மிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் பேசும் திராவிட மக்கள், தங்கள் மொழிகளின் வரலாற்றை அறிந்துகொண்டு உயிர்ப்புடன் பேணுவதும், அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து காப்பதும் அத்தியாவசியமானது.

1997-ல் நான்கு துறைகளுடன் தொடங்கிய இந்தப் பல்கலைக்கழகம், தற்போது, 25-க்கும் மேற்பட்ட துறைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திராவிடப் பண்பாட்டையும், திராவிட மொழிகளையும் மையப்படுத்தும் ஒரே பல்கலைக் கழகம் உலகிலேயே இதுதான். இத்தகைய பெருமை வாய்ந்த திராவிடப் பல்கலைக்கழகத்தின் 22-வது ஆண்டு தொடக்கவிழா அக்டோபர் 20-ந் தேதி பல்கலை வளாகத்தில் நடைபெற்றது.

aa

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திராவிட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சலாம், மதுரையில் நடந்துமுடிந்த கீழடி அகழாய்வு குறித்து பெருமையுடன் பேசியதோடு, "திராவிடமே இம்மண்ணில் தொன்மையானது' என்றும் வியந்து கூறினார்.

Advertisment

ஆந்திர மாநிலம் சித்தூர் எம்.பி. ரெட்டியப்பா பேசியபோது, ""நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பேசுவதைக் கண்டு வியந்து, இனி நானும் தெலுங்கில் பேச முடிவு செய்துள்ளேன். திராவிட மொழிகளின் ஒருங்கிணைப்பு என்பது வெறும் மொழி ஒருங்கிணைப்பு மட்டுமல்ல… பண்பாட்டு ஒருங்கிணைப்பு, மக்கள் ஒருங்கிணைப்பு. இந்தப் பல்கலையில் பயிலும் எம்.ஏ. தமிழ்த்துறை மாணவர்களுக்கு ஆந்திர மாநில முன்னாள் கூடுதல் செயலாளர் டாக்டர்.செல்லப்பா ஐ.ஏ.எஸ். பணஉதவி செய்வதுபோல், தெலுங்கு மாணவர் களுக்கு உதவும் திட்டமுள்ளது. விரைவில் நிறைவேற்றுவேன்'' என்றார் உற்சாகமாக.

aaa

இத்தனை பெருமைகளைக் கொண்டிருந்தும் பல சிக்கல்களுக்கு மத்தியிலேயே இந்தப் பல்கலைக்கழகம் இயங்குகிறது என்று நம்முடன் பேசிய முக்கியப் பேராசியர் ஒருவர் “""அரசியல், மொழி மற்றும் பண்பாட்டுத்தளத்தில் நேரடியாக போர் நடக்கிறது. வடநாட்டவர்கள் இந்தி, சமஸ்கிருதத்தை நம் மாநிலங்களில் திணிக்க தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். திராவிட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த ஆதிக்கத்தை எதிர்க்க முடியும். அதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் பலருக்கே அது தெரியவில்லை. இந்தக் கல்வியாண்டு முதல் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி துறைகள் இருக்கக் கூடாதென்று இதற்கு முன்பிருந்த துணைவேந்தர் முடிவுசெய்து, அட்மிஷனுக்கு வந்த மாணவர்களை திருப்பி அனுப்பினார். இதற்கெதிரான கிளர்ச்சிக் குப் பிறகே, இந்த முடிவு மாற்றப்பட்டது'' என்று குமுறினார்.

Advertisment

இந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள்; அதை தமிழக அரசு கண்டுகொள்ளாதது குறித்து 2017-ல் செய்தி வெளியிட்டது நக்கீரன். அவை இன்னமும் சரி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.

-து.ராஜா