ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி, "ம.தி.மு.க.வை தி.மு.க.வில் இணைக்க வேண்டும்' என வைகோவிற்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார். இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத் தியது. இந்நிலையில் கட்சியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத் திலேயே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் என ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை.வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரை. வைகோ நக்கீரனிடம் பேசினார்.
திருப்பூர் துரைசாமி தி.மு.க. உடன் ம.தி.மு.க.வினை இணைக்க வேண்டும் என வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளாரே?
துரைசாமி கொடுத்துள்ள கடிதம் முரண்பாடான ஒன்று தான். ஏனென்றால் மூன்று வருடங்களுக்கு முன்பு தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணி குறித்து முடிவெடுக்கும்போது, தி.மு.க. உடனான கூட்டணி வைப்பதற் கான காரணம் குறித்தும் விவாதிக் கப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ, “பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்கள் மதவாத சக்தியாக இருக்கும்போது திராவிட இயக்கக் கொள்கை களில் நாம் கவனம் செலுத்தி அதனை பா.ஜ.க.விற்கு எதிராக வலுப்படுத்த வேண்டும். தற்போது அமைப்பு ரீதியாக தி.மு.க. வலுவாக உள்ளது. அவர்களுடன் நாமும் இருந்தால் பா.ஜ.க.வை வலுவாக எதிர்க்க முடியும். நாம் பிளவுபட்டு இருந்தால் நம்மால் எதிர்க்க முடியாது. நம் இயக்கம் தி.மு.க.வுடன் கூட்டணியில் இணைய வேண்டும் என்பது மட்டும் நம் நோக்கமல்ல. பா.ஜ.க.வை எதிர்க்கும் இயக்கங்கள் ஓரணியில் திரளவேண் டும் என்பதுதான் நம் எண்ணம்.
இதுவரை இது போன்ற ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டிற்கு வந்த தில்லை. அந்த ஒரு காரணத்திற் காகவே நாம் தி.மு.க. உடன் கூட் டணியில் இருப்பது அவசியம்”என கூறினார். பொதுச்செயலாளர் வைகோவின் கருத்தை கேட்டபின் ஒட்டுமொத்த கட்சியினரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் துரைசாமி அதனை ஏற்கவில்லை. அன்று அவர் பேசும் போது, தி.மு.க.வுடனான கூட்டணி சரி வராது. தி.மு.க.வுடன் நாம் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்று கூறினார். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
உட்கட்சிக் கூட்டத்தில் நடந்த இந்த விவாதத்தில் துரைசாமியின் கருத்தை கேட்ட பின், வைகோ ஒட்டுமொத்த நிர்வாகிகளும் இந்த முடிவினை ஏற்றுக் கொண்டார்கள் என கூறினார். ஆனால் இந்த முடிவில் எனக்கு ஒப்புதல் இல்லை என கூறினார் துரைசாமி. தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் கட்சியினரிடமே இந்த கூட்டணி தோற்கும் என சொல்லியுள்ளார். அவர் இருக்கும் பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் நேரத்தில் சென்று, நீங்கள் ஏன் வேலை செய்கிறீர்கள். யாருக்கு வேலை செய்கிறீர்கள் என்றெல்லாம் சொல்லியுள்ளார். இந்த தகவல் அனைத்தும் பொதுச் செயலாளருக்கு சென்றது.
தேர்தல் நேரத்தில் நம் வேட்பாளர்கள் நின்ற தொகுதியில் இவ்வாறு பேசினால் பாதிப்பு ஏற்படுமே. ம.தி.மு.க. அவைத்தலைவரே இவ்வாறு செயல்படுகிறார் என சொல்லி நாளை கூட்டணி குறித்து தி.மு.க. மாற்று முடிவெடுத் தால் யார் பொறுப்பேற்க முடியும். கட்சியின் தலைமைக்கு இந்த விவகாரம் சென்றது. கட்சியின் முடிவுக்கு மாற்றாகவும் தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பை பாதிப்படையச் செய்வது போலவும் செயல்படுகிறார் என்று பொதுச் செயலாளரிடம் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூறினர். அப்போதும் அவர் நடவடிக்கைகள் ஏதும் எடுக்க வேண்டாம் என்றும் இவ் விவகாரத்தை இத்துடன் விடுங்கள் என்றும் சொல்லிவிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரசியல் வாழ்வைத் தொடங்கிய துரைசாமி கோவை, ஈரோடு பஞ்சாலைத் தொழிலாளர் களை வைத்து கோவை ஈரோடு மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிற்சங்கம் என்ற தி.மு.க. தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார். அந்த தொழிலாளர்கள் கொடுத்த பணத்தில் சொத்துக்களை வாங்கி னார். 1992 ஆம் வருடம் தி.மு.க. தலைவர் கலைஞர், துரைசாமியை அழைத்து திராவிட பஞ்சாலை தொழிற்சங்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை தொழிற் சங்கமான எல்.பி.எப். உடன் இணைத்து அதன் சொத்துக்களை எல்லாம் எல்.பி.எஃப். கட்டுப் பாட்டில் மாற்றித்தர வேண்டும் என்று கூறி னார். அதற்கான பத்தி ரத்தை தயார் செய்து தருவதாக சொல்லிவிட்டு வெளியில் வந்தவர் மீண்டும் கலைஞரை சந்திக்கவே இல்லை. இந்த காலகட்டத்தில் தான் அவர் ம.தி. மு.க.வில் இணைந்தார். திராவிட பஞ்சாலை சங்கத்திற்கு 50 இடங்களில் கட்டிடங்கள் உள்ளன. அதன் இன்றைய மதிப்பு 400 கோடி. சங்கத்தை தி.மு.க. தொழிற்சங்கத்தில் இருந்து மாற்ற முயற்சித்தபோது சங்கத்தின் பொருளாளராக இருந்த பார்த்தசாரதி என்பவர் வழக்கு தொடுத்து அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தற்பொழுது கோவை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இடைப்பட்ட காலத்தில் சங்கத்தை சு.துரைசாமி அறக்கட்டளை என்று மாற்ற முயற் சித்தபோது, எதிர்த்தரப்பினர் ஆட்சேபனை செய்த தினால் அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் நடந்தபொழுது இந்த வழக்கை தி.மு.க. வாபஸ் பெறுமா என கேட்டார் துரைசாமி. வழக்கை வாபஸ் பெறச் சொல் லுங்கள் என்றும் சொன் னார். பொதுச்செயலாளர், அந்த விவகாரத்திற்கும் தற்போது விவாதிக்கப்படும் விஷயத்திற்கும் சம்பந்தம் இல்லை. அதைப்பற்றி பேசாதீர்கள் என சொல்லிவிட்டார். தனது தனிப் பட்ட நலனுக்காகவும் சொத்து விவகாரங் களுக்காகவும் தி.மு.க. உடனான கூட்டணி வேண்டாம் என சொல் கிறார்.
மூன்று வருடம் முன் தி.மு.க. உடனான கூட்டணி வேண்டாம் என சொன்னார். தி.மு.க. தலைவரை கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது தி.மு.க. தொழிற்சங்கத்திற்கு எதிராக இவர் தொடுத்த வழக்கை வாபஸ் பெறுவாரா? தொழிற்சங்கத்தின் சொத்துகளை மீண்டும் தி.மு.க.விற்கு கொடுக்கத் தயாரா?
துரை.வைகோ பள்ளி மாணவர் போல் இருக்கிறார் என்ற விமர்சனமும் வைக்கிறாரே?
முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் துரைசாமி. தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே விரும்பத்தகாத செயல்பாடு களைச் செய்துவருகிறார். மொட்டை கடுதாசி எல்லாம் போடுவார். முதலில் வைகோவும் ஒரு வருடம் சமாதானம் செய்து பார்த்தார். அவரை தக்கவைக்க தொடர்ந்து சமரசம் செய்தார். ஆனால் தொடர்ந்து வைகோவை பற்றி தவறாகப் பேசுவது, கூட்டணியை விமர்சனம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதன் பின் வைகோ அவரை தவிர்க்க ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்பே இதுபோல் கடிதம் எழுதியுள்ளார். இதுவரை 6 கடிதங்கள் எழுதியுள்ளார். அனைத்தும் 8 பக்கங்கள் இருக்கும். அந்த பங்களாவில் உட்கார்ந்து கொண்டு அக்கடிதங் களை எழுதுகிறார். கட்சிக்காரர் யாரும் அவருடன் தொடர்பில் கிடையாது. சொந்த ஊர் திருப்பூரில் கூட அவருக்கு செல்வாக்கு இல்லை. மாவட்டச் செயலாளர் நாகராஜன் இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அவரது வார்டில் கூட 10 பேர் அவருக்காக வரமாட்டார்கள். வெகுஜன விரோதிதான் அந்த நபர்.
உங்களை கட்சிக் குள் கொண்டு வந்தது குறித்து யாருக்கும் விருப்பம் இல்லை என்ற குற்றச் சாட்டையும் முன்வைக்கி றாரே?
இவர் கட்சியுடன் தொடர்பில் இல்லாமல் பங்களா அரசியல் செய்து கொண்டுள்ளார். கட்சியினர் யாரும் அவரிடம் தொடர்பில் இல்லை. கட்சியில் இருந்து சமீபத்தில் சிலரை நீக்கினோம். அவர்களுடன் தொடர்பினை வைத்துக்கொண்டு இம்மாதிரி செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து கட்சியின் தலைமைக்கு எதிராகவும் கூட்டணிக்கு எதிராகவும் செயல்படுவதால்தான் மொத்தமாக அவரைப் புறக்கணித்துள்ளனர். ஆனால் வைகோதான் அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் கடந்து போவோம் என்கிறார். முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு களுக்காக தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் குழப் பத்தை உண்டாக்க இவ்வாறு செயல்படுகிறார்.
-சந்திப்பு: வே.ராஜவேல்
படங்கள்: ஸ்டாலின்