Skip to main content

சிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி! -ஆக்ஷன் ரிப்போர்ட்!

""ஹலோ நக்கீரனா...…சென்னை -அசோக்நகர் பகுதிகளில் தினேஷ்ங்கிறவர் ஆன்டி கரப்ஷன் ஆபீஸர்ன்னு சொல்லிக்கிட்டு ஐ.டி.கார்டோட திரியுறதோடு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தெரியும்னு போலீஸ் ஸ்டேஷன்களில் வந்து கட்டப்பஞ்சாயத்து பண்றாரு. ஆனா, அவரோட செயல்பாடுகளைப் பார்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரியுற மாதிரி தெரியல. ஆனா, ஐ.பி.எஸ். அதிகாரிகளே அவரோடு நெருக்கமா பழகுறதால விசாரிக்கமுடியல. நக்கீரன்தான் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கவைக்கணும்''’காவல்துறை நண்பர்களிடமிருந்தே நமக்கு தகவல் வர நக்கீரன் டெக்னிக்குடன் விசாரணையில் இறங்கினோம்...…

அந்த நபரின் செல்போன் நம்பருக்கு போன் செய்தோம்: ""வணக்கம்.… தினேஷ் சார்தானே பேசுறீங்க? சென்னை -வெஸ்ட் மாம்பலம் தாசில்தார் ஆபீஸ்ல நிறைய லஞ்சம் வாங்குறாங்க. எப்படி சார் உங்ககிட்ட கம்ப்ளைண்ட் மாதிரி குடுத்துடலாமா?

dup-officerதினேஷ்: வெரிகுட்.. வெரி குட்… எவிடென்ஸ் ஏதாவது இருக்கா?

நாம்: எவிடென்ஸ் இல்லை சார். என்ன எவிடென்ஸ் வேணும்னாலும் எடுத்துடலாம்… (கொக்கி போட்டோம்)

தினேஷ்: சரி… நீங்க ஒண்ணு பண்ணுங்க.… தி.நகர் டி.சி. அரவிந்துன்னு இருக்கார். அவருக்கு, நான் ரெஃபர் பண்ணிடுறேன். நேரா போயி அவரை பார்த்துடுங்க. அவர்கிட்ட நான் இன்ஃபார்ம் பண்ணிடுறேன் (உயரதிகாரியின் தொனியில்).

நாம்: நீங்க எங்க இருப்பீங்க சார்? (மிகவும் பவ்யமாக)

தினேஷ்: எங்களுக்கு (சிரித்தபடி) திடீர்ன்னு மெசேஜ் வந்துடும் கிளம்பிடுவோம். நான், அவுட்டர்ல இருக்கேன் (ரொம்ம்ம்ப பயங்கரமான லஞ்ச ஒழிப்பு அதிகாரியா இருப்பாரு போல).

நாம்: சார்…நீங்க ஆன்டி கரப்ஷன்ல என்னவா இருக்கீங்க? ("பாஸ் என்கிற பாஸ்கர' பட ஸ்டைலில் மீண்டும் கேட்க)

தினேஷ்: கரப்ஷன் அண்ட் இன்விகேஷன் டிபார்ட்மெண்ட்ல இருக்கேன். (இன்வெஸ்டிகேஷன் என்றுகூட சொல்லத் தெரியவில்லை,… பாவம்)

நாம்: நீங்க என்னவா இருக்கீங்க? (மீண்டும் துருவினோம்)
dup-officer
தினேஷ்:
ஆக்ஷுவலி… போலீஸை கண்காணிக்கிறதுதான் எங்க வேலை. ஐ.என்.ஏ. மாதிரி ஏஜெண்ட். ஏ.சி., டி.சி.க்களுக்கு மட்டும்தான் தெரியும்... நாங்க யாருன்னு. ("துப்பாக்கி' பட விஜய் மாதிரி பெரிய ஆஃபிசரா இருப்பாரு போல) ஸ்டேஷனுக்கெல்லாம் போகமாட்டோம். டி.சி., ஜே.சி.க்கு ரெஃபர் மட்டும் பண்ணுவோம். கமிஷனருக்கு ரெஃபர் பண்ணுவோம். லஞ்சம் வாங்குறது ஏதாவது ரெக்கார்டு பண்ண முடியுமான்னு பாருங்க. (ஆல்ரெடி ரெக்கார்டு பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம். ஹி…ஹி).

நாம்: சார்… லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக போன் நம்பருக்கு ஃபோன் பண்ணினா ரெஸ்பான்ஸே இல்ல. உங்கள மாதிரி அந்த டிபார்ட்மெண்டுல ஒரு நல்ல அதிகாரி’ எனக்கு நட்பா கிடைச்சது ரொம்ப சந்தோஷம் சார்.

தினேஷ்: சூப்பர் சூப்பர் நன்றி.… நான் பார்த்துக்கிறேன். போன் கட் ஆனது.

அதன்பிறகு, அவரிடம் பேசியபோது லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனுக்கு ரெஃபர் பண்ணுவதாகவும் அவரது நம்பரையும் அனுப்புவதாகவும் சொன்னார். அதற்குப்பிறகு மீண்டும் தொடர்புகொண்டபோது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் கன்ட்ரோலில் வரும் பிரைவேட் ஏஜெண்ட்’’என்றார். "போலீஸை கண்காணிச்சு ஹயர் அஃபிஷியல்கிட்ட சொல்லணும். அதுதான், எங்கள் வேலை. சிட்டியில ஒவ்வொரு ஸோனுக்கு ஒரு ஹெட் இருப்போம். நான், சவுத் ஸோன் ஹெட். நேரடியா கமிஷனருக்கு மட்டும்தான் தகவல் கொடுப்போம். நார்த்துல மணிகண்டன்னு ஒருத்தர் இருக்காரு. நாலு ஸோனுக்கு நாலு பேரு இருக்கோம். சுருக்கமா சொல்லணும்னா போலீஸை கண்காணிக்கிறதுதான் எங்க வேலை' (ஓ… உங்கள மாதிரி ஏகப்பட்ட பேரு இருக்காங்களா?) என்று தொடர்ந்து ரீல் ஓட்டிக்கொண்டிருந்தவரிடம்...…

"நான், நக்கீரன் நிருபர் பேசுறேன். நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?'’என்று நாம் கேட்டபோது, எதிர்முனையில் பேரமைதி. மீண்டும் கேட்டபோது, “போனை துண்டித்துவிட்டு ‘அகில இந்திய குற்றம் மற்றும் லஞ்ச ஒழிப்பு கமிட்டி’ என்று டைப் செய்து மெசேஜ் அனுப்பினார். ஒருகட்டத்தில், ’"இது ஒரு பிரைவேட் அமைப்புதான். எங்க செகரெட்டரி மரினா கோவையில் உள்ளார்'’’என்றவரிடம் “"சங்கத்தின் செகரெட்டரி நம்பர் அல்லது அலுவலக தொலைபேசி நம்பர் கொடுங்க. உங்க சங்கம் எங்கு பதிவு செய்யப்பட்டது?'’என்று நாம் கேட்டோம். வாட்ஸ் அப்பிலும் விளக்கம் கேட்டபோது பதிலளிக்கவில்லை.

இதுகுறித்து, தி.நகர் டி.சி. அரவிந்த் ஐ.பி.எஸ்.-ன் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, “""மக்கள் பிரச்சனைகள் குறித்து ஏதாவது இன்ஃபர்மேஷன் கொடுப்பார்ன்னுதான் அவர்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். ஆனா, அவர் அதிகாரி மாதிரி பேசிக்கிட்டிருக்காரா? இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்''’என்றார் அவர். நாம் மேலும் விசாரித்தபோது ஆன்டி கரப்ஷன் ஆபீஸர் என்று சொல்லிக்கொண்டு திரியும் தினேஷ் ஒரு ஆக்டிங் டிரைவர் (இதுலயும் ஆக்டிங்தானா அவ்வ்) என்பது தெரியவந்தது.

பல வருடங்களாக ஐ.பி.எஸ். அதிகாரி என்று சொல்லிக்கொண்டு அதிகாரிகளையும் பெண்களையும் ஏமாற்றிக்கொண்டிருந்த பால மணிகண்டனை அதிரடியாக கைது செய்தது கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் சாரங்கன், அடையாறு டி.சி. சஷாங்சாய் தலைமையிலான சென்னை காவல்துறை. ஆனால், இதுபோன்ற போலிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் விஜிலென்ஸ், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் என ஏமாற்றுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

-மனோசௌந்தர்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்