திருச்சி உறையூர் 10-வது வார்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். அங்குள்ள மின்னப்பன் தெருவில் கடந்த 15 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்திருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் புகாரளித்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்விளைவாக கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததில், பிரியங்கா, லதா, 4 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி என உடல்நிலை பாதிக் கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கி னார்கள்.
இதனையறிந்த மேயர் அன்பழகன், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின், சித்திரைத் திருவிழாவில் பொதுமக்களுக்கு கொடுக்கப் பட்ட பானங்களில் கலப்படம் இருந்திருக்கலாமென்று மாநக ராட்சி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களோ, 'திருவிழா நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று மேயர் உறுதியளித்தார். இதேபோல் திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஆய்வில் எந்த கலப்படமும் இல்லையென்று தெரியவந்தது. மேலும், தண்ணீர்க்குழாயில் எந்த இடத்தில் கலப்படம் இருக்கலா மென்றும் ஆய்வு நடத்திவரு கிறார்கள். அண்டர் டிரைனேஜ் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்கள். அதை சரிசெய்ய அதிகாரிகளை நியமித்துள்ளதாக மேயர் தெரிவித்தார். இதேபோல் அந்தநல்லூர், சீராதோப்பு ஆகிய பகுதிகளிலும் வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்ற னர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது உயி ரிழந்த இருவர், ஏற்கெனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் தான் உயிரிழந்த தாகக் கூறப்படுகிறது. அதேபோல் உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கெனவே வயிற்று வலி இருந்த நிலையில், அந்த குழந்தைக்கு ஊதி எடுக்கும் சிகிச்சையை குழந்தையின் பெற்றோர் அளித்துள்ளனர். எனவே இறப்பு என்பது கழிவுநீர் கலந்ததால் ஏற்பட்டது என்ற தவறான தகவல் அரசியலுக்காகப் பரப்பப் பட்டதாகத் தெரிகிறது.
இந்த இறப்பு குறித்து உடனடியாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து, "கடந்த 15 நாட்களாகக் குடிநீரில் பிரச்சனை இருப்பதாக, மாநகராட்சிக்கு மக்கள் புகாரளித்தும், தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, இந்த உயிரிழப்புக்கு காரணம். குடிநீரைக்கூட, சுகாதாரமாக அளிக்கமுடியாத அரசு இருந்து என்ன பயன்?'' எனக் கேள்வியெழுப்பினார்.
அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன், "பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவையான, குடிநீரைக்கூட சுகாதாரமான முறையில் வழங்கமுடியாத, திருச்சி மாநகராட்சி நிர்வாகமும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசும், அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப்போகின்றன?'' எனக் கேள்வியெழுப்பினார். தமிழக பா.ஜ.க.வும் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தது. இப்படியாக, ஒவ்வொருவரும் பிரச்சனையின் உண்மைத்தன்மை அறியாமல் கருத்துத் தெரிவித்தனர். அதிலும் அ.தி.மு.க. தான் இந்த பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கியது.
குறிப்பாக, மின்னப்பன் தெருவில் வசித்துவரும் முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட முத்தையா என இருவரும் இந்த பிரச்சனையை தமிழகம் முழுவதும் கொண்டுசேர்த்தனர். இப்பிரச்சனையை பெரிதாக்குவதோடு, பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி சார்பாக தி.மு.க. மீது அவப்பெயரை ஏற்படுத்த, திருச்சியிலிருந்து இந்த பிரச்சனையை முதலில் ஆரம்பிப்போம் என்று திட்டமிட்டே தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில், இளநிலை பொறியாளர் வினோத் சரியான நடவடிக்கை எடுக்காததே இவ்விவகாரம் பூதாகரமானதற்கு காரணமென்று கூறப்படுகிறது.
உறையூர் சம்பவத்தில் 4 வயது குழந்தை இறந்த நாளன்று இரவு, கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முத்தையாவின் வீட்டிற்கு அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் ஸ்ரீனி வாசனோடு சென்ற வளர்மதி, இந்த இறப்பை எப்படி அரசிய லாக்கலாமென்று விவாதித்த தோடு, அங்கிருந்தே எடப்பாடி பழனிச்சாமியை செல்பேசியில் தொடர்புகொண்டு தகவல் அளிக்க, சட்டமன்றத்திலும் இந்த பிரச்சனை குறித்து எடப் பாடி பழனிச்சாமி பேசினார். துறையூரில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற கட்டுக் கதையை உருவாக்கி அதை பூதாகரமாக்கியது முத்தையா தான் என்று கூறப்படுகிறது.
இது அமைச்சர் கே.என். நேரு தொகுதி என்பதால், சம்பவம் பெரிதாவதற்கு முன்பே மேயர், கவுன்சிலர் உள்ளிட் டோர் நேரடியாகப் பார்வை யிட்டு பிரச்சினையை ஆரம் பத்திலேயே சரி செய்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால் சட்டமன்றம்வரை இந்த விவகாரம் கடும் விவாதத் தை ஏற்படுத்தியது. இந்நிலையில்... தண்ணீரில் எந்த கிருமியும் இல்லையென்று பரிசோத னையில் தெரியவந்துள்ளது. எனவே இறப்பிற்கு கழிவுநீரைக் காரணமாக்குவதற்கு எந்த முகாந்திரமுமில்லை. ஆக, பொய்யான தகவல்களைப் பரப்பி, பரபரப்பாக்கி அரசியல் செய்த பா.ஜ.க., அ.தி.மு.க.வின் திட்டம் அம்பலமாகியுள்ளது.