தற்கொலை - மதுரை சோகம்!

கஸ்ட் 31, இரவு, மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறை முன்பாக, "என் மகளை கொன்றவர்களை கைது செய்யும்வரை இங்கிருந்து போகமாட்டோம்" என்று தரையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட தாயை போலீசார் சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தனர். 

Advertisment

தாய் செல்வி நம்மிடம் "150 பவுன் நகை போட்டு கடந்த ஆண்டு செப்டம் பரில், செல்லூரி லுள்ள இலங் கேஸ்வரன் -தன பாக்கியத்தின் மகன் ரூபன்ராஜுக்கு எங்கள் மகள் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொடுத்தோம். கணவரின் தங்கைக்கு 300 பவுன் போட்டாய்ங்களாம் அதுபோல நீங்களும் போடணும்னு கேட்டாய்ங்க. கொஞ்சம் பொறுங்க, சொத்தை வித்தாவது போடுறோம்னோம். அடுத்தடுத்து, கார் வேணும்... இன்னும் 100 பவுன் வேணும்... என் மகனுக்கு 300 பவுன் நகை போட வரிசையில் இருக்காங்க... எங்களை ஏமாத்திட்டீங்கன்னு சொல்லி என் பொண்ணை டார்ச்சர் செஞ்சிருக்காங்க. 

போன மாசம் எங்க வீட்டுக்கு வந்த பொண்ணு, "அம்மா ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க... அங்கி ருந்தா என்னைய கொன்னுடு வாங்க'ன்னு கதறியழுதா. உடனே செல்லூர் ஸ்டேசனில் புகார் கொடுத்தோம். இந்நிலையில், மரு மகனுக்கு வேறொரு பெண் பார்க்கும் தகவல் வந்ததால் அவ மாமியார் வீட்டில் நியாயம் கேட்பதற்காக போனாள். அங்க என்ன நடந்ததோ தெரியல, இப்டி பொணமா கொண்டாந்து போட்டுட் டாங்கய்யா'' என்று கதறினார். 

அங்கிருந்த உறவினர், "நியாயம் கேட்பதற்காக சென்ற பிரியதர்ஷினியின் பேச்சு எடுபடாத நிலையில், தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட பிரியதர்ஷினியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்து போய்ப் பார்த்தபோது, சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி இறந்துவிட்டார்'' என் றார்

Advertisment

போலீசார் தரப்பி லோ, "ரூபன்ராஜ், இலங்கேஸ்வரன், தனபாக்கியம் ஆகி யோர்மீது வழக்குப் பதிவு செய்துவிட் டோம். சட்டப்படி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தவுடன் மற்ற நடவடிகைகளை எடுப்போம்'' என்றனர்.

பிரியதர்ஷினியின் வழக்கறிஞர் கார்த்திக், "வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி தற்கொலை செய்ய வைத்துள்ளனர். அ.தி.மு.க. பிரமுகரான இலங்கேஸ்வரனுக்கு, இராஜன் செல்லப்பா பின்புலம் இருப்பதால் செல்லூர் காவல் நிலையத்தில், பெரும் போராட்டத்துக்கு பின்பே  எஃப்.ஐ.ஆர். போட்டார்கள். தற்போதுவரை ஆர்.டி.ஓ. விசாரணை என்று இழுத்தடிக்கிறார்கள். செல்லூர் ராஜூவும் அந்த குடும்பத்திற்கு சப்போர்ட்டாக இருப்பதாக தகவல் வருகிறது. இதுதொடர்பாக வழக்கு தொடர வுள்ளோம்'' என்றார்.

-அண்ணல்

_________________
அடி உதை! 

-கண்டுகொள்ளாத கோவை காவல்துறை!

"என்னுடைய கணவர் 10க்கும் மேற்பட்ட ஆட்களுடன் சேர்ந்து அனுமதியில்லாமல் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தாயையும், தம்பியையும் அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார். போதாக்குறைக்கு கணவரின் தாயாரும், தந்தை யும் எங்கள் வீட்டினுள்ளேயே உட்கார்ந்து கொண்டு வெளியேற மறுக்கின்றனர்'' என பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு கண்ணீருடன் நிர்க்கதியாய் நின்றார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நிர்மலா.

Advertisment

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த நீலமேகம் -உமாராணி தம்பதியின ரின் மகனான சற்குணனுக்கும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த செல்வம்- ஜெயந்தி தம்பதியரின் மகளான நிர்மலா விற்கும், 2018ஆம் ஆண்டு குன்றக் குடி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 75 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் பெறுமானமுள்ள வெள்ளிப் பொருட்களும் வரதட்சணை யாகக் கொடுக்கப்பட்டிருக் கின்றது. அதற்கடுத்து, பிசினஸ் செய்வதற்கு பணம் வேண்டு மென்று சற்குணன் தரப்பிலிருந்து தொல்லை செய்திருக்கிறார்கள். பேனாக்கத்தியால் கையை அறுத்துக் கொள்வேன் என்றெல்லாம் மிரட்டி யும் நிர்மலாவிடம் கேட்டிருக்கிறார் கள். இப்படியான சூழலில், நிர்மலாவின் தந்தை செல்வம் மரணித்துள் ளார். நிர்மலாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தைûயயும், நிர்மலாவையும் பார்த்து அழைக்கக்கூட அவரது கணவன் வரவில்லை. இந்த நிலையில், நிர்மலா விற்கு போன் செய்த சற்குணன், "என்னு டைய நண்பர் நிவாஸ் என்னுடைய பிசினஸுக்கு உதவியாக இருப்பார். நீ அவருடன் நெருக்கமாக பேசு'' எனப் பேச, அது பூதாகரமாக வெடித்தது. நிர்மலாவை அணு அணுவாகச் சித்ரவதை செய்வதாகக்கூறி சைக்கோத்தனமாக வாட்ஸ்ஆப் பதிவுகளை அனுப்பியுள்ளார் சற்குணன்.

"சற்குணனின் சைக்கோதனத்தால் பிரச்சனை பெரிதாக, விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினான் அவன். பெண் குழந்தை பிறந்துள்ளதால் எப்படி யும் சேர்ந்துவிடுவான் என்கிற நம்பிக்கையில், குழந்தையுடன் கோவைக்கு சென்றார் நிர்மலா. ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது ஜெயந்தியும், தம்பி ஹரிஹரனும் பீளமேட்டில் குடியேறி நிர்மலாவை பார்த்துக்கொள்கிறார் கள். சமீபத்தில் பள்ளியில் குழந்தை யை சேர்த்துவிட்டனர். இரு தரப்பு பெரியவர்களும் இருவரும் இணைந்து வாழ பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தும் பலனில்லை. இந்நிலையில், நிர்மலாவின் வீட்டிற்குள் புகுந்து அடிதடி நடத்தியுள்ளனர் சற்குணன் குடும்பத்தினர். புகாரளித்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது'' என்கிறார் நிர்மலாவின் உறவினர்.

நிர்மலாவோ, "காலையிலிருந்து இங்கு இருக்கிறேன். வீட்டினுள் வந்து அடித்தது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறது போலீஸ். நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங் கள் என்கிறது. 75 பவுன் தங்க நகை கள், ரூ.5 லட்சம் பெறுமானமுள்ள வெள்ளிப் பொருட்களுடன் வாழ வந்தேன். ஆனால் இங்கு கிடைத்த தோ அடி, உதைதான்'' என்றார் அவர். இது ரிதன்யாக்கள் காலம் போலும். உழைத்து சம்பாதித்து குடும்பம் நடத்தாமல், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது எப்போதுதான் மாறுமோ!

-நாகேந்திரன்