கோவில்பட்டியில் பென்னிக்ஸ் உயிரிழந்ததாக முதலில் தகவல் வந்தவுடன் ஜூன் 22ஆம் தேதி இரவு சாத்தான்குளத்தில் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய வந்தனர். அந்த நிகழ்வு, மொபைல் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதாபனிடம், ""எட்டு டூ பத்தரை சிசிடிவி புட்டேஜ் எங்க? அடிச்சி கொன்னீங்கல்ல. அந்த புட்டேஜ்ஜ தர சொல்லுங்க சார். எங்களுக்கு வேணும்'' என்றனர். அதற்கு பிரதாபன், ""சொல்லுறத ஒரு நிமிஷம் கேளுங்க. நான் மூணு நாளா ஊர்ல இல்ல. வேற விஷயமா போய்ட்டேன். ஏதோ ஆயிப்போச்சு'' என்றார். அதற்கு, ""ஆயிப்போச்சின்னா என்ன ஆயிப்போச்சி சார். போன உயிர் வந்துருமா?'' என்கின்றனர். ""நீங்க சொல்றீங்கல்ல போலீஸ் ஸ்டேசன்ல கொன்னுட்டாங்கன்னு சொல்றீங்கல்ல'' என்கிறார் பிரதாபன். அதற்கு, ""அதான் உண்மை, அடிச்சே கொன்னுட்டீங்க, அடிச்சே கொன்னுட்டீங்க'' என்கின்றனர் கூடியிருந்தோர்.
தொடர்ந்து பேசிய பிரதாபன், ""பென்னிக்ஸ் உயிரிழந்தாங்கன்னு கேள்விப்பட்டேன். விசாரணை போய்க்கிட்டு இருக்கு. எஸ்.பி. எல்லோருக்கிட்டேயும் பேசிட்டேன். தவறு இருந்தா நடவடிக்கை உண்டு'' என்றார்.
""என்ன மாதிரி நடவடிக்கை சார். போன உயிர் வந்துருமா? எவ்வளவு ரத்தம் தெரியுமா? நாலு லுங்கி மாத்திருக்கோம். ஒரு ஊசி போடல. அந்த பையன் மேல ஒரு கம்பிளைண்ட் இருக்கான்னு பாருங்க'' என்றனர்.
அதற்கு பிரதாபன், ""ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறாங்க, அங்கு யாரும் அடிக்கலன்னு சொல்றான்'' என்றார். ""அடிக்கலன்னு சொல்லுன்னு மிரட்டி கூட்டிட்டு போயிருக்காங்க'' என்கின்றனர்.
"நியாயப்படுத்தல விசாரணைன்னு ஒன்னு இருக்குல்ல'' என்கிறார் பிரதாபன். ""நியாயப்படுத்த முடியாது. ஸ்டேசன பூட்லாமா சார். ஸ்டேசன பூட்டிட்டாங்க சார். எத்தனை பேர் அடிச்சாங்க. 29 வயது பையன் 80 கிலோ இருப்பான். அவனே இறந்துட்டான். அவுங்க அப்பா 65 வயது. அவருக்கும் நாலு லுங்கி மாத்திட்டாங்க. அவரு இருப்பாரா உயிரோட?'' எனக் கோபமாகக் கேட்கின்றனர்.
""சாத்தான்குளம் ஸ்டேசனுல யாரும் மரியாதையா பேசுல சார், வாடா, போடா, மாஸ்க் எங்க நாயேன்னுத்தான் பேசுறாங்க.'' அதற்கு பிரதாபன், உங்க கோரிக்கைகள் மேலிடத்திற்கு தெரிவிப்போம் என்று சமாதானப்படுத்தி அங்கிருந்து நழுவுகிறார்.
-வேல்