திருச்சி பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் யார் என்ற மர்மம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ்தான் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போகிறது என்ற முழு நம்பிக்கையோடு இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதில் அதிர்ச்சிதான். ஆனால், காங்கிரஸ் கட்சியிலுள்ள மற்றொரு கோஷ்டிக்கு இது கொண்டாட்டமான செய்தியானது.

கடந்த முறை திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திருநாவுகரச ருக்கு கள்ளர் சமூக ஓட்டு மட்டுமே அதிகளவில் விழுந் தது. கட்சித் தொண்டர்கள் பெரிய அளவில் இவருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. தொகுதியில் வலம் வருவதோ, பாராளுமன்ற உரைகளில் பேசுவதோ வெளியே தெரியாமலிருந்த எம்.பி., கடந்த சில மாதங்களாக மட்டும்தான் தொகுதிக்குள் வலம்வந்து காங்கிரஸ் தொண்டர்களின் கண்களில் தென்படுகிறார். ஒன்றிய அரசின் துறை அமைச் சர்களுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதி தொகுதிக்கு ஒருசில நலத்திட்டங்களை பெற்றது மட்டுமே அவரது சாதனை என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. திருச்சி அடைக்கலராஜ் மகன் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ்க்கு சீட் கொடுக்கா விட்டால் தீக்குளிப்போம் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சமீபத்தில் திருநாவுக்கரசர் பா.ஜ.க.விற்கு செல்வதாக ஒரு புரளி கிளம்பியது. அந்தப் புரளி பரவலாக புகைச்சலாகியதால், எரிச்சலடைந்த திருநாவுக்கரசர், “இப்புரளியைக் கிளப்புபவர்களை செருப்பால் அடிப்பேன்' என்ற கடுமையான வார்த்தை பிரயோகத்தை வெளிப்படுத்தி னார்.

dd

கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வின் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வென்றார். இந்த தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு அவர்கள் கேட்டபடி திருச்சி தொகுதி கொடுக்கப்பட்டது. இம்முறை இங்கே துரை.வைகோ முதன்முறையாக தேர்தலில் களமிறங்குகிறார்.

Advertisment

ம.தி.மு.க. அவர்களுடைய சின்ன மான பம்பரம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தேர்தல் ஆணை யத்தில் முறையிட்டுள்ளனர்.

பொதுவாக ஒரு கட்சிக்கு 6 சதவீதம் வாக்கு இருந்தால்தான் அந்த கட்சி தேர்தலில் போட்டியிட சின்னம் ஒதுக்கப்படும். ஆனால் ம.தி.மு.க.விடம் 5.99 சதவீதம் வாக்குவங்கி உள்ளது. எனவே தேர்தல் ஆணையம்தான் இறுதியாக முடிவு செய்யும். பம்பரம் சின்னம் கேள்விக்குறியாகும் பட்சத்தில் வேறு சின்னத்திலோ அல்லது உதயசூரிய னிலோ போட்டியிடக்கூடும்.

கூட்டணிக் கட்சிகள் இவருக்கு பக்கபலமாக இருந்து செயல்படு வார்களா என்பது கேள்விக்குறிதான். அதற்கு முக்கிய காரணமாகச் சொல்வது அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில், திருச்சியில் உள்ள தி.மு.க.வினர் பெரம்பலூரில் மையம் கொண்டு எப்படியும் அருண்நேருவை வெற்றியடையச் செய்வதற் காகவே முழுமூச்சில் பாடுபடுவார்கள். அதேசமயம் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் துரை வைகோவை வெற்றிபெறச் செய்ய முழு ஈடுபாட்டுடன் கூட்டணிக் கட்சியினர் பாடுபட்டு உழைத்தால்தான் தி.மு.க.வின் 40க்கு 40 என்ற வெற்றி இலக்கை வாகை சூட முடி யும். இதற்கிடையில் அ.தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை கருப்பையா போட்டியிட்டால் மேலும் கடும் போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ம.தி.மு.க.வை விட அ.தி.மு.க. அதிகளவில் இந்த தொகுதியில் பணத்தை வாரியிறைத்து வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

Advertisment

திருச்சி பாராளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்துராஜா மற்றும் எஸ்.சி சமூகத்தினர் சரிக்குச் சமமாக உள்ளனர். இந்த சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3,04,908 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் திருச்சி மேற்கு தொகுதியில் 2,71,657 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சி கிழக்கில் 2,53,600 வாக்காளர்களும், திருவெறும்பூரில் 2,67,997 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரை கள்ளர் சமூகத்தினர் பரவலாக அதிகம் உள்ளனர். கந்தர்வகோட்டை பகுதியில் 2,01,771 வாக்காளர்கள் உள்ளனர். கந்தர்வகோட்டையில் கள்ளர், எஸ்.சி, முத்துராஜா, உடையார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். அதேபோல் புதுக்கோட்டையில் 2,44,.809 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் முத்துராஜா, கள்ளர், இஸ்லாமிய சமூகத்தினர் அதிகம் உள்ளனர்.

தி.மு.க. அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பரவலாக மக்கள் மத்தியில் சென்றுள்ளதாலும் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ள நற்பெயர் காரணமாகவும் மக்கள் மத்தியில் தி.மு.க. அலை வீசுகிறது. இருப்பினும் திருச்சி பாராளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை துரை வைகோவை வெற்றி பெறச் செய்ய தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் தங்களுடைய முழு உழைப்பையும் பரிபூரணமாகக் கொடுத்தால்தான் வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்கிறார்கள் அரசியல் கூர்நோக்கர்கள்.

dd