விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் (E-National Agriculture Market)'எனப்படும் 'தேசிய வேளாண் சந்தை இணையதளம்' எனும் புதிய நடைமுறை 2016-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப் படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இ-நாம் முறை கட்டாயமாக்கப்பட்டு, விளைபொருட் களுக்கு மதிப்பீடு செய்யும் வியாபாரிகள், விலை நிர்ணயம் செய்து மொபைல் போன் மூலம் அதை அனுப்பி ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இ-நாம் திட்டத்தை செயல்படுத்துவதில் விவசாயிகள், வியாபாரிகளுக்கு எதிரான அம்சங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடலூர், விழுப்புரம், விருத்தாசலம் உள்பட பல ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள், வியாபாரிகள், இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து விருத
விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் (E-National Agriculture Market)'எனப்படும் 'தேசிய வேளாண் சந்தை இணையதளம்' எனும் புதிய நடைமுறை 2016-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப் படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இ-நாம் முறை கட்டாயமாக்கப்பட்டு, விளைபொருட் களுக்கு மதிப்பீடு செய்யும் வியாபாரிகள், விலை நிர்ணயம் செய்து மொபைல் போன் மூலம் அதை அனுப்பி ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இ-நாம் திட்டத்தை செயல்படுத்துவதில் விவசாயிகள், வியாபாரிகளுக்கு எதிரான அம்சங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடலூர், விழுப்புரம், விருத்தாசலம் உள்பட பல ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள், வியாபாரிகள், இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து விருத்தாசலம் வட்டார விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் நம்மிடம், "உணவுப் பொருட்களான தானியங்கள், காய்கறி, பழங்கள் என விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை, விவசாயிகள் தமது பொருள்களுக்கான விலை நிலவரத்தை தாமே தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு இ-நாம் திட்டத்தை கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இ-நாம் திட்டம், தமிழகத்தில் உள்ள பல்வேறு விற்பனைக் கூடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் விருத்தாசலம் உள்ளிட்ட பல ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த 2 வருடங்களாகியும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல் அரசும் இ-நாம் திட்டம் குறித்து இதுவரை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. சீட்டு முறை, இ-நாம் முறை என்று இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதால் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான்'' என்கிறார்.
வியாபாரிகள் தரப்பில் பேசிய டி.வி.கே.மணி, "கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலுள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தமிழ் நாட்டிலேயே வேளாண் விளை பொருட்களுக்கான பெரிய விற்பனைச் சந்தையாக திகழ்கிறது. கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது அரியலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களிலுள்ள ஆயிரத்துக் கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் இங்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
அதேபோல் பல்வேறு ஊர்களிலிருந்து பெரும் வணிக வியாபாரிகளும் தேவையானவற்றை நேரிடையாகவே வந்து வாங்கிச் செல்கிறார்கள். வெளியூர் வியாபாரிகளுக்காக நாங்கள் ஏலத்தில் கலந்து கொண்டு சரியான விலையை குறிப்பிடு கிறோம். "இ-நாம்' திட்டம் எனும் செல்போன் ஏல முறையை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. காலை 9 மணிக்கு தொடங்கி 11.00 மணிக்குள் ஏலம் குறிப்பிட்டு செல்போன் மூலம் அனுப்ப வேண்டும் என்கிறார்கள். சீசன் காலங்களில் சாக்கு மாற்றவே 11 மணிக்கு மேல் ஆகிவிடும். அதற்குப்பின் கிரேட் வாரியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் தரம் பிரித்து வழங்கிய பின்பு தான் விலை நிர்ணயம் செய்ய முடியும்.
நாங்கள் கைகளால் தரம் பார்க்கும் போது ஒரு மூட்டையின் நடுப்பகுதி வரை கை நுழைத்து ஒரு நொடியில் பார்த்து விடுவோம். ஆனால் மெஷின் மூலம் மாய்சரைஸ் (ஈரப்பதம்) பார்த்து கிரேட் வாரியாக தரம் பிரிக்கத் தாமதமாகிறது. சீட்டு முறையில் காலை 11 மணிக்குள் 1000 லாட்டுகள் போட்டு விடுவோம். இதில் தரம் பார்க்கவே 11 மணிக்கு மேல் ஆகிறது. சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் மூட்டைகள் வரை பொருட்கள் வரும். 15 ஆயிரம் மூட்டை களையும் ஒரே நாளில் எடைபோட்டு, சாக்குமாற்றி எடுத்துச் செல்வது சாத்தியமில்லை. எனவே இணையவழி விலை நிர்ணயம் சாத்தியப்படாதது. நாங்கள் காலங்காலமாக சீட்டு முறையிலேயே பழகி விட்டோம். செல்போன் ஏலம் எடுப்பது குறித்து அரசு எவ்வித பயிற்சியும் கொடுக்கவில்லை'' என்கிறார்.
இது குறித்து கடலூர் மாவட்ட விற்பனைக் குழு செயலாளர் விஜயா கூறுகையில், "மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 70% இ-நாம் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், சேத்தியாத் தோப்பு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தற்போது 50 சதவீதம் அளவிற்கு இ-நாம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் வியாபாரிகள் இதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ள தாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் தற்போது பழகிவிட்ட பிறகு அவர்களுக்கு இது வசதி யாக இருப்பதாக தெரிவிக் கிறார்கள்'' என்றார்.
இந்த இ-நாம் திட்டத்தின் பின்னணியில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பல்வேறு ஐயங்கள் இருக்கிறது. இ-நாம் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-நாம் செயலி வாயிலாக தரம் பார்த்து கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது உள்ளூர் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படலாம். எனவே இத்திட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகளுக்குப் பாதகமான அம்சங்களை நீக்கிவிட்டு படிப்படியாகச் செயல்படுத்த வேண்டுமென்கிறார்கள்.