Advertisment

திராவிடம்… ஆரியம்! ஆளுநரின் அடாவடி! வலுக்கும் எதிர்ப்புகள்!

ss

மிழ்நாடு அரசுக்கும், திராவிட மாடலுக்கும் எதிராகப் பேசி பரபரப்பைக் கிளப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர், தற்போது திருச்சியில் பேசிய பேச்சும் பலத்த விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

Advertisment

governor

திருச்சியில் கடந்த 23ஆம் தேதி திங்களன்று, ஜம்புதீவு பிரகடன ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தனியார் பயிற்சி மையம் சார்பில் மருது சகோதரர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது, "தமிழகத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பட்டியலை அரசிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்த பட்டியலில் 40க்கும் குறைவானவர்களே இடம்பெற்றிருந்தனர். பல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடி யுள்ளதை நான் அறிந்தேன். அதில் மருது சகோதரர்களின் அர்ப் பணிப்பு பெரியது. சுதந்திரத்திற்கான முதல் பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்டு, அதை ஸ்ரீரங்கம் கோவிலில் ஒட்டினார்கள். தமிழகத்தின் ஆட்சியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்க

மிழ்நாடு அரசுக்கும், திராவிட மாடலுக்கும் எதிராகப் பேசி பரபரப்பைக் கிளப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர், தற்போது திருச்சியில் பேசிய பேச்சும் பலத்த விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

Advertisment

governor

திருச்சியில் கடந்த 23ஆம் தேதி திங்களன்று, ஜம்புதீவு பிரகடன ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தனியார் பயிற்சி மையம் சார்பில் மருது சகோதரர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது, "தமிழகத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பட்டியலை அரசிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்த பட்டியலில் 40க்கும் குறைவானவர்களே இடம்பெற்றிருந்தனர். பல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடி யுள்ளதை நான் அறிந்தேன். அதில் மருது சகோதரர்களின் அர்ப் பணிப்பு பெரியது. சுதந்திரத்திற்கான முதல் பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்டு, அதை ஸ்ரீரங்கம் கோவிலில் ஒட்டினார்கள். தமிழகத்தின் ஆட்சியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களைத் திட்டமிட்டு மறைத்துள்ள னர். அந்த வீரர்களை தமிழ்நாட்டில் கொண் டாடவில்லை. முத்துராமலிங்கத் தேவர் மிகச்சிறந்த போராட்ட வீரர். அவரை இன்று சாதித் தலைவராக்கியுள்ளனர். ராபர்ட் கால்டுவெல்தான், திராவிடர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். உண்மையில் இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டிஷாரின் உத்திகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்த தமிழர்களில் சிலரை இன்று தமிழகம் கொண்டாடுகிறது'' என்றெல்லாம் தமிழக ஆட்சியாளர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

Advertisment

ஆளுநரின் பேச்சுக்கு மறுப்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருது சகோதரர்களுக்கு தமிழ்நாடு அரசு என்னென்ன சிறப்புகள் செய்துள்ளது' என்பதைப் பட்டியலிட்டதோடு, "நஞ்சு தோய்ந்த எண்ணங் கொண்டோரின் பின்னணியை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! நடிப்புச் சுதேசிகளை நாடறியும்' என்று தமிழக கவர்னரை மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.

gகடந்த வாரத்தில்தான், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சங்கரய்யாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அறிவித்த டாக்டர் பட்டத்துக்கான கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "காமராசர் பல்கலைக்கழக செனட்டும், சிண்டிகேட்டும் சேர்ந்து பல்கலைக்கழக விதிப்படி தீர்மானம் போட்டு நிறைவேற்றி அனுப்பியதில் கவர்னர் கையெழுத்து போடாமல் மறுத்துள்ளார். அவர் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதாலும், சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர் சங்கரய்யா என்பதாலும் கையெழுத்து போட மறுக்கிறார் கவர்னர். மக்கள் பிரச்சனைக்காக சட்டமன்றத்தில் இயற்றிய பெரும்பாலான கோப்புகளில் கையெழுத்திடாமல் மறுப்பது சரியான முறையல்ல. இதேபோல் ஆந்திர அரசின் தீர்மானங்களில் கையெழுத்து போடாமல் இழுத்தடித்த கவர்னருக்கு எதிராக நீதிமன்றத்திற்கு அவர்கள் போனார்கள். அதன்பின் வேறு வழியின்றி ஆந்திர கவர்னர் கையெழுத்து போட்டார். நம் மாநில அரசும் கவர்னருக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றால் எங்கள் ஆதரவு உண்டு'' என தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், "திரா விடன் என்பது நிலவியல் சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவுதானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம் சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அக்மார்க் தயாரிப்புதான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார். அரசியல் சாசனத்திற்கு விரோதமாகத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ஆர்.என்.ரவி, ஆளுநராக நீடிப்பதற்கான அருகதை யற்றவர்'' என்றார். தி.மு.க. பொரு ளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, "அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதிநிதியாக, ஒன்றிய அரசின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் துரோகம் செய்கிறார். இதை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றார்.

வழக்கறிஞர் ஸ்டாலினோ, "இதை இப்படியே விடக்கூடாது. ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் மசோதாக்களை எந்தவித காரணமுமின்றி வேண்டுமென்றே வருடக்கணக்கில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசை முடக்குவதாகும். கேரளா, ஆந்திரா போன்ற மாநில அரசுகள் ஆளுநர்களுக்கு எதிராக சட்டமியற்றி வழக்கும் தொடர்ந்துள்ளனர். சட்டப் பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக் கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், "அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் கடமைப்பட்டிருக்கிறார்'' என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி யுள்ளது.

hh

அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி குறித்த விவாதத்தின்போது, "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், அமைச் சர்கள் குழு வழங்கிய ஆலோசனை யின்படி மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறார்'' என்றும் விளக்கினார்.

ஆளுநர்களுக்கு எதிரான குரல் வலுக்கத் தொடங்கியுள்ளது!

nkn281023
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe