ந்திய ராணுவத்துக்காக ரஃபேல் விமானத்தை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து மோடி அரசு வாங்கியபோது, அதன்மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று குற்றச்சாட்டுகளை கேள்விகளாக முன்வைத்தார். ரஃபேல் விமானத்தை ரூ.526 கோடிக்கு வாங்குவதற்குப் பதிலாக ரூ.1,670 கோடிக்கு வாங்கியது ஏன்? 126 விமானங்கள் வாங்குவதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு, தற்போது 36 விமானங்கள் மட்டும் வாங்க முடிவெடுத்தது ஏன்? ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத் துக்கு இந்த பணியை வழங்காமல், வங்கி மோசடியில் திவாலான அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கியது ஏன்? என்ற மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய மோடி அரசு, பல்வேறு வழியில் போராடி, அந்த ஊழல் குற்றச்சாட்டை ஓரங்கட்ட வைத்தது.

Advertisment

tt

கிட்டத்தட்ட அதேபோன்ற மற்றொரு ஊழல் குற்றச்சாட்டில் தற்போது சிக்கியிருக்கிறது, சமீபத்திய மோடியின் அமெரிக்க விசிட்டில், இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக, அமெரிக்கா விடமிருந்து 31 எம்.க்யூ.-9பி பிரிடேட்டர் யு.ஏ.வி. டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன்களின் விலை தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, இம்முறையும் காங்கிரஸ் கட்சி தான் இதுகுறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, "அமெரிக்காவுடனான பிரிடேட்டர் டிரோன்கள் ஒப்பந்தம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. பிரான்சிடமிருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பதிலாக 36 ரபேல் விமானங்களை மட்டுமே கூடுதல் விலைக்கு வாங்கி ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது. அதுகுறித்த விசாரணை இன்னமும் பிரான்ஸில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது அமெரிக்கா விடமிருந்து பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்குவதிலும் இதேபோன்ற பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் இதுகுறித்த விவரங்களை வெளிப்படைத்தன்மையாக வெளியிடுமாறு கேட்கிறோம். ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்திலும் பிரதமரே நேரடியாகத் தலையிட்டிருந்தார். அதேபோல் இதிலும் பிரதமர் தலையிட்டி ருப்பதால், சந்தேகம் வலுக்கிறது. குறிப்பாக, பிரிடேட்டர் டிரோன் ஒன்றின் விலை தோராய மாக ரூ.812 கோடி. 31 டிரோன்கள் வாங்க ரூ.25,200 கோடியை இந்தியா செலவழிக்க வேண்டும். இந்த விலையானது, இதே ட்ரோன்களை மற்ற நாடுகள் வாங்கியதைவிட 4 மடங்கு அதிகமாக உள்ளது. இப்படி அதிக விலை கொடுத்து இந்தியா ஏன் வாங்க வேண்டும்? அதுவும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில்லாத ட்ரோன் களுக்கு ஏன் அதிக விலை? இவ்வளவு விலைக்கு அவசர அவசரமாக வாங்க வேண்டிய கட்டாயம் என்ன? நம் நாட்டிலேயே இந்த ட்ரோன்களை, இந்த விலையோடு ஒப்பிடுகையில் 10-20 சதவீதம் விலையிலேயே உருவாக்க முடியும். அப்படியிருக்க எதற்கு அமெரிக்க ட்ரோன்கள்?. ரஸ்தம், கதக் ரக ட்ரோன்களை உருவாக்க நம் நாட்டின் டி.ஆர்.டி.ஓ.வுக்கு ரூ.1786 கோடியை ஒதுக்கிவிட்டு, அமெரிக்காவிடம் ரூ.25,000 கோடி செலவில் ட்ரோன்களை வாங்குவது ஏன்? இந்த ட்ரோன்களை வாங்குவது குறித்து ஏன் அமைச்சரவையில் முடிவெடுக்கவில்லை?'' என்றெல்லாம் சரமாரியாக சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

Advertisment

tt

இவரது கேள்விகள் அனைத்துமே நியாய மானவை. இதே வகை ட்ரோன்களை 2016ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்து, ஒரு ட்ரோன் 12.5 மில்லியன் டாலர் என்ற விலைக்கு வாங்கி யிருக்கிறது. ஆனால் தற்போது இந்தியா 110 மில்லியன் டாலர்களுக்கு விலை பேசியுள்ளது. இன்னொரு கணக்கீடு பார்க்கலாம். இதே ட்ரோன்களை ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 56.5 மில்லியன் டாலர்கள் என்ற விலைக்குத்தான் அமெரிக்கா வாங்கியிருக்கிறது. ஆனால் அதனை நமக்கோ இருமடங்கு விலைக்கு விற்கவுள்ளது. இதே ட்ரோன்களை நமக்கு தற்போது தரப்படுவதைவிட கூடுதல் தொழில் நுட்பங்களோடு விற்க ஆஸ்திரேலியாவிடம் டீலிங் பேசப்பட்டு, அது அதிகப்படியான விலை என்ற காரணத்தைக்கூறி ஆஸ்தி ரேலியா வாங்க மறுத்தது. இதையெல்லாம் பார்க்கும் போது, நாம் தற்போது வாங்கவுள்ள விலை மிகவும் அதிகம் என்பதில் சந்தேகமில்லை!

அதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியாவிடம் இந்த ட்ரோன்களை விற்க முயன்றபோது, விலை அதிகமென்ற காரணத்தைக்கூறி அப்போது வாங்க மறுத்துவிட்டது. அப்போது மறுத்துவிட்டு, இப்போது மனம் மாறி, அதிக விலைக்கு வாங்க நினைப்பது ஏனோ?

tt

Advertisment

இந்திய ராணுவமோ தங்களுக்கு 18 ட்ரோன்கள் தான் தேவையென்று கேட்டுள்ளனர். ஆனால் மோடி அரசோ 31 ட்ரோன்களை வாங்க முடிவெடுத்துள்ளது. இப்படி அதிகப் படியான ட்ரோன்களை வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன்? அதேபோல் இந்த விற்பனைக்கு எவ்வித டெண்டரும் வெளி யிடப்படாதது ஏனோ? அமெரிக்க சுற்றுப் பயணத்தில் ட்ரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதாகத் தெரிவித்த அரசு, தற்போது, கையெழுத்தெல்லாம் போடவில்லை என்று பின்வாங்குவது எதனால்? ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட 3 பில்லியன் டாலர் என்பதைக்கூட தற்போது உறுதிசெய்யப்படவில்லை என்று மறுக்கிறது மோடி அரசு! இப்படியான குளறுபடிகளைப் பார்க்கையில் காங்கிரஸின் ஊழல் குற்றச்சாட்டு உண்மையென்றே தெரிகிறது! விளக்கமளிப்பாரா மோடி?