Advertisment

டம்மி மேயர்! வாரிச்சுருட்டும் எம்.எல்.ஏ.! அறிவாலயத்தில் பஞ்சாயத்து!

ss

வேலூர் மாநகர மேயர் சுஜாதாவுக்கும் ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளிக்கு காரணம் மாநகர செயலாளரும், வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கார்த்தி தான். "மேயரை சுதந்திரமாக செயல்படவிடவில்லை, கோப்பில் கையெழுத்து போடக்கூட எம்.எல்.ஏ. சொல்லவேண்டியிருக்கிறது. கவுன்சிலர்கள் வார்டு பிரச்சனைகளைக் கொண்டுவந்தால் எம்.எல்.ஏ.விடம் போங்கன்னு அனுப்புகிறார். மாநகராட்சிக்கு வரும் கமிஷனர்கள் எம்.எல்.ஏ. பேச்சை கேட்கவில்லையென்றால் உடனே மாற்றப்படுகிறார்கள்.

Advertisment

vellore

மேயர் பேச்சைத்தான் கமிஷனர் கேட்பார், எம்.எல்.ஏ. பேச்சை ஓரளவுக்கு மதிப்பார்கள், இங்கே அப்படியே தலைகீழ். கடந்த 3.5 ஆண்டுகளில் ரத்தினசாமி, ஜானகி உட்பட 3 கமிஷனர்கள் மாற்றப்பட்டு தற்போது லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். தன் பேச்சை கேட்காத கமிஷனர்களை எம்.எல்.ஏ. மாற்றிக்கொண்டே இருக்கிறார். விட்டா போதும்னு அதிகாரிகள் ஓடுறாங்க, அதிகாரிகளைப்போல் நாங்கள் எங்கே ஓடுவது?'' என புலம்புகிறார்கள் மாமன்ற கவுன்சிலர்கள்.

மூத்த கவுன்சிலர் இருவர் நம்ம

மூத்த கவுன்சிலர் இருவர் நம்மிடம், "மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலத் தலைவர்களும் மேயரைப் போலவே டம்மியாகவே இருக்கிறார்கள். கடந்த 3.5 ஆண்டுகளில் இதுவரை 3 முறை தான் மண்டலக்குழு கூட்டம் நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, நிலைக்குழு, கல்விக்குழு, வரி விதிப்புக் குழுக் கூட்டம் என எந்த கூட்டங்களும் நடத்துவதில்லை. ஒவ்வொரு மாதமும் சாதாரண மாமன்றக் கூட்டம் நடத்தவேண்டும். கவுன்சிலர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்பதற்காகவே கூட்டங்களை நடத்துவதில்லை. எங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்கள், தண்ணீர் வரவில்லை, குப்பை அள்ளவில்லை, கழிவுநீர்க் கால்வாய் சுத்தம் செய்யவில்லை, லைட் எரியவில்லை எனக் குறை சொல்கிறார்கள். இதனை மேயரிடம் மன்றக் கூட்டத்தில்தான் சொல்வோம். ஆனால் மன்றக் கூட்டத்தில் பேசவே கூடாது என்கிறார்கள் மேயரும், எம்.எல்.ஏ.வும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் மாமன்றக் கூட்டம் நடத்தப் படுகிறது. கடந்த முறை 90 நாட்களில் நடக்க வேண்டிய கூட்டம், 93வது நாளில் தான் நடந்தது, இதனால் சட்டச்சிக்கல் வந்ததால் மேயர் மருத்துவ சிகிச்சையில் இருந்ததுபோல் சான்றிதழ் வாங்கித்தந்து சட்டரீதியாக அனுமதி வாங்கினார்கள்.

Advertisment

எங்கள் மண்டலத்துக்கு நிதி ஒதுக்குவ தில்லை, மண்டலக்குழு தலைவரால் ஒரு தெருவிளக்குகூட மாற்ற அதிகாரம் இல்லாததால் அப்பதவி எதற்கென்று புஷ்பலதா குற்றஞ்சாட்டி னார். மேயர் பதவி கிடைக்காத பொறாமைன் னாங்க. வார்டுகளில் பணிகளே நடப்பதில்லையென துணைமேயர் சுனில்குமார் குற்றஞ்சாட்டினால், அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளர்னு அவரை சொன்னாங்க. இப்படி எந்த கவுன்சிலர் கோரிக்கை வைத்தாலும் எதையாவது சொல்லி திசை திருப்புறாங்க.

cc

மாநகராட்சியில் நடக்கும் கான்ட்ராக்ட் பணிகளுக்கு 15 சதவீத கமிஷனை ஒப்பந்த தாரர்களிடமிருந்து வாங்கும் மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ., இது வரை யாருக்கும் பிரித்துத் தரவில்லை. காட்பாடி தொகுதிக்குள் வரும் 15 வார்டுகளுக்கான பணிகளை பிரிப்பது, கமிஷன் பெறுவதை எம்.பி. கதிர்ஆனந்த், பகுதிச்செயலாளர் வன்னிராஜா, துணைமேயர் சுனில்குமாரே கவனித்துக்கொள்கிறார்கள். கவுன்சிலர் களுக்கான பங்கை தருவதில்லை. அணைக்கட்டு தொகுதிக்குள் வரும் 6 மாநகர வார்டு பிரச்சனையை மட்டும் மா.செ. நந்தகுமார் கவனித்துக்கொள் கிறார். மீதியுள்ள 39 வார்டுகள் வேலூர் எம்.எல்.ஏ. தொகுதிக்குள் வருகிறது. எம்.எல்.ஏ. கார்த்தியும் எங்களுக்கான பங்கை, பணிகளை தருவதில்லை. அவர் மா.செ.வாகவும் இருப்பதால் எங்களால் அவரை எதிர்த்துப்பேச முடியவில்லை.

மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் எனச் சொல்லிக்கொண்டு கார்த்தி வந்து உட்கார்ந்து கொள்வதால் அங்கேயும் எங்களால் பேசமுடிய வில்லை. கவுன்சிலர்கள் யாராவது மேயரை கேள்வி கேட்டால் எம்.எல்.ஏ. அவர்களை ஒதுக்குகிறார், அடுத்த முறை சீட் கிடையாதென்றும் மிரட்டுகிறார்கள்.

கடந்த மாதம் 9 கவுன்சிலர்கள் பொதுச் செயலாளர் துரைமுருகனை சென்னையில் சந் தித்து குமுறினோம். ஊருக்கு வரும் போது பேசிக்க லாம்னு அனுப்பி வைத்தார். இதற்கிடையே மாநகராட்சி மோதல் குறித்த செய்திகள் வெளியானதால் தேர்தல் மண்டலப் பொறுப்பாளர் அமைச் சர் எ.வ.வேலு, அறிவாலயத்துக்கு வாங்களென்று கடந்த 10ஆம் தேதி மா.செ. நந்தகுமார், எம்.பி. கதிர்ஆனந்த், மாநகரச்செயலாளர் கார்த்தி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மண்டலத் தலைவர் புஷ்பலதாவை வரவைத்து அமைப்புச்செயலாளர் அறையில் வைத்து விசாரணை நடத்தினார். அங்கே மா.செ. - எம்.பி. - மாநகரச்செயலாளர் இடையே காரசாரமாக சண்டை நடந்தது. தன்னை மண்டலக் கூட்டம் நடத்த அனுமதிப்ப தில்லை, மண்டலத்துக்கு தேவையான நிதி ஒதுக்க வில்லை எனக் குற்றம்சாட்டினார் புஷ்பலதா.

இப்படி நிர்வாகம் நடத்தினால் எப்படி யென்று மேயரிடம் அமைச்சர் கேள்வி கேட்டதும் மேயர் கார்த்தியை பார்த்துள்ளார். இதுவரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கான பணிகள் நடந்துள்ளன. அதற்காக 15 சதவீத கமிஷன் எடுத்துள்ளீர்கள். 7.5 சதவீதம் 'எம்' கமிஷனாக போய்விட்டது. மீதியுள்ள 7.5 சதவீத கமிஷனில் மா.செ., மாநகரச்செயலாளர், எம்.எல்.ஏ. கவுன்சிலர்களுக்கு பிரித்துத்தர வேண்டும் என நிழல் மேயராக வலம்வரும் எம்.எல்.ஏ. கார்த்தியிடம் சொல்லப்பட்டது. தந்துவிடுகிறேன் எனச்சொல்லிவிட்டு வந்தவர், இப்போதுவரை தரவில்லை. முதலமைச்சர் சொன்னாலாவது தருவாரான்னு தெரியல'' எனப் புலம்புகிறார்கள் கவுன்சிலர்கள்.

டம்மி மேயரால் கவுன்சிலர்கள் பெரும் கடுப்பிலிருக்கிறார்கள்.

nkn250625
இதையும் படியுங்கள்
Subscribe