Advertisment

ஆணைய அறிக்கை எதிரொலி தொடர்ச்சியாக சஸ்பெண்டாகும் அதிகாரிகள்!

tt

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின் எதி ரொலியாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத் தின்போது காவல் ஆய்வாளராக பணியாற்றி பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த இன்ஸ் பெக்டர் திருமலை, சைக்கோவாக மாறி பல உயிர் களை நரபலி வேட்டையாடிய சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஷ் ஆகிய காவலர்களும், அன்றைய தினத்தில் தான்தோன்றித்தனமாக செயல்பட்ட தாசில்தார்கள் சந்திரன், சேகர், கண்ணன் உள்ளிட்ட வ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின் எதி ரொலியாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத் தின்போது காவல் ஆய்வாளராக பணியாற்றி பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த இன்ஸ் பெக்டர் திருமலை, சைக்கோவாக மாறி பல உயிர் களை நரபலி வேட்டையாடிய சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஷ் ஆகிய காவலர்களும், அன்றைய தினத்தில் தான்தோன்றித்தனமாக செயல்பட்ட தாசில்தார்கள் சந்திரன், சேகர், கண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

tt

"துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட முதன்மைக் குற்றவாளிகளான காவல் ஆய்வாளர்கள் திருமலை (இன்று டி.எஸ்.பி.), ஹரிகரன், பார்த்திபன் ஆகிய மூன்று பேரும் ஸ்டெர்லைட் ஆலை உள்ள சிப்காட் காவல் நிலையங்களில் பணியாற்றியவர் கள். இதில் காவல் ஆய்வாளர்கள் தலா ரூ.55 லட் சம் முதல் 70 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பொருத்தவரை குற்றம்புரிந்த காவல்துறையினரை மட்டும் தனியாக விசாரணை மேற்கொள்வதற்கு என்றே ஒரு விசாரணை ஆணை யம் அமைத்து விசாரணை மேற்கொள்வது தேவை யாக உள்ளது. காவல்துறையின ரின் இத்தகைய காட்டுமிராண் டித்தனமான படுகொலைக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத் தின் சதிப் பின்னணியா அல்லது அன்றைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியாளர்களின் தூண்டுதலா.? அல்லது காவல் துறையினரின் பேரமா? என பல்வேறுபட்ட பொதுமக்களின் சந்தேகங்கள் விசா ரணை ஆணைய அறிக்கைகளில் வெளிவரவில்லை. இத்தகைய சூழலில் தற்போது குறிப்பிட்ட சில காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்புச் செயலாகும்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆலைக்கெதிரான போராட் டத்தில் ஈடுபட்ட அக்ரி பரமசிவன்.

tt

Advertisment

ஆலைக்கெதிரான போராட்டத்தில் பங்கு கொண்ட மெரினா பிரபுவோ, "தமிழ்நாடு முதலமைச் சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிபடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக சிறப்புச் சட்டம் இயற்றி நிரந்தர மாக மூடுவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைத்தும். துப்பாக்கிச் சூட்டில் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு இழப்பீட்டை அதிகரித்தும், ஆணையத்தில் கூறப்பட்டுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் நிறைவேற்றிட அரசு உதவவேண்டும். இதேவளையில், மக்களை குற்றவாளியாக சித்தரிக்கும் சி.பி.ஐ. விசாரணையை தமிழ்நாடு அரசு புறந் தள்ளவேண்டும்'' என்கின்றார்.

படங்கள்: விவேக்

nkn261022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe