தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. செங்கோட்டையனின் வெளியேற்றம், எடப்பாடியின் கோபி பிரச்சாரப் பயணத் தோல்வி, திருப்பரங்குன்றத் தில் நடந்த அமர்க்களம், ஓ.பி.எஸ். -அமித்ஷா சந்திப்பு போன்ற சம்பவங்களைப் பயன்படுத்தி பி.ஜே.பி. ‘"நான்தான் பாஸ்'’ என நிரூபிக்க முயல்கிறது. இது எடப்பாடியுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. விற்கு எதிர்பார்த்ததை விட அதிக சீட் பெற்றுத்தரும் வகையில் அமைந்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். செங் கோட்டையனின் வெளியேற்றம் அ.மலை மூலம் பி.எல்.சந்தோஷிற்கு தெரிவிக்கப்படுகிறது. அவர் அதை அமித்ஷாவுக்கு பாஸ் செய்கிறார். செங்கோட்டையன் த.வெ.க.வில் சேர்வதற்கு ஒப்புதல் தருகிறார் அமித்ஷா. அதன்பிறகு செங்கோட் டையனின் த.வெ.க. அசைவுகள் நடக்கிறது. செங்கோட்டையனுக்கு எதிராக வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. செங்கோட் டையன் போக்குவரத்துத்துறை ஊழல் வழக்கில் விடுதலை செய் யப்பட்டதை எதிர்த்து அடுத்தடுத்து அமைந்த தி.மு.க. அரசுகள் அப்பீல் எ
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. செங்கோட்டையனின் வெளியேற்றம், எடப்பாடியின் கோபி பிரச்சாரப் பயணத் தோல்வி, திருப்பரங்குன்றத் தில் நடந்த அமர்க்களம், ஓ.பி.எஸ். -அமித்ஷா சந்திப்பு போன்ற சம்பவங்களைப் பயன்படுத்தி பி.ஜே.பி. ‘"நான்தான் பாஸ்'’ என நிரூபிக்க முயல்கிறது. இது எடப்பாடியுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. விற்கு எதிர்பார்த்ததை விட அதிக சீட் பெற்றுத்தரும் வகையில் அமைந்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். செங் கோட்டையனின் வெளியேற்றம் அ.மலை மூலம் பி.எல்.சந்தோஷிற்கு தெரிவிக்கப்படுகிறது. அவர் அதை அமித்ஷாவுக்கு பாஸ் செய்கிறார். செங்கோட்டையன் த.வெ.க.வில் சேர்வதற்கு ஒப்புதல் தருகிறார் அமித்ஷா. அதன்பிறகு செங்கோட் டையனின் த.வெ.க. அசைவுகள் நடக்கிறது. செங்கோட்டையனுக்கு எதிராக வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. செங்கோட் டையன் போக்குவரத்துத்துறை ஊழல் வழக்கில் விடுதலை செய் யப்பட்டதை எதிர்த்து அடுத்தடுத்து அமைந்த தி.மு.க. அரசுகள் அப்பீல் எதுவும் செய்யவில்லை. அதற்காக தி.மு.க.வை பகைத்துக் கொள்ளாமல் அரசியல் செய்து வந்தார் செங்கோட்டையன்.
பா.ஜ.க.வின் கைப்பாவையாக செங்கோட் டையன் எடப்பாடிக்கு ‘செக்’ வைத்ததை அமித்ஷா அனுமதித்தார். அதை கடுமையாகப் போராடி எடப்பாடி முறியடித்தார். அதனால் செங்கோட்டையன் தனிமைப்படுத்தப்பட, அவரை தி.மு.க. அணுகியது. “"நீ தி.மு.க.வுக்கு போக வேண்டாம், த.வெ.க.வுக்கு வேண்டு மானால் செல்' என பா.ஜ.க. மேலிடம் அனு மதிக்க... த.வெ.க.வுக்கு சென்றார் செங்கோட் டையன். அவருடன் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினர் செல்வார்கள் என பா.ஜ.க. மேலிடம் எதிர்பார்த்தது. ஆனால் எடப்பாடி கடுமையாகப் போராடி அதை முறியடித்தார். அதே நேரத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக கோபி மக்களை திரட்டுகிறேன் என எடப்பாடி தொடங்கிய பிரச்சாரப்பயணம் தோல்வியில் முடிவடைந்தது. தமிழக களத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கை உறுதிப்படுத்த, செங்கோட் டையன் பாணியில் அமித்ஷாவை சந்திக்க குருமூர்த்தி வழியாக அப்பாய்ன்ட்மெண்ட் கேட்ட ஓ.பி.எஸ்.ஸை அனுமதித்தார் அமித்ஷா. குருமூர்த்தி மூலம் டெல்லிக்குச் சென்றார் ஓ.பி.எ.ஸ். தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோருக்கு இதற்கு முன்னர் எந்தவித அப்பாய்ன்ட்மெண்ட்டும் தராத அமித்ஷா, இம்முறை ஓ.பி.எஸ்.ஸை மறுபடியும் சந்தித்தது எடப்பாடிக்கு வைத்த செக்’ என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
ஓ.பி.எஸ்.சிடம் தமிழக அரசியல் சூழல் பற்றி விவாதித்த அமித்ஷாவிடம் இரண்டு கோரிக்கைகளை ஓ.பி.எஸ். முன்வைத்தார். அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும், எடப்பாடிக்கு சமமான மரியாதை யை தரும் வகையில் பதவி தரவேண்டும், அத்துடன் தனது மகனுக்கு மந்திரி பதவி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார் ஓ.பி.எஸ். இந்த கோரிக்கைகளை ஓ.பி.எஸ். சந் திப்பு முடிந்ததும் எடப்பாடியிடம் விவாதித்தார் அமித்ஷா. எடப்பாடி ஓ.பி.எஸ்.ஸை சேர்க்க சம்மதிக்கவில்லை. அதனால் மறுநாள் அமித்ஷாவை சந்தித்த ஓ.பி.எஸ்.ஸிடம், எடப்பாடி அ.தி.மு.க.வில் அவரை இணைக்க மறுப்பதை விளக்கினார் அமித்ஷா. அத்துடன் ஓ.பி.எஸ். மகனை மந்திரி ஆக்குவது தொடர் பான விசயத்தில் ‘அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றால் பார்த்துக்கொள்ளலாம்’ என எடப்பாடி கூறியதாக அமித்ஷா ஓ.பி.எஸ். ஸிடம் தெரிவித்தார். இறுதியில் ஓ.பி.எஸ். தனிக்கட்சி ஆரம்பித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன் டெல்லியிலிருந்து திரும்பினார் ஓ.பி.எஸ்.
அமித்ஷாவை பொறுத்தவரை செங்கோட் டையன் விவகாரம் போல அ.தி.மு.க.வை தங்களது கைகளில் எடுத்துக்கொள்வதற்கு ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா ஆகிய மூவரையும் கையாள்வது, கூடவே அ.மலையை தங்கள் பக்கம் வைத்துக்கொள்வது, அ.மலையும் டி.டி.வி.யும் ஓ.பி.எஸ்.ஸையும் இணைந்து த.வெ.க. கூட்டணிக்கு செல்வதை தடுப்பது ஆகியவையே அமித்ஷாவின் அஜண்டா. டிசம்பர் மாத மத்தியில் சென்னைக்கு வரும் அமித்ஷா, இந்த விவகாரங்களில் ஒரு மாரத்தான் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார். அமித்ஷா விடம் எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க முடியாதா என ஓ.பி.எஸ். கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘"இப்போது முடியாது.. எதிர்காலத்தில் பார்ப்போம்'’ என அமித்ஷா பதிலளித்துள்ளார். "த.வெ.க. விஜய்யை அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவர முடியாதா?' என்ற கேள்விக்கு ‘"நிச்சயம் முடியும்.. முயற்சி செய்து பார்க்கிறேன்'’ என்றுள்ளார் அமித்ஷா.
பா.ஜ.க. இத்தகைய பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபடுவது, எடப்பாடியை பலவீனப்படுத்தி அ.தி.மு.க.வை கைப்பற்று வதை நோக்கமாகக்கொண்டிருக்கிறது. நேற்று செங்கோட்டையன் இன்று ஓ.பி.எஸ். என பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது. டி.டி.வி. தினகரன் எடப்பாடிக்கு எதிராகப் பேசுவதும், பா.ஜ.க. ஆசியுடன் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தும் ஒரு செயல்தான். இதன்மூலம் பா.ஜ.க. தனது ஆதரவுத் தளத்தை அதிகப்படுத்தி வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விடம் அதிக சீட் வாங்கி தமிழக அரசியலில் முத்திரை பதிக்கும் ஒரு தந்திரமே இந்த சந்திப்பு என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
இதன்மூலம் டெல்லியில் எடப்பாடிக்கு எதிராக வெடித்த பூகம்பத்தால் அ.தி.மு.க.வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us