"1900ஆம் ஆண்டு பாலக்காடு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதையொட்டியுள்ள கொங்கு மண்டலப் பகுதியும் ஆட்டம் கண்டது. அதேபோல் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நிலநடுக்கம் வரும் வாய்ப்பு அதிகமுள்ளது!'' என கொங்கு மண்டலத்திற்கு எச்சரிக்கை விட்டுள்ளது இயற்கைப் பேரிடர் மேலாண்மை.
1900, பிப்ரவரி 8ஆம் தேதி அதிகாலை, 3:11 மணியளவில், பாலக்காடு மாவட்டத்தி லுள்ள சித்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லேப்பிள்ளியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நூறு பேரை பலி கொண்டது. அதன் தாக்கத்தில் கோவை மணிக்கூண்டு அருகே, 33 பேர் உயிரிழந்ததாக ஆங்கிலேயே அரசு ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டவுன்ஹால் மைக்கேல் சர்ச்சின் கிழக்கு கோபுரம் பூகம்பத் தால் இடிந்ததாக அங்குள்ள சர்ச் வரலாற்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலக்காட்டை சேர்ந்த பூகம்ப ஆராய்ச்சியாளர் முனைவர் சரவணகுமார், "இந்தியாவை உலுக்கிய 2004ஆம் ஆண்டு சுனாமிக்கு, இந்தோ னேஷியாவின் சுமத்ரா பகுதியில் ஏற்பட்ட நில
"1900ஆம் ஆண்டு பாலக்காடு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதையொட்டியுள்ள கொங்கு மண்டலப் பகுதியும் ஆட்டம் கண்டது. அதேபோல் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நிலநடுக்கம் வரும் வாய்ப்பு அதிகமுள்ளது!'' என கொங்கு மண்டலத்திற்கு எச்சரிக்கை விட்டுள்ளது இயற்கைப் பேரிடர் மேலாண்மை.
1900, பிப்ரவரி 8ஆம் தேதி அதிகாலை, 3:11 மணியளவில், பாலக்காடு மாவட்டத்தி லுள்ள சித்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லேப்பிள்ளியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நூறு பேரை பலி கொண்டது. அதன் தாக்கத்தில் கோவை மணிக்கூண்டு அருகே, 33 பேர் உயிரிழந்ததாக ஆங்கிலேயே அரசு ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டவுன்ஹால் மைக்கேல் சர்ச்சின் கிழக்கு கோபுரம் பூகம்பத் தால் இடிந்ததாக அங்குள்ள சர்ச் வரலாற்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலக்காட்டை சேர்ந்த பூகம்ப ஆராய்ச்சியாளர் முனைவர் சரவணகுமார், "இந்தியாவை உலுக்கிய 2004ஆம் ஆண்டு சுனாமிக்கு, இந்தோ னேஷியாவின் சுமத்ரா பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கமே காரணமாயிருந்தது. அதேநாளில், தர்மபுரி, சேலம், திருப்பூர், காங்கேயம், நாகப் பட்டினம், தூத்துக்குடி, கோவில்பட்டி, திண்டுக் கல், உடுமலை ஆகிய பகுதிகளில், 2 - 3 என்ற ரிக்டர் அளவில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட் டது பலரும் அறியாத செய்தியாகும். 2010, பிப்ரவரி 10, 14 ஆகிய தேதிகளில் கேரள மாநி லத்தின் திருச்சூர், ஓட்டுப்பாற, வடக்கஞ்சேரி, சேலக்கரை, தேசமங்கலம் ஆகிய பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 2.2 முதல் 2.8 வரை நிலநடுக்கமும், நெம்மாறை வண்டித்தாவளம், கொழிஞ்சாம்பாறை ஆகிய பகுதிகளிலும் 2.8 ரிக்டர் அளவில் பூகம்பங்களும் உணரப்பட் டது. இவை அனைத்தும், 1900ம் ஆண்டில் சித்தூரை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக் கத்தின் தொடர் பூகம்பங்கள் தான். ஓரிடத்தில் நில நடுக்கம் பெரியளவில் ஏற்பட்டால், அந்த இடத்தில் அடுத்த நூறு ஆண்டுகளில் கண்டிப் பாக பூகம்பங்கள் நிகழும். 30 ஆண்டுகள் முன் பின் ஆகலாம். நம்மால், நிலநடுக்கத்தை தடுக்க முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், உயிரிழப்பு, சேதத்தைத் தவிர்க்கலாம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/kovai1-2025-12-26-11-44-36.jpg)
கோவை சுற்று வட்டாரப் பகுதிகளி லுள்ள பூமியின் டெக்டானிக் பிளேட்கள், சற்று பலவீனமாக இருப்பது உண்மையே. இப் போதுள்ள கட்டடங்கள், மக்கள் அடர்த்தி ஆகியவற்றைப் பார்த்தால், இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமாக இருக்குமென்பது நிச்சயம். பாலக்காடு மற்றும் கோவை மாவட்டங் களில், நில நடுக்க பாதிப்பு அதிகமிருக்கிறது என்று ஆய்வுகள் எச்சரித்தாலும், இவ்விரு பகுதிகளிலுமே, டெக்டானிக் பிளேட்களை பலவீனப்படுத்தி, பூகம்பத்துக்கு "மிஸ்டு கால்' கொடுப்பதுபோல் 400க்கும் மேற்பட்ட பிர மாண்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குளங்கள், மலையடிவாரம் என எல்லாப் பகுதிகளிலும் மண் கொள்ளை, மானாவாரியாக நடக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்றோ, நாளையோ, இன்னும் சில ஆண்டுகளிலோ, பூகம்பம் நம் குடியிருப்பு களைப் புரட்டிப்போடுமென்பது நிச்சயம். இயற் கையைச் சீண்டுகின்ற வேலையை, இனியாவது இவர்கள் விடுவார்களா?'' என்கிறார்.
இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் ஆய்வு அமைப்புகள் நடத்திய ஆராய்ச்சிகளில், பாலக்காட் டுக் கணவாய் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் ஆறு முதல் ஏழு ரிக்டர் அளவிலான பூகம்பங்கள் வரும் என்பதை உறுதிப்படுத்தி அரசாங்க உத்தரவாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள பேரிடர் காலண்டரின் அடிப்படை யில், வரும் 12 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பங்கள் வருமென்பதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் முதல் கன்னியாகுமரி வரையிலும் 1,600 கி.மீ, தூரம் நீளும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், பாலக்காட்டு கணவாய்ப்பகுதியில் மட்டுமே ஓர் இடைவெளி ஏற்பட்டிருப்பதால், இம்மலைப் பகுதிக்கு கீழே மிகப்பெரிய பாதாள வெற்றிடம் உருவாகி, அதற்குள் மலைப்பகுதி இறங்கி யிருக்குமென்றும், அதனால் கணவாய் உருவாகியிருக்கலாமென்றும் புவி ஆராய்ச்சி வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆனால், மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியோ, விண்கல்லின் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாமென்கிறது.
பாலக்காட்டு கணவாய் நிலப்பரப்பு, ஃபுளூரைடு அதிகமாக இருக்கும் நிலப்பரப்பாக, அமிலத்தன்மை வாய்ந்த கருமண்ணாக இருப்ப தாகவும், பலவீனமான நில அமைப்பென்றும் தெரியவருகிறது. இதன்காரணமாக, 2013ஆம் ஆண்டில், கோவை, உக்கடத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மண் உறுதித் தன்மை குறைவாக இருப்பதாகவும், இப்பகுதி, நில அதிர்வில் மூன்றாவது மண்டலத்தில் இருப்பதாகவும் கூறி, கட்டடங்களில் மூன்று தளங்கள் மட்டுமே இருக்க வேண்டுமென நிபுணர் குழு எச்சரிக்க, 1064 வீடுகள் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இடிக்கப்பட்டதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, பூகம்பம் வருவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால், "பூகம்பம் வந்தால் என்ன செய்யவேண்டுமென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தேசிய பேரிடர் மேலாண்மைகுழு இணையத்தில் வெளியிடப் பட்டுள்ள வீடியோக்களை பார்த்து நம் குழந்தைகளுக்கு கற் றுத்தர வேண்டும். இயற்கையை புரிந்து, மனரீதியாக தைரியமாக வும், பேரிடரை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்கும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தாலே ஜப்பானியர் களைப்போல நாமும் பூகம்பத்தை கடந்துசெல்ல முடியும்'' என்கிறார் உளவியல் ஆலோசகர் முனைவர் ராதா கிருஷ்ணன்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us