ட்சிக் காரர் ஒருவர் வீட்டுத் திரு மணத்திற்கு பேராசிரியர் அன்பழகனை அழைத்திருந் தார்கள். அவரும் வந்தார். புரோ கிதரை வைத்து மந்திரம் ஓதி திருமணம் நடந்து கொண்டிருந்தது. “"அப்புறம் எதற்கு என்னை அழைத்தீர்கள்?'’எனக் கோபமாக கேட்டபடி, மண்டப வாசலில்கூட கால் வைக்காமல் திரும்பிவிட்டார். திராவிட இயக்கத்தவராக இருந்தால், சுயமரியாதை முறையில் சீர்திருத்த திருமணம்தான் நடைபெறவேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதி அது.

கொள்கைகளிலிருந்து விலகுபவர்களும், இயக்கத்தை விட்டு வெளியேறியவர்களும் தன் சொந்தக்காரர்களாக இருந்தாலும் ரத்த பந்தங்களாக இருந்தாலும் அவர் களுடனான உறவை விரும்பமாட்டார் பேராசிரியர் அன்பழகன்.

aa

இயக்கத்தை யும் அதன் இலட்சி யத்தையும் கடைப்பிடிப்ப வர்களே அவரது உடன்பிறப்பு கள், சொந்த பந்தங்கள்.

Advertisment

இளம் வயதிலேயே பெரியாரின் கொள்கைத் தலைமையை ஏற்ற தொண் டர். அண்ணாவின் இயக்கத் தில் அன்பிற்குரிய தம்பி. கலைஞரின் நம்பிக்கைக் குரிய தோழர் என தனது 98 வயது வரை திராவிட இயக்கப் பாதையில் தளராமல் நடைபோட்டவர். இராமையா என்கிற தனது பெயரை திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் ஊட்டிய தமிழ்ப் பற்றின் காரணமாக, அன்பழகன் என மாற்றிக் கொண்டவர்.

அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவராக இருந்த பெருமைக்குரியவர் கலைஞர் என்றால், அந்த 50 ஆண்டுகாலமும் கலைஞருக்குத் துணையாக இருந்து, 43 ஆண்டுகள் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தவர் பேராசிரியர் அன்பழகன். அவர், கலைஞரைவிட ஒன்றரை வயது மூத்தவர். திருவாரூரில் நடந்த சிக்கந்தர் விழா எனும் இஸ்லாமிய நிகழ்வில் கலந்து கொண்ட பேரறிஞர் அண்ணா, தன்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான அன்பழகனையும் அழைத்து வந்திருந்தார். அதுதான், அவருக்கும் கலைஞருக்குமான அறிமுக நிகழ்வாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, திருவாரூரில் கலைஞர் நடத்தி வந்த தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு அழைப்பாள ராக அழைக்கப்பட்டார் அன்பழகன். இருவருக்கு மிடையிலான கொள்கை உறவு வலுப்பட்டது.

Advertisment

aa

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக தன்னுடன் பயின்ற நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோருடன் இணைந்து திராவிட இயக்கத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு, பெரியாரின் கொள்கைகளை முழங்கிய அன்பழகன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியதால், இயக்கத்தினர் அவரைப் பேராசிரியர் என்றே அன்புடன் அழைத்தனர்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கிய போது அவருடன் இணைந்து செயலாற்றத் தொடங்கினார் பேராசிரியர் அன்பழகன். பொதுக்கூட்டம், மாநாடுகளில் கொள்கை முழக்கம் செய்ததுடன், "புதுவாழ்வு'’என்ற பத்திரிகையை நடத்தி அதிலும் கொள்கைகளை முழங்கினார் பேராசிரியர் அன்பழகன்.

1957-ல் தி.மு.க. முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு, 15 இடங்களில் வென்றபோது, எழும்பூர் தொகுதியிலிருந்து பேராசிரியர் அன்பழ கன் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப் பேரவைக்குச் சென்றார். 1962 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர், ஆசிரியர்களுக்கான சட்டமேலவைத் தேர்தலில் வென்று எம்.எல்.சி. ஆனார். 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் சிறைப் படுத்தப்பட்டார்.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக் கப்பட்ட பேராசிரியர் அன்பழகனின் குரல் டெல்லியில் ஒலிக்கத் தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினராக அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பேராசிரியர் அன்பழகன், அங்கே புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற முதல்வர் அண்ணாவை சந்தித்து அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

அண்ணாவின் மறைவை அடுத்து, தி.மு.க.வுக்கு கலைஞர் தலைமை தாங்கிய நிலையில், தன் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து, கட்சியில் மூத்தவர் என்பதையும் கடந்து, திராவிட இயக்கத்தைக் காத்திட வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் கலைஞரின் தலைமையினை ஏற்று செயல்படத் தொடங்கினார்.

1971-ல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, கலைஞரின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று செயலாற்றினார். அப்போது பொது மருத்துவத் துடன், சித்த வைத்தியத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளில் சித்தவைத்தி யப் பகுதியை உருவாக்கினார். பொதுவாகவே, அவருக்கு தமிழ் மருத்துவ முறையான சித்த வைத்தியத்தில் நம்பிக்கையும் பரிச்சயமும் உண்டு.

1983-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கலைஞரும், பேராசிரியரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன நிலையில், மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றதால், பேராசிரியர் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேரின் பதவியைப் பறித்தார் அன்றைய அ.தி.மு.க. அரசின் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்.

பதவிகள் கிடைத்தாலும் இழந்தாலும், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் சமநிலையில் இருப்பது பேராசிரியர் அன்பழகனின் இயல்பு. திராவிட இயக்க கொள்கைகளை முழங்குவதும், தமிழ் உணர்வை ஊட்டுவதுமே தனது இலட்சியம் என செயல்பட்டவர் அவர்.

1989-91, 1996-2001 ஆகிய தி.மு.க. ஆட்சிக் காலங்களில் கல்வி அமைச்சராகவும், 2006-2011 தி.மு.க. ஆட்சியில் நிதியமைச்சராகவும் திறம்பட செயலாற்றினார் பேராசிரியர் அன்பழகன். 2001-06-ஆம் ஆண்டில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தன் பணியினை மேற்கொண்டவர்.

அவரது நிரந்தரப் பதவி என்பது திராவிட இயக்க தத்துவப் பேராசிரியர் என்பதுதான். தி.மு.க.வின் பிரம்மாண்ட மாநாடுகளில் கூடுகின்ற இலட்சக்கணக்கான தொண்டர்களிடம் அன்றாட அரசியலை மட்டும் பேசாமல், திராவிட இயக்கத்தின் கொள்கை, அதன் நோக்கம், சமூகநீதிப் பாதையில் பெற்றிருக்கின்ற வெற்றி, ஆரிய ஆதிக்கத்தின் சவால்கள், தமிழர்களின் பண்பாட்டு பெருமை, அவற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் என உணர்ச்சிப்பெருக்குடன் உரையாற்றும்போது, ஒரு தத்துவப் பேராசிரியர் எளிமையாக வகுப்பெடுப்பது போலவே இருக்கும்.

வள்ளுவர், வள்ளலார் நெறிகளில் தமிழ்ப் பண்பாட்டை முன்னெடுத்து பகுத்தறிவுப் பார்வையுடன், "நீங்களும் பேச்சாளராகலாம்', "தமிழர் திருமணமும் இனமானமும்', "தமிழ்க்கடல் அலைஓசை பரவும் தமிழ் மாட்சி', "வகுப்புரிமைப் போராட்டம்' உள்ளிட்ட 41 புத்தகங்களை எழுதியிருக்கிறார் பேராசிரியர் அன்பழகன்.

திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களில் 100 வயதை கடப்பவராக பேராசிரியர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 98 வயதில் உடல்நலக்குறைவினால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாச நிலைக்குத் தள்ளப்பட்டு, 7-3-2020 அன்று பேராசிரியரின் உயிர் பிரிந்தது. "என் பெரியப்பாவை இழந்துவிட்டேன்' என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கைப்பட எழுதிய இரங்கல் அறிக்கையை வெளியிட்டார்.

பேராசிரியருக்கு இறுதி மரியாதை செலுத்திட கட்சியின் முக்கிய நிர்வாகி கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் திரண்டதால், அவரது கீழ்ப்பாக்கம் இல்லம் நெருக்கடியால் திணறியது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள், கவிஞர் வைரமுத்து உள் ளிட்ட தமிழறிஞர்கள் எனப் பேராசிரி யரின் கண்ணியமிகு அரசியலால் ஈர்க்கப்பட்டவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். 3 கி.மீ. நீளத்திற்கு மக்கள் வெள்ளத்தில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று, பேராசிரியரின் உடல் எரியூட்டப்பட்டது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள நூலகத்திற்கு "பேராசிரியர் ஆய்வு நூலகம்' என அப்போதே பெயர் வைத்து விட்டார் கலைஞர். அது போலவே, அங்குள்ள இலவச கண் மருத்துவ மனைக்கு அவரது துணைவியார் பெயரான "வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனை' எனப் பெயரிடப் பட்டுள்ளது. இவற்றைக் கடந்து, தி.மு.க. குடும்பங்கள் பலவற்றில் அன்பழகன் என்ற பெயர் கொண்டவர்கள் உண்டு.

ஓர் இயக்கத்தின் வளர்ச்சியையும் அதன் தத்துவத்தையும் மட்டுமே இலட்சியமாக கொண்டவர்கள், தன்னை முன்னிறுத்தாமல், தனக்கு கிடைத்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு, இயக்கத்தின் வெற்றிக்காகத் தலைமைக்கு கட்டுப்பட்டு, கட்சியின் மனசாட்சியாக செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய வர் பேராசிரியர் அன்பழகன். அவரது இடத்தை நிரப்புவது அத்தனை எளி தல்ல. என்ன செய்யப்போகிறது தி.மு.க.

-கீரன்

____________________

நக்கீரனுக்கு பேராசிரியர் புகழாரம்!

aa

2010—ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழக அரசின் சார்பில் நமது ஆசிரியருக்கு சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு தலைமை தாங்கிப் பேசிய அப்போதைய நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன், ஜெ.வின் அடக்குமுறையை எதிர்கொண்ட நக்கீரனின் தைரியத்தையும் சமூகநீதிக்காக தொடர்ந்து பாடுபடும் நக்கீரனின் லட்சியத்தையும் வெகுவாக புகழ்ந்தார்.