Advertisment

தமிழகத்தில்தான் போதைப் பொருள் கடத்தலா? - புள்ளி விவரங்கள் சொல்லும் சேதி!

dd

த்து மாவு என்ற பெயரில், மெத்தா பெட்டமைன் போதைப் பொருளைத் தயாரிக்கப் பயன் படும் சூடோ பெட்ரின் எனப் படும் முக்கிய ரசாயனப் பொருளை நியூசிலாந்து, ஆஸ்திரே-யா நாடுகளுக்கு கடத்திய விவகாரத் தில், சென்னை தி.மு.க.வின் மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராகச் செயல்பட்ட ஜாஃபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தேடிவருகின்றனர்.

Advertisment

தங்கள் நாடுகளுக்கு, சத்துமாவு என்ற போர்வையில் இந்தியாவி-ருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இந்திய விமான நிலையங்களைக் கண்காணிப்புக்கு உட்படுத்தி வந்தனர். அதில் மேற்கு டெல்-யின் கைலாஷ் பார்க் பகுதியி-ருந்து இந்த சத்து மாவுக் கும்பல் செயல்பட்டுவந்தது தெரியவந்தது. அங்கே நடத்தப்பட்ட சோதனையில் சர்வதேச மதிப்பில் ரூ.2000 கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருட்களைக் கைப்பற்றினர்.

drugs

இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி டெல்- போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி சென் னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்தனர். அவர்கள் கொடுத்த தகவ-ல் ஜாஃபர் சாதிக், இந்தக் கும்ப-ன் தலை வனாகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தநிலையில், டெல்-யிலுள்ள போதைப் பொருள் தடுப்பு அலு வலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

Advertisment

ஜாஃபர் சாதிக் தலைமறைவான நிலையில், சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் தேவையான ஆவணங் களைக் கைப்பற்றியதுடன், அவரது வீட்டுக்கும் சீல் வைத்தனர். விசாரணைக்கு ஜாஃபர் ஆஜராகாத நிலையில், அவர் இந்தியாவை விட்டு தப்பிச்செல்ல முடியாதபடிக்கு அவருக்கு

த்து மாவு என்ற பெயரில், மெத்தா பெட்டமைன் போதைப் பொருளைத் தயாரிக்கப் பயன் படும் சூடோ பெட்ரின் எனப் படும் முக்கிய ரசாயனப் பொருளை நியூசிலாந்து, ஆஸ்திரே-யா நாடுகளுக்கு கடத்திய விவகாரத் தில், சென்னை தி.மு.க.வின் மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராகச் செயல்பட்ட ஜாஃபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தேடிவருகின்றனர்.

Advertisment

தங்கள் நாடுகளுக்கு, சத்துமாவு என்ற போர்வையில் இந்தியாவி-ருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இந்திய விமான நிலையங்களைக் கண்காணிப்புக்கு உட்படுத்தி வந்தனர். அதில் மேற்கு டெல்-யின் கைலாஷ் பார்க் பகுதியி-ருந்து இந்த சத்து மாவுக் கும்பல் செயல்பட்டுவந்தது தெரியவந்தது. அங்கே நடத்தப்பட்ட சோதனையில் சர்வதேச மதிப்பில் ரூ.2000 கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருட்களைக் கைப்பற்றினர்.

drugs

இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி டெல்- போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி சென் னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்தனர். அவர்கள் கொடுத்த தகவ-ல் ஜாஃபர் சாதிக், இந்தக் கும்ப-ன் தலை வனாகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தநிலையில், டெல்-யிலுள்ள போதைப் பொருள் தடுப்பு அலு வலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

Advertisment

ஜாஃபர் சாதிக் தலைமறைவான நிலையில், சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் தேவையான ஆவணங் களைக் கைப்பற்றியதுடன், அவரது வீட்டுக்கும் சீல் வைத்தனர். விசாரணைக்கு ஜாஃபர் ஆஜராகாத நிலையில், அவர் இந்தியாவை விட்டு தப்பிச்செல்ல முடியாதபடிக்கு அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஜாஃபரின் சொத்துக்களை சட்டரீதியாக முடக்குவதற்கான ஏற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்த -ல் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்த உடனே, அவரை கட்சியி-ருந்தே நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டது தி.மு.க. தலைமை. ஆனாலும் மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரமென்ப தால், இந்த விவகாரத்தை தி.மு.க.வை விமர்சனம் செய்ய எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துக்கொண்டு, இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் போதைப் பொருள் விவகாரத்தில் சீரழிவது போன்றும், தி.மு.க.வினர் போதைப் பொருள் கடத்த-ல் ஈடுபடு வது போன்றும் பிரச்சாரம் செய்துவருவதாக தி.மு.க. வினர் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

உலகிலேயே போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைக் கவரும் இரு நாடுகள் இந்தியாவும், சீனாவும். காரணம், இரு நாடுகளின் பிரம்மாண்ட மக்கள்தொகை. இந்த நாடுகளுக்குள் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் அவர்களுக்கு வருமானம் கொட்டும். ஆனால் இந்தியாவில் நிலவும் ஜனநாயக ஆட்சி முறை காரணமாகவும், போதைப் பொருள்களுக்கு எதிரான கெடுபிடி காரணமாகவும் அரசின் கண்காணிப்புக் கெடுபிடிகளைத் தாண்டியே அவர்கள் போதைப் பொருளைக் கடத்தமுடிகிறது.

drugs

ஒரு பழமொழி உண்டு, கள்ளன் பெரிதா?… காப்பான் பெரிதா?… காவல் காப்பவனுக்கு அதிகாரம் அதிகமென்றாலும், கள்ளனுக்கு அது ஜீவாதாரப் பிரச்சனை என்பதால் காவல்துறையை மீறி ஏதா வது புதிய வழிகளில் போதைப் பொருள் கடத்தல் இந்தியாவுக்குள் நடந்துகொண்டேதான் இருக் கிறது. முன்பு அது குறைவாக இருந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளாக அதன் விஸ்தீரணம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் போதைப்பொருள் தொடர்பான விஷயங்களுக்கு பொறுப் பான முதன்மையான நிறுவனம் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (சஈஇ). இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதாகும். சஈஇ உடன், வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம் (உதஒ), சுங்க மற்றும் பொது கலால் அதிகாரிகள், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (ஈஇச), மாநில காவல்துறை பிரிவுகள், மாநில கலால் துறைகள் உள்ளிட்ட பல முக்கிய ஏஜென்சிகள் போதைப் பொருள் கடத்தல் தடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் போதைப்பொருள் பறிமுதல் செய்வதில் மாநில காவல்துறை பிரிவுகளே முதன்மைப் பங்கை வகிக்கின்றன.

இந்தியாவில் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான தகவல்கள், சமீபகாலமாக குறிப் பிடத்தக்க வகையில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துவருவதை வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் சுமார் 60% ஓபியம், ஹெராயின், கஞ்சா, ஹாஷிஷ், கோகோயின், மார்பின், மெத்தகுலோன், ஏடிஎஸ் பொருட்கள்தான். 1992 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1.2 லட்சம் கிலோ போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. 2016 முதல் 2022 வரையிலான வருடங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் போக்கு தெரிகிறது. இந்தக் காலகட்டங்களில் சராசரியாக 5.1 லட்சம் கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள்படி 2018-ஆம் ஆண்டு மிக அதிக அளவாக உத்தரப்பிரதேசத்தில் 2,21,760.042 கிலோ போதைப் பொருள் பிடிபட்டது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 1,11,430.2 கிலோ போதைப் பொருள் பிடிபட்டது. அடுத்தடுத்த இடங்களில் ஒடிஸா, பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்கள் வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் 12,115.702 கிலோ போதைப் பொருள் பிடிபட்டது. அதற்கடுத்த இரண்டு வருடங்களிலும் முத-டத்தை உத்தரப்பிர தேசமே தக்கவைக்க, இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் தொடர்கிறது. தென்னக மாநிலங்களில் போதைப் பொருள் குறைவாகக் கடத்தப்படும் மாநிலங்களில் ஒன்றாகவே தமிழகம் நீடித்துவருகிறது.

பிரதமரின் சொந்த மாநிலமான குஜ ராத்தை எடுத்துக்கொண்டாலும், கடந்த 2021, செப்டம்பர் 16-ஆம் தேதி, பெருந்தொழிலதிபர் அதானிக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் ஒரேநேரத்தில் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

கடந்த 2022, மே மாதத்தில் அதே அதானியின் முந்த்ரா துறைமுகத்தில், ரூ.500 கோடி மதிப்புள்ள 56 கிலோ எடைகொண்ட கொக்கைன் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். அடுத்ததாக, கடந்த ஜூலை 12-ஆம் தேதி, 350 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை, அதே முந்த்ரா துறைமுகத்தில், தீவிரவாத எதிர்ப்புப் பிரிவினர் கைப்பற்றினார்கள். பிரதமருக்கு நெருக்கமான அதானியின் துறைமுகத்தில் தொடர்ச்சியாக போதைப் பொருள் பிடிபட்டது அப்போது சந்தேக அலைகளை எழுப்பியது.

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவும், இந்தியக் கடற் படையும் இணைந்து போர்பந்தர் கடற்கரையில் 3,300 கிலோகிராம் போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளன. இதன் சர்வதேச மதிப்பு 2000 கோடிக்கும் அதிகம். கைதுசெய்யப்பட்டவர்களின் படகில் 3089 கிலோ ஹஷிஷ், 25 கிலோ மார்ஃபைன், 156 கிலோ மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ல் பறிமுதல் செய்யப்பட்ட அபின் போதைப் பொருட்கள் அடிப்படையான தரவுகளின்படி அபின் கடத்த-ல் முதல் இடத்தில் ராஜஸ்தானும், இரண்டு, மூன்றாம் இடங்களில் பஞ்சாப்பும் மத்தியப்பிரதேசமும் வருகின்றன. இதன் முதல் பத்து இடங்களில் ஒரேயொரு தென்மாநிலம்கூட இல்லை. இந்தப் பட்டிய-ல் இருபதாவது இடத்தில் தமிழகம் வருகிறது.

போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பில் மத்திய அரசோடு மாநிலங்களும் கைகோர்த்தால்தான், அவற்றை முழுமையாகத் தடுக்கமுடியும். அதைத் தவிர்த்து தற்கா-கக் கட்சி அரசியல் லாபத்துக்காக எதிர்க்கட்சிகளையோ, அவர்களோடு தொடர்புடைய மாநிலங்களையோ போதைப் பொருள் கேந்திரமாக முத்திரை குத்துவது தேசிய அளவிலும் மாநில அளவி லும் தீய விளைவுகளையே ஏற்படுத்தும் என்கின்றனர் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள்.

சமீபகாலமாக அதிகரித்துவரும் போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டா-ன் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி. என்றொரு பதவி ஏற்படுத்தப்பட்டு, போதைப் பொருள் விற்பனை செய்வோர் கைதுசெய்யப்பட்டு அவர்களின் சொத்துக் களை முடக்கவும் வேகம்காட்டப்பட்டு வருகிறது.

கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழகத்தில் 952 டன் குட்கா, பான்மசாலா பிடிக்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளன. கஞ்சா பரவலையும் புழக்கத்தையும் தடுக்க கஞ்சா தடுப்பு ஆபரேஷன்கள் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு 12,294 வழக்குகள் பதியப்பட்டு, 17,250 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 26,525 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கடத்தல் மாஃபியாக்கள் மற்றும் உள்ளூர் போதைப் பொருள் கடத்தல் புள்ளிகள் பொதுமக்களுக்கு எதிராக நடத்தும் யுத்தத்தில், மத்திய -மாநில அரசுகள் ஒன்றிணைந்து வெல்லவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

nkn060324
இதையும் படியுங்கள்
Subscribe