மிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முறையாக செயல்படுகிறார்களா? அவர்களுக்கு தேவையான உதவிகள் என்னென்ன? அனைத்து காவலர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா? என தனது இல்லத்திற்குகூட செல்லாமல் தலைமை செயலகத் திலேயே தங்கி, கண் காணித்து வருகிறார் டி.ஜி.பி திரிபாதி.

அதேபோல முதலமைச்சர் எடுக்கும் அவசர முடிவுகளுக்கும், மத்திய அரசின் கட்டுப்பாடு களுக்கும் எவ்வாறு காவல்துறை செயலாற்ற வேண்டும் என அவற்றை தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக எவ்வித அசம்பாவிதம் இல்லாமல் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நட வடிக்கைகளில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அறியாமை காரணமாக நடமாடும் பொது மக்கள்மீது எவ்வித அடக்குமுறையோ, தடியடியோ நடத்தகூடாது. சூழ்நிலையை எடுத்து சொல்லி செயல்பட வேண்டும் என வழிநடத்தி வருகிறார்.

pp

அவருக்கு துணையாக சென்னை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு, குடிசை பகுதிகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், காவலர் குடியிருப்புகள், சுகாதாரம் இன்றி கிடக்கும் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு பணி தினந்தோறும் நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் சுவர் மற்றும் தார்சாலைகளில் விழிப்புணர்வு வாசகம் மூலம் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Advertisment

சென்னை வேளச் சேரி குருநானக் கல்லூரியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட மற்றும் கூலி தொழிலாளிகளுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அவர்களுக்கு அடிப் படை வசதிகள் செய்து கொடுத்து வருகிறார்.

அதேபோல, காவல்துறை அதி காரிகளில் பட்டப் படிப்பு மற்றும் முது நிலை படிப்புகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் சிறந்து விளங்கிய அதிகாரிகளை தேர்வு செய்து, திரவ சுத்திகரிப்பான் பொருத்தப்பட்டு உப்பு கலந்த தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி, சானிடைசர் என்னும் கிருமிநாசினியை காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்களோடு இணைந்து தயாரித்து பயன்பாட்டிற்கு வைத்துள்ளார்.

சென்னையில் பணிபுரியும் காவலர்கள் குடும்பத்தில் யாரேனும் தையல் மிஷின் வைத்திருந்தால் அவற்றை கமிஷனர் அலு வலகத்திற்கு எடுத்து வரச்சொல்லி, அவ்வாறு எடுத்து வரப்பட்ட மிஷின்கள் மூலம் முககவசம் தயாரித்து, சென்னை பெருநகர காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் வழங்கிவருகிறார்.

Advertisment

கொரோனா அச்சத்தில் இருக்கும் மக்களுக்கும், காவலர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து செயலாற்றும் டி.ஜி.பி,க் கும் சென்னை கமிஷ்ன ருக்கும் நாம் காட்ட வேண்டிய நன்றி என்பது, ஊரடங்கு நாள் முடியும் வரை வீட்டிலேயே இருப் பதுதான்.

-அ.அருண்பாண்டியன்