தீப்பெட்டியின் பிரமாண்ட வெற்றி!  துரை வைகோ நெகிழ்ச்சி!

vaiko

durai vaiko

பாராளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ, 5,42,213 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். திருச்சி தொகுதி வேட்பாளராக துரை வைகோ அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமே பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 24ஆம் தேதி, திருச்சியிலுள்ள அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணிக்கட்சி வேட்பாளர்களின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர

durai vaiko

பாராளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ, 5,42,213 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். திருச்சி தொகுதி வேட்பாளராக துரை வைகோ அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமே பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 24ஆம் தேதி, திருச்சியிலுள்ள அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணிக்கட்சி வேட்பாளர்களின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினர்.

கூட்டத்தில் பேசிய துரை வைகோ, ""அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாதபோது கட்சியினர் என்னை அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டனர்'' எனக்கூறி மேடையிலேயே தேம்பி அழுதார் துரை.வைகோ. இதனிடையே, தி.மு.க. மாவட்ட செயலாளர் ஒருவர், துரை.வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று கூறினார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த துரை.வைகோ, ""அண்ணாவும் தி.மு.க., கலைஞரும் தி.மு.க., எங்க அப்பா வைகோவும் தி.மு.க. தி.மு.க.வை நான் மதிக்கிறேன். ஆனால் செத்தாலும் எங்களுடைய தனி சின்னத்தில்தான் போட்டியிடுவேன்'' என்றார். இதைக் கேட்டு அமைச்சர்களுக்கு ஒருபக்கம் கோபமும், வருத்தமும் ஏற்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெரிய அளவில் தி.மு.க. அமைச்சர்களி-ருந்து தொண்டர்கள் வரை வாக்குச் சேகரிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

இதற்கிடையே பம்பரம் சின்னம் கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டதால் மாற்றுச்சின்னமாக தீப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டது. அதன்பின் வைகோ முதல்வரை சந்தித்த பிறகு, அமைச்சர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் துரை.வைகோவை கட்டாயம் வெற்றிப்பெறச் செய்யவேண்டுமென முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, தி.மு.க.வினர் ம.தி.மு.க.வினருடன் இணைந்து களத்திலிறங்கி வாக்குகளை சேகரித்தனர். அதன் காரணமாக, திருச்சி தொகுதியில், தனக்கடுத்து வந்த அ.தி.மு.க. வேட்பாளரைவிட 3,13,094 ஓட்டுக்கள் அதிகம்பெற்று துரை.வைகோ அபார வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி குறித்து துரை.வைகோ கூறுகையில், ""எனது வெற்றி ஏழை, எளியோருக்கான திட்டங்களின் மூலம் நல்லாட்சி செய்துவரும் முதல்வருக்கு கிடைத்த வெற்றி. அதேபோல், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோரின் உழைப்புக்கும், இண்டியா கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தொண்டர்களின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி. நான் தந்தையிடம் போனில் பேசியபோது, "நீங்கள் கேட்ட வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளேன்'’ எனக் கூறினேன்'' என்றபோது துரை.வைகோ லேசாக கண்கலங்கினார். பம்பரம் சின்னம் கிடைக்காத நிலையில், கடைசிக்கட்டத்தில் கிடைத்த தீப்பெட்டியிலிருந்து மிகப்பிரமாண்ட வெற்றியை... வெளிச்சத்தைப் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறது.

இதையும் படியுங்கள்
Subscribe