பதைபதைக்கச் செய்யும் கொடூரமான ஒரு வீடியோ, இந்தியா முழுக்க வைரலாகி, பலத்த விமர்சனத்தை ஏற்படுத்திவருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 சிறுவர்கள், ஓடும் ரயிலில் மது அருந்தியபடி ரீல்ஸ், பட்டாக்கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் எனப் போட்டதோடு, வட மாநில இளைஞரை கத்தியுடன் மிரட்டுவதைப்போல ரீல்ஸ் பதிவிட்டு அட்டகாசம் செய்தது வைரலானது. அதுமட்டுமல்லாது, அதே வட மாநில இளைஞரை பாழடைந்த கட்டடத்தில் வைத்து, அந்த நான்கு சிறுவர்களும் பட்டாக்கத்தியை வைத்து சரமாரியாக வெட்டுவதும், அதை ரீல்ஸாகப் பதிவிட்டதும் பார்ப்போருக்கு பகீர் கிளப்பி நடுங்கவைத்தது.
இந்நிலையில், டிசம்பர் 27ஆம் தேதி, சனிக்கிழமை மாலை, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி போலீசாருக்கு திருத்தணி ரயில்வே குடியிருப்புப் பகுதியிலிருந்து போன்கால் வந்தது. அதில் பேசியவர், வட மாநில இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். உடனே விரைந்து சென்ற போலீசார், படுகாயத் துடன் உயிருக்கு போராடிய அந்த நபரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்கு பின், அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
வெட்டுக்காயத்துடன் இருந்த அந்த நபர் பெயர் சூரஜ். வயது 20. பிறந்தது ஒடிசாவாக இருந் தாலும், அந்த நபர் மகாராஷ்டிராவில் நாசிக்கில் வேலை செய்து வந்ததாகவும், சில குற்றச் சம்பவத் தில் ஈடுபட்டதால் அந்த மாநில போலீசார் அவனை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும், இல்லையென்றால் அவன்மீது வழக்கு பதிவோம் என்று கூறியதால், அவன் ரயில் மூலம் சென்னை வந்துள்ளான். சூரஜின் அண்ணன் பெங்களூருவில் வேலை செய்வதால் அங்கு செல்ல இவன் ரயிலில் பயணம் செய்துள்ளான். தவறுதலாக, சென்னை சென்ட்ரலிலிருந்து பெங்களூர் ரயிலுக்கு பதிலாக அரக்கோணம் ரயிலில் ஏறி பயணம் செய்தபோது, அதே ரயிலில் அரக்கோணம் மற்றும் திருத்தணியை சேர்ந்த 4 சிறுவர்கள் ஏறியதோடு, ரயில் ஓடும் போதே மது அருந்திக்கொண்டு ரீல்ஸ் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுக் கொண்டிருந் தனர். சூரஜை பார்த்தவுடன் அந்த நான்கு சிறு வர்களும் அவர்கள் வைத்திருந்த இரண்டு பட்டாக் கத்திகளை வைத்து அவனை வெட்டுவது போல இன்ஸ்டாவில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/tiruthani1-2026-01-02-12-54-24.jpg)
இதனால் சற்று முறைத்துப் பார்த்ததால் அவர்கள் சூரஜை லேசாக தாக்கியுள்ளனர். பயத்திலிருந்த சூரஜ், அந்த ரயில் திருத்தணி இரண் டாம் பிளாட்பாரத்தில் நின்ற தருணத்தில் இறங்கி, அவர்களிடமிருந்து தப்பி விடலாமென்று பிளாட் பாரத்தில் நடந்து சென்றுள்ளார். விடாது துரத்திய அந்த நால்வரும் திருத்தணி ரயில் நிலையமருகே உள்ள ரயில்வே குடியிருப்பிலிருந்த பாழடைந்த கட்டடத்திற்கு விரட்டிச்சென்று, சூரஜை பட் டாக்கத்தியை வைத்து போதையில் நான்கு பேரும் மாறிமாறி சரமாரியாக வெட்டுவதும், அதை வீடியோவாக பதிவு செய்வதுமாக இருந்தனர். வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய சூரஜ் மீது கொஞ்சமும் இரக்கமே காட்டவில்லை. அந்த நான்கு சிறுவர்கள் முகத்திலும் கொடூரமான வெறி வெளிப்படுவதை வீடியோவில் பார்த்தாலே தெரியும்.
அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைத் தளத்திலும் தைரியமாகப் பதிவிட்டனர். இந்நிலை யில் சூரஜ் மயக்கமடைய, உடனே சிறுவர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், சம்பந்தப் பட்ட வீடியோவை வைத்து அந்த நான்கு சிறுவர் களையும் அடையாளங்கண்டு, கைது செய்து விசாரித்தனர். அந்த நான்கு பேரும் 18 வயதிற்கு கீழுள்ளதால் திருத்தணி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நான்கு சிறார்களில் ஒருவன் பள்ளிக்கூடம் படிப்பதால் பெற்றோரை அழைத்த நீதிபதி, சொந்த ஜாமீனில் அவனை மட்டும் விடுவித்தார். மற்ற மூன்று பேரும் செங்கல் பட்டு சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீஸார், பொதுமக்களை அச்சுறுத் தும் வகையில் ஈடுபட்டதாக அந்த நால்வர் மீது ஒரு வழக்கும், திருத்தணி போலீ சார், 4 சிறார்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்துள்ளனர். இந்த நான்கு சிறுவர்கள் மீது ஏற்கெனவே திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு இருப்பதாகவும், சம்பவத்தன்று கஞ்சா மற்றும் மது அருந்தியிருந்த இந்த நான்கு பேரின் எதிர் கோஷ்டி, இவர்களை தாக்க வந்ததாகவும், இவர்கள் அவர்களைத் தாக்க, கத்தி எடுத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/tiruthani2-2026-01-02-12-54-38.jpg)
இது தொடர்பாக திருத்தணியை சேர்ந்த சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு நம்மிடம், "17 வயதுள்ள இவர்களுக்கு டாஸ்மாக்கில் எப்படி மது வழங்கினார்கள்? எந்த கடையில் மது வாங்கினார் கள்? அவர்கள் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு ரவுடிகள் பயன்படுத்தும் பட்டாக்கத்தி எப்படி கிடைத்தது என்பதை விசாரித்து, அதில் சம்பந்தப்பட்டவர் களையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், சாதாரணமாகவே இந்த பகுதியில் மட்டுமல்லாமல் புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் காணப்படுகிறது. முக்கிய ஆன்மிகத்தலமான திருத்தணியில் பக்தர்கள் கூட்டம் மட்டுமின்றி, வேலைக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுமாக கூட்டம் அதிகமிருக்கக்கூடிய ரயில் நிலையத்தினருகே ரயில்வே போலீசார் யாரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவதில்லை. குறிப்பாக, இரவு நேரத்தில் எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது. இவ்வளவு பெரிய திருத்தணியில் ரயில்வே போலீஸ் நிலையம் இல்லை என்பது தான் கேலிக்கூத்து.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை, இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு, இந்த சம்பவம் நடந்த அதே இடத்தில் ஒரு பாழடைந்த கட்டடத்தின் உள்ளேயிருந்து மனித எலும்புக்கூட்டை கண்டுபிடித்தது குறிப்பிடத் தக்கது. இரவு நேரங்களில் கஞ்சா, போதை மாத்திரைகள், மது மற்றும் விபச்சாரம் நடக்கும் இடமாக இந்த இடம் இருக்கின்றது. கஞ்சா வியாபாரம் பற்றியும், திருத்தணியில் அதிகமாக கஞ்சா நடமாட்டம் உள்ளதாகவும் நான் எழுத்து ரீதியாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளேன். இதுவரை அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், என்னை மிரட்டும்விதமாகவே அப்போதிருந்த காவல் ஆய்வாளர் எனக்கு அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தணிக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா அதிக அளவு வருகின்றது. குறிப் பாக, தமிழக -ஆந்திர எல்லையான பள்ளிப் பட்டு, ஆர்.கே. பேட்டை, நகரி, நல்லாடூர், கனகம்மா சத்திரம் போன்ற எல்லைகள் வழியாக கஞ்சா கடத்தப்படு கிறது. உளவுத்துறை போலீசாரின் கையாலாகாத்தனமே இதற்கு காரணமென்று கூறலாம். செக்போஸ்ட்டில் சோதனை செய்யாமல் அவர்கள் கொடுக்கும் நூறு, ஐம்பது பணத்தை பெற்றுக்கொண்டு எந்த சோதனையும் நடத்தாமல் வாகனத்தை அனுமதிப்பதே முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இதை வடக்கு மண்டல ஐ.ஜி., தனி டீம் அமைத்து விசாரித்தாலே விவரம் வெளியே வரும்'' என்று முடித்துக்கொண்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், "சமீபகாலமாக தீவிர போதைப்பொருள் ஒழிப்பு வேட்டையில் ஆயிரம் கிலோ அளவிற்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. மேலும் போதை மாத்திரை, உயர்ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார். மேலும், "இந்த சம்பவத்தில் அவர்களை சூரஜ் முறைத்ததால் இதுபோன்று நடந்துகொண்டதாக விசாரணையில் தெரிவித்தனர். வடநாட்டு இளைஞர் என்ற நோக்கத்துடன் அவர்கள் தாக்கவில்லை'' என்று கூறினார்.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்துகொண்டி ருக்கும் இந்த வேளையில், திருத்தணி சம்பவத்தை நாடே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில், மேலும் ஒரு சம்பவம் திருத்தணி ரயில் நிலையத்தில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. கடந்த 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை, திருத்தணி நேரு நகரை சேர்ந்த பழைய துணி வியாபாரம் செய்யும் வியாபாரி ஜமால்பாய் என்பவர் அடையாளம் தெரியாத போதை நபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவது அப்பகுதியில் பாதுகாப்பில் லாத சூழ்நிலை நிலவுவதை மேலும் உறுதிப் படுத்துகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/tiruthani-2026-01-02-12-54-14.jpg)