இப்படியும் கிராமங்கள் இந்த மாநிலத்தில் இருக்கின்றனவா என அதிர்ச்சியூட்டும் நிலையில் இருக்கின்றன பரிதாபத்திற்குரிய மலைக்கிராமங்கள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்டது ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள நெக்னா மலைக்கிராமம். இரண்டு மலைகளை சுமார் 7 கி.மீ தூரம் ஏறி இறங்கினால் வரும் மலைக்கிராமம். கடந்த டிசம்பர் மாதம் இந்த மலை கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் வேலைக்கு சென்ற இடத்தில் இறந்துவிட்டார்.
அவரது உடலை டோலி கட்டி மலை அடிவாரத்தில் இருந்து தங்களது கிராமத்துக்கு கொண்டு சென்றனர். 7 மாத கர்ப்பிணியாக இருந்த முத்து சாமியின் மனைவி அனிதாவும் நடந்து சென்றார், இது தமிழகத்தை அதிர்ச்சியடைய செய்தது. அந்த கிராமத்தின் நிலையை அறிய நேரடியாக விசிட் அடித்த நக்கீரன், பாதையில்லாமல் அந்த மலைவாழ் மக்கள்படும் துயரம், ரேஷன் அரிசி கூட வாங்க முடியாத நிலை, மருத்துவ வசதியில்லாத கொடுமை, பள்ளியிருந்தும் செயல்படாத அவலநிலை, எரியாத மின்விளக்குகள், கிராம இளைஞர்களுக்கு பெண் கொடுக்க தயங்கும் பிற கிராம மக்கள், முதியோர் உதவித்தொகை வாங்க தள்ளாத வயதில் தடுமாறி மலை இறங்கி ஏறும் மக்கள் என பலவற்றை சுட்டிக்காட்டி விரிவான செய்தியை, அமைச்சர் தொகுதியில் 50 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் கிராமம் என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். ட
இப்படியும் கிராமங்கள் இந்த மாநிலத்தில் இருக்கின்றனவா என அதிர்ச்சியூட்டும் நிலையில் இருக்கின்றன பரிதாபத்திற்குரிய மலைக்கிராமங்கள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்டது ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள நெக்னா மலைக்கிராமம். இரண்டு மலைகளை சுமார் 7 கி.மீ தூரம் ஏறி இறங்கினால் வரும் மலைக்கிராமம். கடந்த டிசம்பர் மாதம் இந்த மலை கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் வேலைக்கு சென்ற இடத்தில் இறந்துவிட்டார்.
அவரது உடலை டோலி கட்டி மலை அடிவாரத்தில் இருந்து தங்களது கிராமத்துக்கு கொண்டு சென்றனர். 7 மாத கர்ப்பிணியாக இருந்த முத்து சாமியின் மனைவி அனிதாவும் நடந்து சென்றார், இது தமிழகத்தை அதிர்ச்சியடைய செய்தது. அந்த கிராமத்தின் நிலையை அறிய நேரடியாக விசிட் அடித்த நக்கீரன், பாதையில்லாமல் அந்த மலைவாழ் மக்கள்படும் துயரம், ரேஷன் அரிசி கூட வாங்க முடியாத நிலை, மருத்துவ வசதியில்லாத கொடுமை, பள்ளியிருந்தும் செயல்படாத அவலநிலை, எரியாத மின்விளக்குகள், கிராம இளைஞர்களுக்கு பெண் கொடுக்க தயங்கும் பிற கிராம மக்கள், முதியோர் உதவித்தொகை வாங்க தள்ளாத வயதில் தடுமாறி மலை இறங்கி ஏறும் மக்கள் என பலவற்றை சுட்டிக்காட்டி விரிவான செய்தியை, அமைச்சர் தொகுதியில் 50 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் கிராமம் என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். டோலி கட்டி உடலை மலைக்கு கொண்டு சென்றதும், அதையும் தாண் டிய விரிவான நக்கீரனின் செய்தியும் உயரதி காரிகளை உலுக்கிவிட்டது. அந்த கிராமத்துக்கு நேரடியாக சென்றார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன்அருள். மக்களிடம் குறைகளை கேட்டவர், விரைந்து சாலை அமைக்க ஏற்பாடுகள் செய்கிறேன் என வாக்குறுதி தந்துவிட்டு வந்தார். அதன்பின் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அந்த கிராமத்துக்கு மலைமீது ஏறி சென்று குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் சென்று வந்தபின்பே, அந்த மக்களின் வலியை உணர்ந்தனர். பழைய ஆவணங்களை தூசு தட்டி எடுத்தனர்.
7 கி.மீ தூரத்தில் 4 கி.மீ தூரம் வனத்துறை இடமாக இருந்தது. அந்த இடத்துக்கு பதில் மாற்று இடம் தருகிறோம் என ஆவணங்கள் அனுப்பியும் வனத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின் அமைச்சர் வீரமணி, கலெக்டர் இருவரும் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி, வாய்மொழி உத்தரவு வாங்கி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் கிராம மக்கள் இணைந்து 3 வாரத்தில் தங்களுக்கான மண் பாதையை அமைத்துக் கொண்டனர். தற்போது அடிவாரத்தில் இருந்து அந்த கிராமம் வரை மலையில் மண் பாதை அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 23ந்தேதி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான நிலோபர்கபில், வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, கலெக்டர் சிவன்அருள், எஸ்.பி. விஜயகுமார் என அதிகாரிகள் படை அந்த மலைகிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையில் வாகனங்களில் பயணம் செய்தனர். கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கியபின் அமைச்சர் வீரமணி பேசும்போது, ""மூன்று நான்கு தலைமுறையாக நிலவி வந்த பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. இது முதல்கட்ட நடவடிக்கை இதனை தொடர்ந்து அனைத்து அடிப்படை தேவைகளும் ஒன்றன்பின்னர் ஒன்றாக தீர்க்கப்படும். குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண குளங்கள் தற் போது தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. இந்த பணியினை செய்த அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன்'' என்றார்.
திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் எல்லையில் கல்வராயன் மலை தொடர்ச்சியில் உள்ளது அக்கரப்பட்டி, மேல் வலசை, கீழ்வலசை மலைக் கிராமங்கள். இந்த கிரா மங்களுக்கு மலைஅடிவாரமான உள்செக்கடியில் இருந்து 7 கி.மீ தூரத்தில் மலை உச்சியில் உள்ள கிராமங்களுக்கு ஒற்றையடி பாதை கூட இல்லாத செங்குத்தான மலையில் நடந்து மட்டுமே செல்ல முடியும். வாகனத்தில் செல்ல வேண்டும் என்றால் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு வழியாக 90 கி.மீ பயணமாக வேண்டும். அப்படியும் அக்கரப்பட்டி வரை மட்டுமே போகமுடியும், மற்ற இரண்டு கிராமங்களுக்கு நடந்துதான் செல்ல முடியும். அதைப் பற்றி கேள்விப்பட்டு நக்கீரன் மட்டுமே அப்போது அங்கு சென்றது. அந்த கிராமங்களில் மின்சாரம் கிடையாது, குடிசை வீடுகள், தொடக்கப்பள்ளி பன்றிகளின் இல்லமாக இருந்தது, குடிக்க நல்ல தண்ணீரில்லை, நடக்க முடியாத பாட்டிகள், வறுமையில் வாழும் மக்கள் பற்றி நேரடியாக கண்டு, அதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த விஜய்பிங்ளேவிடம் முறையிட்டோம். அதிர்ச்சியானவர், ""நானே நேரில் அந்த கிராமத்துக்கு செல்கிறேன்'' என்றார். அவரின் கருத்தோடு 2013 ஏப்ரல் மாதம் நக்கீரனில் அச்செய்தி வெளியானது.
அந்த செய்தி ஆட்சியாளர்களை உலுக்க அடுத்த இரண்டாவது நாள் கலெக்டர் விஜய்பிங்ளே அந்த கிராமத்துக்கு அதிகாரிகள் படையுடன் சென்றார். வாகனத்தில் செல்ல முடியாத அந்த கிராமங்களுக்கு நடந்து செல்ல பிறதுறை அதிகாரிகள் நொந்துபோய்விட்டனர். கலெக்டர் ஆய்வு பற்றிய செய்தி அதே ஏப்ரல் மாதத்தில் நக்கீரன் வெளியிட்டது. திருவண்ணாமலை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள், அந்த கிராமங்களுக்கு மலைவழியாக மின் கம்பங்களை நட்டு மின் சாரம் கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுக்கிறது என்ற னர். விழுப்புரம் மாவட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி அவர்களுக்கு மின்சாரவசதி கிடைக்கவைத்தார் விஜய்பிங்ளே. சாலை வசதிக்காக வனத்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினார் கலெக்டர். அந்தக் கடிதம் வனத்துறை அலுவலகத்தில் இருந்த நிலையில் விஜய்பிங்ளே இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் வந்த அதிகாரிகள் முயற்சி செய்ய, வனத்துறை தடங்கல் செய்ய, என தள்ளிக்கொண்டே போனது.
3 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக வந்த கந்தசாமி கவனத்துக்கு இந்த கிராமங்களின் அவல நிலை சென்றது. அவரும் நேரடியாக அந்த கிராமத்துக்கு பயணமாகி நிலைமையை கவனித்தார். பின்னர் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி, மாற்று இடம் வழங்க ஏற்பாடுகள் செய்தபின் வனத்துறை அனுமதி அளித்தது. அதன்பின் தற்போது கீழ்வலசை முதல் அடிவாரத்தில் உள்ள உள்செக்கடி வரையிலான 6 கி.மீ தூரம் சாலை போடும் பணி நடைபெறுகிறது. இதில் 1.2 கி.மீ வருவாய்த்துறை இடமாகவும், 4.8 கி.மீ வனத்துறை இடமாகவும் உள்ளது. மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் இந்தபணிகளை தொடங்கியுள்ளனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் சேரப்பட்டு முதல் உள்செக்கடி கிராமம் வரை 13.4 சாலையை தார்சாலையாக மாற்ற 3.50 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகளை அதிகாரிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நடந்தும், வாகனங்களில் சென்றும் ஜூன் 20ந்தேதி ஆய்வு செய்தார்.
நக்கீரன் செய்தியின் எதிரொலியால், பலப்பல ஆண்டுகளாக சாலைவசதி, மின்வசதி, பள்ளி, மருத்துவவசதி இல்லாமல் இருந்த இந்த மலைக்கிராம மக்களுக்கான விடியல் கண்ணுக்கு தெரிகிறது.
-து.ராஜா