குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி வருவாய் புலனாய்வுத் துறையின ருக்குக் கிடைத்தத் தகவலையடுத்து துறைமுகத்தி லிருந்த அனைத்து கண்டெய்னர்களையும் வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனையிட்டதில், இந்திய வரலாற்றிலேயே இதுவரை சிக்காத அளவிற்கு இரண்டு கண்டெய்னர்களில், ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் கைப் பற்றப்பட்டது. இந்த ஹெராயின் போதைப் பொருட்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து டால்கம் பவுடருடன் சேர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, ஈரான் கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் கம்பெனி இந்த கண்டெய்னர்களை புக் செய்து, ஆப்கானிஸ் தான் நாட்டிலிருந்து ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் ஏற்றுமதி செய்தது. இதையடுத்து, ஆஷி டிரேடிங் கம்பெனியின் உரிமையாளர்களான எம்.சுதாகரன், அவரது மனைவி ஜி.துர்கா பூர்னா வைஷாலி ஆகியோரை போலீசார் கைது செய் தனர். இந்த மிகப்பிரமாண்டமான கடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

adani

அடுத்ததாக, இதே அதானியின் முந்த்ரா துறைமுகத்தில், கடந்த மே மாதம், ரூ.500 கோடி மதிப்புள்ள 56 கிலோ எடைகொண்ட கொக்கைன் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். அடுத்ததாக, கடந்த ஜூலை 12ஆம் தேதி, 350 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப் பொருளை, முந்த்ரா துறைமுகத்தில், தீவிரவாத எதிர்ப்புப் பிரிவினர் கைப்பற்றினார்கள். ஏற்கெனவே பெரிய அளவில் போதைப் பொருட்கள் பிடிபட்ட நிலையில், மீண்டும் மீண்டும் அதே துறைமுகத்தில் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisment

குஜராத் துறைமுகங்கள் மற்றும் அதையொட் டிய அரபிக்கடல் பகுதியில் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும்போது, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை போதைப்பொருட்களின் சந்தையாக மாற்றிவரும் அதிர்ச்சிகரமான உண்மையை உணர முடிகிறது. இதற்காகவே குஜராத்திலுள்ள அதானியின் துறைமுகம் மட்டுமல்லாது, அம்மாநிலத்தின் மற்ற துறைமுகங்களிலும், மேலும் பல்வேறு துறைமுகங்களைச் சேர்ந்த கருப்பு ஆடுகளையும் சர்வதேச போதைப்பொருள் விற்பனை ஆசாமிகள் பயன்படுத்திவருவது தெரியவருகிறது. ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் போதைப்பொருட்களைப் பயிரிடக்கூடிய பல்வேறு நாடுகளிலிருந்து, குஜராத்தையொட்டிய அரபிக்கடல் பகுதி வழியாக போதைப் பொருட்களை இந்தியாவுக்குள் கடத்திவருவது தெரியவருகிறது.

adani

Advertisment

2022, ஏப்ரல் 20ஆம் தேதி, குஜராத்தின் ஹட்ச் மாவட்டத்திலுள்ள பழமையான துறைமுகமான கண்ட்லா துறைமுகத்தில், வருவாய் புலனாய்வு அதிகாரிகளும், குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ரூ.1,439 கோடி சர்வதேச சந்தை மதிப்புள்ள 205.6 கிலோ ஹெராயின் கைப்பற்றப் பட்டது. ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தி லிருந்து குஜராத் துறைமுகத்துக்கு வந்த கப்பலில், உத்தரகாண்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்காக 17 கண்டெய்னர்களில் மொத்தம் 10,318 பைகளில், ஜிப்சம் பவுடர் கொண்டுவரப்படுவதாகக் கூறப்பட்டது. அதனைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது, அதில் ஹெராயின் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இந்தியாவின் முதல் தனியார் துறைமுகமான குஜராத்திலுள்ள பிபாவாவ் துறைமுகத்தில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, நூதனமான முறையில் கடத்தப்பட்ட ஹெராயின் பிடிபட்டது. அங்கு வந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட நூல் பண்டலை சோதித்ததில், 396 கிலோ நூல் முழுவதும் ஹெராயின் கலந்து தயாரிக்கப்பட்டதாக இருந்தது.

கடந்த 2021 ஜூலை மாதத்தில் நவி மும்பையைச் சேர்ந்த நவசேவா துறைமுகத்தில் 293 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப் பற்றப்பட்டது.

adani

கடந்த 2022, மே 18ஆம் தேதி, லட்சத்தீவு கடல் பகுதியில், 'பிரின்ஸ்' மற்றும் "லிட்டில் ஜீசஸ்' ஆகிய இரண்டு படகுகளில், 1 கிலோ பாக்கெட்டு களாக மொத்தம் 218 ஹெராயின் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 1,526 கோடி ரூபாய். இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்படி, கடந்த 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து, தற்போதுவரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கிட்டத்தட்ட 4,000 கிலோ மதிப்பிலான ஹெராயின் பொருட்களைக் கைப்பற்றியிருக் கிறார்கள். இவற்றின் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் 30,000 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

மது விலக்கு அமலிலுள்ள மாநிலம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் குஜராத்தில், கள்ளச்சாராயமும், போலி மதுவும் மிகத்தாராள மாக புழங்குகின்றன. சமீபத்தில் கள்ளச்சாராயத் துக்கு 46 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக் கானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டாண்டு களில் மட்டும் 215 கோடி ரூபாய் மதிப்புள்ள 1 கோடி மதுபான பாட்டில்களையும், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 லட்சம் நாட்டுச்சாராய பாட்டில்களையும், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 லட்சம் பீர் பாட்டில்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதே குஜராத், போதைப்பொருட்கள் கடத்தலுக்கான மையமாகவும் இருப்பது மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உண்மையான 'குஜராத் மாடல்' இதுதானா?