பா.ம.க. நிறுவனரும் மூத்த அரசியல் தலைவருமான டாக்டர் ராமதாஸ் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கடந்த வாரம் திடீரென தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள, எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என அவரது குடும்பத்தினர் பதறித்துடித்ததில் ஒட்டுமொத்த பா.ம.க.வும் அதிர்ச்சியடைந்தது.

அதிகம் வெளியில் தெரியாத இந்த சம்பவம் குறித்து நாம் விசாரித்தோம். டாக்டர் ராமதாசுக்கு தமிழக அரசின் போலீஸ் பாதுகாப்பு இருப்பதால், அந்தப் பணியில் உள்ள போலீசார் தங்குவதற்கு தைலாபுரம் தோட்டத்திலேயே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு டாக்டர் அதிகம் வெளியே செல்வதில்லை என்பதால், போலீசார் தங்கள் உடுப்பு, துப்பாக்கியை பத்திரமாக வைத்துவிட்டு ஓய்வெடுப்பது வழக்கம்.

ramdoss

Advertisment

டாக்டர் ராமதாஸ் வெளியே கிளம்புவதாக இருந்தால் அரை மணிநேரத்திற்கு முன்பே, போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்படும். உடுப்பு, துப்பாக்கியுடன் ரெடியாகிவிடுவார்கள். டாக்டர் பயணிக்கும் வாகனத்தின் பின்னே போலீஸ் வாகனம் செல்லும். டாக்டர் ராமதாஸ் எங்கு செல்கிறார் என்பதை மேலிடத்திற்குப் போலீஸ் தெரிவிக்கும்.

கடந்த 9-ந் தேதி, போலீசுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் டாக்டர் ராமதாஸின் கார் புறப்பட்டுள்ளது. ரிலாக்ஸாக இருந்த போலீசாரால் உடுப்பணிந்து உடனடியாக கிளம்ப முடியவில்லை. அவர்களின் பதட்டத்தை உணர்ந்த ராமதாஸின் டிரைவர், "பக்கத்துல போய்ட்டு உடனே வந்துடுவோம்; நீங்க இங்கேயே இருங்க''’எனச் சொல்லிவிட்டு விருட்டென்று வாகனத்தை விரட்டினார்.

வெளியே சென்ற ராமதாஸ் 2 மணி நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. போலீசார் சந்தேகத்துடன் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரிக்க, அவர்களும் பதட்டமாயினர். மேலதிகாரிகளுக்கு விவரம் தெரிவிக்க, அவர்களுக்கும் டென்சன். மாவட்டக் காவல்துறை உள்பட போலீசின் பல பிரிவுகளுக்கும் தகவல் பறந்தது. ராமதாஸ் டிரைவர் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அந்த எண்ணை ட்ரேஸ் அவுட் செய்ய ஒரு பிரிவு முயற்சியில் இருந்தது.

r

டாக்டர் ராமதாஸ் வண்டி எண்ணை வைத்து, தைலாபுரம் தோட்டத்திலிருந்து செல்லும் சாலைகளிலுள்ள செக் போஸ்டுகளின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்தனர். புதுச்சேரி செல்லும் சாலையில் வாகனம் சென்றதை கண்டுபிடித்தனர். குறிப்பிட்ட ஒரு செக் போஸ்ட்டினை அந்த வாகனம் கடக்காத நிலையில், இடைப்பட்ட இடத்தில் தான் அவர் இருக்க வேண்டும் என முடிவு செய்து தேடியதில், தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான ரிசார்ட்டில் ராமதாஸ் தங்கியிருப்பதை உறுதி செய்துகொண்டு பெருமூச்சு விட்டது போலீஸ். கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது.

குடும்பத்தில் அன்புமணி உள்பட யாரிடமும் தகவல் தெரிவிக்க வேண் டாம் என டிரைவரிடம் கண்டிப்பாகச் சொன்னதுடன், டிரைவரின் போனை யும் வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்திருக் கிறார் ராமதாஸ். பின்னர் ரிசார்ட்டி லிருந்து கிளம்பி, சென்னை தியாகராய நகர் அக்கார்ட் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். போலீஸ் உதவியுடன் விவரம் அறிந்த குடும்பத்தினர், டாக்டரை சமாதானப்படுத்தியுள்ளனர். அப்போதும் தைலாபுரம் திரும்பாமல், சென்னையில் உள்ள தனது மகள் வீட் டில் தங்கிய ராமதாஸ், பா.ம.க. சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதற்காக பொதுவெளிக்கு வந்தார் என்றனர் நெருங்கிய வட்டத்தினர்.

குடும்பத்தினருக்குத் தெரியாமல் ராமதாஸ் விளையாடிய கண்ணாமூச்சி ஆட்டம் எதற்காக என நாம் விசாரித்த போது, ‘’உள்ளாட்சித் தேர்தல் முடிவு கள்தான் காரணம் என்றனர். தோல்விக் கான காரணங்களை ஆராய மாவட்ட நிர்வாகிகளைத் தோட்டத்துக்கு அழைத்து, டோஸ் விட்டிருக்கிறார் ராமதாஸ். பிறகு, அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இதில் பா.ம.க.வின் தலைவர் பொறுப்பில் உள்ள ஜி.கே.மணிக்கு செம டோஸ். "தொடர்ச்சியா தோற்றுத் தோற்று கட்சியை அழிச்சிடலாம்னு திட்டமா?'' என்று கோபம் காட்டிய ராமதாஸ், தே.மு.தி.க.வையடுத்து தேய்கிற கட்சி பா.ம.கதான் என்கிற வலைத்தளக் கிண்டல்களையும் சுட்டிக்காட்டி, இனி மாநிலத் தலைவர் வேலையைப் பார்க்க வேண்டாம். பென்னாகரம் தொகுதி அரசியலை மட்டும் கவனிங்க எனச் சொல்லிவிட்டார்.

அதுபோல, ஏ.கே.மூர்த்திக்கும் செம டோஸ். அமைப்புச் செயலாளர் ஜெயராமன் சொல்வதைக் கேட்காமல், தன் பொறுப்பில் உள்ள மாவட்டங் களுக்கு நிர்வாகிகளை நியமிப்பது, தேர்தல் சீட் கொடுப்பது என ஏ.கே. மூர்த்தியின் நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அரசியல் பணிகளை ஓரங்கட்டிவிட்டு, இறகுப்பந்து சங்கப் பணிகளில் ஆர்வம் காட்டும் அன்புமணி மீதான ஆதங்கத் தையும் மூர்த்தி முன் வெளிப்படுத்தி யுள்ளார் டாக்டர் ராமதாஸ், "நமக் கெதுக்கு வெளையாட்டு பிசினெஸ்? அரசியலை வெச்சு ஓட்டு வாங்கணும். மக்களுக்கு நல்லது செய்யணும்'' என்றவர், "யாரை நம்பியும் கட்சி ஆரம்பிக்கலை. யாரும் கட்சியை நிமிர்த்த வேண்டாம்... நானே பார்த்துக் கிறேன். இங்கிருந்து சென்னைக்கு நீ போறதுக்குள்ளே உனக்கு நல்ல செய்தி வரும், கைதட்டிக் கொண்டாடு'' என வெடித்திருக்கிறார் ராமதாஸ். 4 மாவட் டங்களை உள்ளடக்கிய மண்டலச் செயலாளராக இருந்த ஏ.கே.மூர்த்தியை தேர்தல் பணிக்குழு என டம்மி போஸ்டிங்கிற்கு மாற்றிவிட்டார். அன்புமணி யிடமும் கோபத்தை வெளிப்படுத்திய ராமதாஸ், கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு கண்ணா மூச்சி ஆட்டம் மூலம் ஷாக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் பா.ம.க.வினர்.

-நமது நிருபர்