Advertisment

நக்கீரன் செய்தி எதிரொலி! திருச்சி காக்கிகள் அதிரடி டிரான்ஸ்பர்!

dd

பூ சப்ளை செய்வதில் பெயர்பெற்ற அறக்கட்டளை ஒன்று உள்ளது. அது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது. இதில் கோடிக்கணக்கில் பணமும், சொத்தும் இருப்பதால் இதை குறிவைத்து உதவி ஆணையர் ஒருவர் தன் ஜாதியைச் சேர்ந்த ஆட்களை அறக்கட்டளைக்குள் கொண்டுவருவதற்கு கடுமையான முயற்சிகளை திருச்சி மாவட்ட உளவுப்பிரிவு டி.எஸ்.பி. ஆதரவுடன் செயல்படுத்துகிறார். மாநில உளவுப்பிரிவுக்கு தகவல் தெரிந்ததும்... உளவுப்பிரிவு டி.எஸ்.பி.யை நாகப்பட்டினத்திற்கு அதிரடியாக மாற்றிவிட்டது. டிரான்ஸ்பர் ஆர்டரை ரத்துசெய்ய பலவழிகளில் முயற்சி செய்து

பூ சப்ளை செய்வதில் பெயர்பெற்ற அறக்கட்டளை ஒன்று உள்ளது. அது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது. இதில் கோடிக்கணக்கில் பணமும், சொத்தும் இருப்பதால் இதை குறிவைத்து உதவி ஆணையர் ஒருவர் தன் ஜாதியைச் சேர்ந்த ஆட்களை அறக்கட்டளைக்குள் கொண்டுவருவதற்கு கடுமையான முயற்சிகளை திருச்சி மாவட்ட உளவுப்பிரிவு டி.எஸ்.பி. ஆதரவுடன் செயல்படுத்துகிறார். மாநில உளவுப்பிரிவுக்கு தகவல் தெரிந்ததும்... உளவுப்பிரிவு டி.எஸ்.பி.யை நாகப்பட்டினத்திற்கு அதிரடியாக மாற்றிவிட்டது. டிரான்ஸ்பர் ஆர்டரை ரத்துசெய்ய பலவழிகளில் முயற்சி செய்துவருகிறார் அந்த உதவி ஆணையர்.

Advertisment

dddd

திருச்சியிலுள்ள மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பாரிமன்னன். எஸ்.ஐ.யாகவும் தற்போது இன்ஸ்பெக்டராகவும் சுமார் 10 ஆண்டுகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனக்கு வேண்டியவர்களின் போனை மட்டும் எடுப்பார் என்பதில் ஆரம்பித்து மத்திய மண்டலத்தில் எந்த இன்ஸ்பெக்டருக்கு எங்கே போஸ்ட்டிங் என்பதை பாரிமன்னன்தான் முடிவுசெய்வார் என புகார்கள் கூறப்பட்டுவந்த நிலையில் அதிரடியாக மாற்றப்பட்டு முக்கியத்துவமில்லாத பதவிக்கு அனுப்பப்பட்டார்.

திருச்சி சரக டி.ஐ.ஜி.க்கு இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜெனட் ஜெசிந்தா. இவர் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்டராக வந்ததிலிருந்தே ‘குறிப்பிட்ட’ நபர்களை அலுவலக பணிக்கு வைத்துக் கொண்டதாக புகார்கள் எழுந்தன. மேலும் குறிப்பிட்ட போலீஸ் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே எல்லா மும் செய்து கொடுப்பார் என்றும் யாரையும் மதிப்பதில்லை என்கிற புகார் எழுந்த நிலையில் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

திருச்சி மாவட்டத்தில் கள்ளலாட்டரி விற்பனை கனஜோராக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து நக்கீரனில் கடந்த 26.08.2020 இதழில் விரிவாக எழுதியிந்தோம். இதில் எஸ்.வி.ஆர்., நாகராஜ் என்கிற இரண்டு பேர் மட்டுமே முடிசூடாமன்னன்களாக திகழ்ந்துவருகிறார்கள். கள்ள லாட்டரி அதிபர்களுக்கு காவல்துறை அதிகாரிகளுக்கும் இணைப்புப் பாலமாக போலீஸ் சிவக்குமார் என்பவர் செயல்பட்டுவருகிறார்.

எஸ்.வி.ஆர்.,- நாகராஜ்- போலீஸ் சிவக்குமார் கள்ளலாட்டரி கூட்டணி இந்த மூவர் அணிக்கு சொந்த ஊர் இராமநாதபுரம். பிழைப்பிற்காக திருச்சி வந்து தற்போது கொடிகட்டி பறக்கிறார்கள். இந்த கள்ள லாட்டரியில் சென்னை முதல் திருச்சி வரை பல காவல்துறை அதிகாரிகள் குறைந்த வட்டிக்கு முதலீடு செய்திருக்கிறார்கள். திருச்சி மாவட்ட போலீசுக்கு, போலீஸ் சிவக்குமார் 1 மாசம் கொடுக்கும் லஞ்சம் மட்டும் 1 கோடியைத் தாண்டும் என்று சொல்லி வாய் பிளக்க வைக்கிறார்கள்.

நக்கீரன் செய்தி வெளியானவுடன் இந்த மூவர் அணி குறித்து சென்னை தலைமையிடத்து காவல்துறை தீவிரமாக விசாரித்து இன்ஸ்பெக்டர் பாரி, டி.ஜ.ஜி. இன்ஸ்பெக்டர் ஜெனட் ஜெசிந்தா ஆகியோரை அதிரடியாக டம்மி போஸ்டிங்கிற்கு தூக்கியடித்திருக்கிறார்கள்.

உளவுப்பிரிவு டி.எஸ்.பியாக பதவியேற் றிருக்கும் இமய வரம்பனின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்த்துள் ளது திருச்சி.

-ஜெ.டி.ஆர்.

nkn260920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe