Advertisment

வள்ளலார் வழியில் திராவிட மாடல் அரசு!-முதல்வர் பெருமிதம்!

vallar

2026, பிப்ரவரி 15 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற “அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026’-ஐ தொடங்கிவைத்து உரையாற்றினார். 

Advertisment

"தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் போற்றிய சென்னையில், அவர் காட்டிய அறநெறி களை, வாழ்க்கை முறையாகவே பின்பற்றி உங்களை எல்லாம் இந்த “அனைத்துலக வள்ளலார் மாநாட் டில்’சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

Advertisment

வள்ளலார் பாடுவதற்காக எடுத்துக்கொண்ட திருவாரூரைச் சேர்ந்தவன் என்ற பெருமையோடு இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கக்கூடிய அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனைபேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளை யும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சேகர்பாபு அவர்களை பொறுத்தவரை, கழகப்பணியாக இருந்தாலும் சரி, அரசின் சார்பிலான ஆன்மி

2026, பிப்ரவரி 15 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற “அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026’-ஐ தொடங்கிவைத்து உரையாற்றினார். 

Advertisment

"தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் போற்றிய சென்னையில், அவர் காட்டிய அறநெறி களை, வாழ்க்கை முறையாகவே பின்பற்றி உங்களை எல்லாம் இந்த “அனைத்துலக வள்ளலார் மாநாட் டில்’சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

Advertisment

வள்ளலார் பாடுவதற்காக எடுத்துக்கொண்ட திருவாரூரைச் சேர்ந்தவன் என்ற பெருமையோடு இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கக்கூடிய அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனைபேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளை யும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சேகர்பாபு அவர்களை பொறுத்தவரை, கழகப்பணியாக இருந்தாலும் சரி, அரசின் சார்பிலான ஆன்மிகப் பணிகளாக இருந்தாலும் சரி, அதைச் சிறப்பாகச் செய்து, தான் "செயல்பாபு'தான் என்று தொடர்ந்து நிரூபிக்கக்கூடியவர்.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 20 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,192 கோயில்களில், திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டு கள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில்,  352 திருக்கோயில்களை திருப்பணிக்கு எடுத்துக்கொண்டு இதுவரை 87 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்து முடித் திருக்கிறோம். அதுமட்டுமல்ல, 12,931 திருக்கோயில் களில், 8,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29,479 திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான 8,106 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம்.

கடந்த ஆண்டு 5 லட்சத்திற்கும் மேற்பட் டோர் கலந்துகொண்ட அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டை நடத்தி எல்லோரையும் திரும் பிப் பார்க்கவைத்தோம். இன்றைக்கு அனைத்துலக வள்ளலார் மாநாட்டை நடத்திக்கொண்டிருக் கிறோம்.

வள்ளலாரை ஏன் நாம் உயர்த்திப் பிடிக்கிறோமென்றால், "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'’என்று சொல்லி, உலகுக்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியைப் போதித் தவர் வள்ளலார். அவரது வழியில்தான், நமது திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

ஏழை மக்களின் பசியை ‘பிணி’ என்று சொன்னார் வள்ளலார்! அந்தப் பிணியை ஒழிக்கும் மருந்துதான் நமது திராவிட மாடலின் திட்டங்கள்! அதனால் தான், பள்ளிகளில், காலை உணவுத் திட்டம் முதல் முதியோர்களுக்கான தாயுமானவர் திட்டம் வரை, அனைத்து வயதினரையும், கருணையோடு அரவணைக்கின்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

வள்ளலாரின் கோட்பாடுகளை மேற்கோள்காட்டுவது மட்டுமல்ல, அவற் றை செயல் வடிவத்தில் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதிக்கு, ‘வள்ளலார் நகர்’ என்று பெயர்வைத்தார். அந்த வள்ள லார் நகர் பேருந்து நிலையத்தை 10 கோடி ரூபாய் செலவில் புனரமைத்திருக்கிறோம். வள்ளலார் பிறந்தநாளை, ‘தனிப்பெருங் கருணை நாளாக’ அறிவித்தோம்.

இந்தச் சாதனைகளின் தொடர்ச்சி யாக, வள்ளலாரின் உயரிய கருத்துகளை, வாழ்க்கை நெறிகளை, உலகெங்கும் போற் றிடும் நோக்கத்துடன் இன்று, அனைத் துலக வள்ளலார் மாநாடு நடத்தப்படு கிறது.

இந்த மாநாட்டில் ஏழு அறிவிப்பு களை நான் வெளியிட விரும்புகிறேன். இந்த அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெற்றதை குறிக்கின்றவிதமாக இந்த பள்ளி வளாகத்தில், நினைவுத் தூண் அமைக்கப்படும். வடலூரில், சன்மார்க்க பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும். அந்தப் பள்ளியில் திருவருட்பா இசைப்பயிற்சியும் அளிக்கப்படும். வடலூரில், வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும். 'ஸ்பிரிச்சுவல் அல்-கெமி' என்ற வள்ளலார் புத்தகம் அறநிலையத் துறை பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும். 

வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும். மேட்டுக்குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய இடங்களில், ‘வள்ளலார் அன்னதானக் கூடங்கள்’ திறக்கப்படும். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துவரும் பூங்காவுக்கு ‘வள்ளலார் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.

இதெல்லாம் இருக்க, நம்முடைய பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள், வள்ளலாரின் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்கக் கூடாது! பிரிவினை சக்திகளுக்கு ஒருபோதும் இடம்கொடுக்காமல், அன்பும்  பண்பும்  அறனும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும்''’என்றார். 

-கீரன்

________
இறுதிச் சுற்று!

முத்தமிழறிஞர் கலைஞர் விருது!

vallar-box

தமிழ்த் திரையுலகில் வாழ்நாள் முழுவதும் சிறந்து விளங்கிய கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் "முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது'க்கு 2024ஆம் ஆண்டுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், 2025ஆம் ஆண்டுக்கு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் தேர்வுசெய்யப் பட்டனர். பிப்ரவரி 16ஆம் தேதி, திங்களன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், நடிகை எம்.என்.ராஜம் அவர்களுக்கும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

-கீரன்

nkn180226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe