிழ்ந்தது குறிப்பிடத் தக்கது. பின்னர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மறைந்த  சூலூர் எஸ்.எஸ்.பொன்முடி பெயரை கோவை -சூலூர் பேரூராட்சியிலுள்ள பஞ்சாயத்து சாலைக்கு சூட்டும் வகையில் அதற்கான பெயர்ப் பலகையை திறந்து வைத்தார்.

80 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள்  மாநாட்டை சூழ்ந்திருக்க, அவர்கள் மத்தியில் மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தின் நடுவில் அமைக்கப்பட்டு இருந்த ரேம்ப் வாக்கில் நடந்தபடி இளைஞரணியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு  மேடையேறினார், கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் துணைமுதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். 

Advertisment

uday1

80 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்ட அந்த மாநாட்டில் இருக்கைகள் ஒவ்வொன்றிலும் பிஸ்கட், சிப்ஸ், வாட்டர் பாட்டில், கடலைமிட் டாய் உள்ளிட்டவைகள் இணைந்த ஸ்னாக்ஸ் கிட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் படங்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மாநாட்டில் மைக்கை பற்றிய உதயநிதி ஸ்டாலினோ, "பணிச்சுமை காரணமாக முதல்வர் ஸ்டாலின் இங்கு வர இயலவில்லை. நிச்சயம் மீண்டும் முதல்வராக வென்று, நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தலைவர் ஸ்டாலின் உங்களை சந்திப்பார்.  தலைவர்  ஸ்டாலின் இங்கு வராவிட்டாலும் அவர் இந்த நிகழ்வைப் பற்றிதான் யோசிப்பார். மேற்கு மண்டலத்திலுள்ள 39 தொகுதிகளிலிருந்து 80 ஆயிரம் பேர் இங்கு வந்துள்ளனர். ரங்ள்ற்லயும் தி.மு.க.தான் க்ஷங்ள்ற் என்பதற்கு நீங்கள் திரண்டிருப்பதே சாட்சி. தமிழகத்தில் எத்தனை பூத் இருக்கிறது என தெரியாமல் இப்போதுதான் சிலர் கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். நமது தி.மு.க. இளைஞரணியில் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சம் உறுப்பினர்கள்  இருக்கின்றனர். கழகத்தின் ராணுவம் என இளைஞரணியை தலைவர்  சொல்லுவார். மெயின் மேட்ச் விளையாடும் முன்பு பிராக்டீஸ் பண்ணு வார்கள். அதுபோல இளைஞரணி இருக்கின்றது.

இந்த மாதம்  மகளிர் உரிமைத்தொகை சீக்கிரமாக கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.  எதிர்க்கட்சிக்கு ஷாக் கொடுத்தார் முதல்வர். பா.ஜ.க. அடிமைக் கூட்டம். நீதிமன்றம் மூலம் மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முயன்றனர். அதைத் தெரிந்துகொண்ட முதல்வர் முன்கூட்டியே பணத்தை அளித்தார். முரட்டுஅடிமையாக மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி மாறிவிட்டார். 2026ல் அ.தி.மு.க.வை பா.ஜ.கவிடம் மொத்தமாக விற்றுவிட்டார். சுயநலத்திற்காக அ.தி.மு.க.வை  அழிவுப்பாதையில் அழைத்துச் சென்றுவிட்டார். நாங்கள் ஊஉக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்படமாட்டோம். மோடியோட டாடி வந்தாலும் பயப்பட மாட்டோம். இளைஞரணியினர் வீட்டை அரசியல்படுத்துங்கள். வீட்டில் உள்ளவர்களுடன் அரசியல் பேசுங்க. இளைஞரணி நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக போய் சாதனைகளை எடுத்துச் சொல்லவேண்டும். தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கின்றது . இது ஜனநாயகப் போர், டெல்லிக்கு எப்போதும் தமிழ்நாடு அவுட் ஆப் கன்ட்ரோல்தான். இந்த தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்கவேண்டும் என தலைவர்களிடம் கேட்டிருக்கின்றேன்'' என்று இளைஞரணியிடம் நம்பிக்கையை வார்த்துவிட்டு திரும்பிய பக்கமெல்லாம் சிக்ஸர் அடித்தார்.

இது இப்படியிருக்க, தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டிற்காக திருப்பூர் மாவட்டத் தின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருக்கும் பெருமளவு தனியார் பேருந்துகளை மாநாட்டிற்கு பொது மக்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட தாகவும், அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு உரிய தொகையைக் கொடுக்கவில்லையெனவும் சீராப் பாளையம் செந்தில் மற்றும் ரகு ஆகியோர் மீது விமர்சனமும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.